ஈஷா யோக மையத்தில் சத்குரு தரிசனம்
- இயற்கையான மந்த தன்மையை வெல்வது
24 டிசம்பர் 2022
இந்த ஆழமிக்க உரையில், கொடுக்கல்-வாங்கல் எனும் பரிவர்த்தனைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு பரிமாணத்தை வளர்த்துக்கொள்வதன் முக்கியத்துவத்தை சத்குரு எடுத்துரைத்தார். மார்கழி மாதத்தின் தனித்துவத்தை எடுத்துரைத்த சத்குரு, சூரியனின் கதிர்கள் வடக்கு அரைக்கோளத்தை நோக்கி திரும்பும் இந்த காலத்தில் ஈர்ப்புவிசை பூமியில் கீழ்நோக்கி செயல்படுவதால் இயற்கையாகவே ஒரு மந்தநிலை ஏற்படுவதைப் பற்றியும், அதனைக் கடந்து செல்வதற்கான வழிமுறைகளையும் சத்குரு விளக்கினார்.

ஸ்ரீ வெங்கடேஷ்வரா பக்தி சேனலுக்கு சத்குருவின் பேட்டி
- காலம் கடந்த நிலையும் ஆதியோகியும்
25 டிசம்பர் 2022
முன்னணி தெலுங்கு பக்தி சேனலான SVBC-ன் ஊடக அன்பர்கள் ஈஷா யோக மையத்திற்கு வருகை தந்து சத்குருவை பேட்டி கண்டனர். ஒரு குருவின் பங்களிப்பு, ஆதியோகி எவ்வாறு முதல் குருவானார் மற்றும் வாழ்வின் உள்நிலை அம்சங்களுக்கு ஆதியோகி வழங்கிய தொழில்நுட்பங்கள் மூலம் அவர் எவ்வாறு எதிர்காலத்தில் ஒரு சாத்தியமாக இருப்பார் போன்ற பல்வேறு அம்சங்களை இந்த நேர்காணல் உள்ளடக்கியதாக அமைந்தது.

சத்குருவுடன் பிரசூன் ஜோஷி கலந்துரையாடல் - விழிப்புணர்விலிருந்து மாயாஜாலத்திற்கு
30 டிசம்பர் 2022
சிறந்த கவிஞரும் பாடலாசிரியருமான பிரசூன் ஜோஷி அவர்கள் விழிப்புணர்வு, பிரதிஷ்டை, பூதசுத்தி மற்றும் வாழ்க்கையின் மாயாஜாலத்தை தர்க்க அறிவில் பொருத்த முயற்சிக்கும் முட்டாள்தனம் ஆகியவற்றைப் பற்றி சத்குருவுடன் கலந்துரையாடினார். மேலும் இந்த உரையாடலில் குவாண்டம் பிணைப்பு, நிஷ்கர்மா மற்றும் தான் உத்தரகாண்டில் சந்தித்த துறவி பற்றியும் பிரசூன் ஜோஷி கேள்விகளை முன்வைத்தார்.

சத்குருவுடன் புத்தாண்டு சத்சங்கம் - ஒரு நல்ல தொடக்கம்
31 டிசம்பர் 2022
ஈஷா யோக மையத்தின் தன்னார்வத் தொண்டர்கள், சாதனா பாதை பங்கேற்பாளர்கள், ஹடயோகா ஆசிரியர் பயிற்சியாளர்கள், விருந்தினர்கள் மற்றும் ஆசிரமவாசிகள் என ஆயிரக்கணக்கானோர், புத்தாண்டுக்கு முந்தைய நாள் சத்குருவின் முன்னிலையில் 2023ம் ஆண்டை தொடங்குவதற்கு ஒன்று கூடினர். காலத்தின் தன்மை பற்றியும், ஒவ்வொரு கணத்தையும் ஏன் ஒரு கொண்டாட்டமாக ஆக்க வேண்டும் எனவும் உற்சாகமூட்டும் விதத்தில் சத்குரு பேசினார். மேலும், 2023ம் ஆண்டு பிரதிஷ்டைகளின் ஆண்டாக இருக்கப் போகிறது என்றும், இந்த வாய்ப்பை மக்கள் எவ்வாறு பயன்படுத்திக்கொள்ள முடியும் என்றும் அவர் விளக்கினார்.

ஈஷா யோக மையத்தில் மீடியா ரிட்ரீட் - அடுத்த 10 ஆண்டுகளின் மாற்றங்கள் பற்றி…
4–5 ஜனவரி 2023
ஊடகவியலாளர்களுக்காக இரண்டு நாள் சிறப்பு Retreat நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சத்குரு குழுவினருடன் உரையாற்றியபோது, இந்தியாவிற்கான புதிய வாய்ப்புகளுக்கான மகத்தான சாத்தியக்கூறுகள் இருப்பதையும், வரும் பத்தாண்டுகளில் ஏற்படக்கூடிய குறிப்பிடத்தக்க மாற்றங்கள் குறித்தும் பேசினார். பத்திரிகையாளர்கள் நிரம்பியிருந்த அந்த அறையிலிருந்து எதிர்பார்த்தது போலவே, நிறைய கேள்விகள் முன்வைக்கப்பட்டன! தெளிவுடனும் ஈடுபாட்டுடனும் பதிலளித்த சத்குரு, பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தார்.

சமூக ஊடகவியலாளர்களுக்கான Retreat நிகழ்ச்சி - விழிப்புணர்வுடன் உலகில் தாக்கம் ஏற்படுத்துதல்
6–7 ஜனவரி 2023
இரண்டு நாள் யோகா Retreat நிகழ்ச்சிக்காக ஈஷா யோக மையத்திற்கு வந்திருந்த உலகளாவிய செல்வாக்கு மிக்க சமூக ஊடகவியலாளர்கள் சத்குருவைச் சந்தித்தனர். உலகை மேம்படுத்துவதில் சமூக ஊடகங்களில் செல்வாக்கு மிக்கவர்களின் திறன் எத்தகையது என்பதைப் பற்றி அவர் பேசினார். தனிநபர்கள் உலகில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு, பாரம்பரிய பின்னணியோ அல்லது அங்கீகாரமோ தேவையில்லாத சூழல் வரலாற்றில் தனித்துவமான வாய்ப்பாக இப்போது உருவாகியிருப்பதாக சத்குரு குறிப்பிட்டார். குணநலன்களைக் கட்டமைத்தல், தியானத்தின் போது படைப்பாற்றல் மிக்க யோசனைகளைப் பெறுதல் மற்றும் முழுமையாய் இருப்பதன் அர்த்தம் ஆகிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

மும்பையில் சத்குருவுடன் சடக் சுரக்ஷா அபியான் - சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்
9 ஜனவரி 2023
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறையின் மாண்புமிகு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அவர்கள், மூத்த நடிகர் அமிதாப் பச்சன் அவர்கள்; கவிஞர் மற்றும் சந்தைப்படுத்தல் நிபுணர் பிரசூன் ஜோஷி; SaveLIFE அறக்கட்டளையின் CEO, பியூஷ் திவாரி ஆகியோருடன் சாலைப் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த மும்பையில் சத்குருவும் இணைந்தார். சடக் சுரக்ஷா அபியானின் (சாலை பாதுகாப்பு பிரச்சாரம்) நோக்கத்தையும் முயற்சியையும் பாராட்டிய சத்குரு, இந்திய சாலைகளை பாதுகாப்பானதாக மாற்ற குடிமக்களும் அரசாங்கமும் எவ்விதமாக நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பதைப் பற்றி பேசினார்.

IAS அதிகாரிகளுக்கான தலைமைப்பண்பு நிகழ்ச்சி - விழிப்புணர்வுடன் தேசத்தை ஆட்சி செய்தல்
16–18 ஜனவரி 2023
சிறப்பு தலைமைப்பண்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக, ஈஷா யோக மையத்திற்கு வருகை தந்த இந்திய ஆட்சிப் பணியின் உயர் அதிகாரிகளுடன் சத்குரு நேரடியாக உரையாடினார். பூமியில் மனிதனை மிகவும் ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக மாற்றுவது, கவனம் செலுத்துவதன் முக்கியத்துவம் மற்றும் சவாலான சூழ்நிலைகளில் விழிப்புணர்வுடன் செயலாற்றுவதன் முக்கியத்துவம் ஆகியவற்றைப் பற்றி அவர் பேசினார்.