நடப்புகள்

பெங்களூரு சத்குரு சந்நிதியில் யோகேஷ்வர லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார் சத்குரு

சங்கமத்தின் அளப்பரிய ஆற்றல்

பெங்களூரு சத்குரு சந்நிதியில் சத்குரு நிகழ்த்திய யோகேஷ்வர லிங்க பிரதிஷ்டையில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்ற 12,000க்கும் மேற்பட்டோர் ஆதியோகியின் அருளில் திளைத்தனர்.
15 ஜனவரி 2023 அன்று காலையில் பிரதிஷ்டை நடந்தது.


பெங்களூரின் அடையாளச் சின்னமான நந்தி மலைகளுக்கிடையே அமைந்திருக்கும் சத்குரு சந்நிதியில் சமீபத்தில் நாகா பிரதிஷ்டை செய்யப்பட்டது. அக்டோபர் 2022 தொடக்கத்தில் நடந்த நாகா பிரதிஷ்டையில் உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 16,000 க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர். இந்த பிரதிஷ்டையின் மூன்று மணிநேர செயல்முறை பங்கேற்பாளர்களை ஆழமிக்க பரவசநிலைக்கு கொண்டு சென்றது. யோகேஷ்வர லிங்க பிரதிஷ்டைக்கான தேதியை சத்குரு அறிவித்தபோது, ​​மீண்டும் ஆயிரக்கணக்கானோர் இந்த மறைஞான நிகழ்வை அனுபவித்திட ஆர்வம் கொண்டதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

உச்சம் தொட்ட உற்சாகம்!

அந்த குளிர்ந்த குளிர்கால காலை வேளையில் மெல்லிய காற்றும் சில்லென்று வீச, காத்திருந்த பக்தர்கள் தங்கள் சால்வைகளை இன்னும் கொஞ்சம் இறுக்கமாக சுற்றிக்கொண்டனர். கம்பீரமான 112 அடி ஆதியோகியின் முன்பாக வெண்ணிற ஆடை அணிந்திருந்த பங்கேற்பாளர்கள் சம்மணமிட்டு அமர்ந்திருந்தனர். ஆதியோகியின் அற்புத அருள் முகம் காண்பவர்களை பிரமிப்பில் ஆழ்த்தியது.

பங்கேற்பாளர்கள் சக்திவாய்ந்த "யோக யோக யோகேஷ்வராய" மந்திரத்தை தொடர்ந்து உச்சரிக்க உச்சரிக்க, எதிர்பார்ப்பும் உற்சாகமும் உச்சத்தைத் தொட்டன. சத்குரு வருகை தந்ததும், காலம் அப்படியே உறைந்துவிட்டதைப் போல இருந்தது. அருளை மிக சாதாரணமாக வெளிப்படுத்தியபடி சத்குரு நகர்ந்தார். அவரது கண்கள் கூட்டத்தைத் தீவிரத்துடன்  ஊடுறுவிப் பார்த்தன. அவரது இருப்புநிலை தீர்க்கமாக இருந்தது. அவர் இருக்கையில் அமர்ந்ததும் ஒரு ஆழமிக்க மௌனம் ஆட்கொண்டது.

நிகழ்ந்தேறிய ஒரு மறைஞான செயல்முறை

ஒரு பங்கேற்பாளர் பகிர்ந்துகொண்டார், “சத்குரு வந்ததை நான் கவனித்த முதல் கணம், என் தோலில் ஒருவித அதிர்வு இருந்தது. என்னால் அதை விளக்க இயலாது, ஆனால் அது மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்தது.”

பிரதிஷ்டை செய்யப்பட்ட வடிவங்களை உருவாக்குவதன் முக்கியத்துவத்தைப் பற்றியும், ஒரு பிரதிஷ்டை செய்யப்பட்ட இடம் எவ்வாறு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துகிறது என்பதையும் சத்குரு பேசினார். பின்னர் அவர் அத்தகைய ஓர் ஆழமிக்க சக்திவாய்ந்த செயல்முறையை நிகழ்த்தினார், அது பலரை பரவசக் கண்ணீரில் ஆழ்த்தியது. பங்கேற்பாளர்கள் பிரதிஷ்டை செயல்முறையில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தியதும் விதிமுறைகளைப் பின்பற்றியதும் காண்பதற்கு இனிதாக இருந்தது.

பங்கேற்பாளர்களுக்கு சத்குரு வழங்கிய எளிய வழிமுறைகள் தவிர்த்து, வில்வ இலைகள், புனித சாம்பல், மஞ்சள், குங்குமம் மற்றும் அடிப்படையான  பஞ்சபூதங்கள் உள்ளடக்கிய பல்வேறு புனிதப் பொருட்களைக் கொண்டு யோகேஷ்வர லிங்கத்தை பிரதிஷ்டை செய்வதற்கான விரிவான செயல்முறையை சத்குரு மேற்கொண்டார்.

இத்தகைய ஒரு மறைஞான செயல்முறையை வார்த்தைகளில் விவரிக்க முயற்சிப்பது இயலாதது எனினும், சத்குரு அங்கு செய்த நுட்பமான செயல்முறையை சாதாரணமாகக் கருதவும் முடியாது. சத்குரு தனது உயிர்சக்தியை பிரதிஷ்டைக்கு அர்ப்பணமாக வழங்கியதால் அவரது சக்தி முழுவதும் வடிந்திருப்பதை ஒரு நேரத்தில் காண முடிந்தது; ஆனால் தளராத அர்ப்பணிப்புடனும், அசையாத கவனத்துடனும், சத்குரு பிரதிஷ்டையை செய்து முடித்தார். உதயமான சூரியனின் கதிர்கள் ஆதியோகியின் திருமுகத்தில் பிரகாசித்ததால், அழகும் அருளும் சேர்ந்து ஜொலிப்பது போல் தோன்றியது.

பங்கேற்பாளர்கள் பிரதிஷ்டையை உணர்ந்த விதம்

ஒரு பங்கேற்பாளர் கூறினார், “நான் நேற்றிலிருந்து இங்கே இருக்கிறேன். ஆதியோகி நேற்று இருந்ததை விட இப்போது இருக்கும் விதத்தில் ஒரு மாற்றத்தைக் காண முடிகிறது. என்னால் அதை சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை, ஆனால் நேற்று நான் பார்த்தது ஒரு சிற்பம் போலவும், இன்று நான் பார்ப்பது சிவனைப் போலவும் தோன்றுகிறது.

பிரதிஷ்டை முடிந்ததும், சத்குரு கூட்டத்தினூடாக நடந்து சென்றார், அவரது அருள் இருப்பு பங்கேற்பாளர்களிடம் உணர்ச்சி அலையை எழச் செய்தது. அந்த மகத்தான தருணத்தின் அற்புதத்தை அவர்கள் உணர்ந்தபோது, ​​இந்த ஆழமான செயல்முறையில் பங்குபெறும் வாய்ப்பு கிடைத்ததற்காக அவர்களின் இதயங்கள் நன்றியுணர்ச்சியால் நிரம்பி வழிந்தன.

மற்றொரு பங்கேற்பாளர் தனது அனுபவத்தை சுருக்கமாக இப்படிக் கூறினார்: "இது என்னை மாற்றிவிட்டது என்று நான் நினைக்கிறேன். ஒருவேளை எதிர்காலத்தில், இங்கு சரியாக என்ன நடந்தது என்பதை என்னால் வெளிப்படுத்த முடியுமென்று நினைக்கிறேன்; இப்போதைக்கு இது ஒரு மறைஞானம்."

112 அடி ஆதியோகி சிலை திறப்புவிழா

பிரதிஷ்டை முடிந்ததும், தன்னார்வலர்கள் கூடுதல் தீவிரத்துடன் உற்சாகமாகக் காணப்பட்டனர். பல பங்கேற்பாளர்கள் மாலை நிகழ்வுக்கான தயாரிப்புகளில் தங்கள் உதவிகளை வழங்கினர். சூரியன் மறையும் அந்தி நேரத்தில், 2,00,000 க்கும் மேற்பட்ட மக்கள் ஆதியோகியின் பிரம்மாண்டமான திறப்பு விழாவைக் காண குவிந்திருந்தனர்.

நிகழ்ச்சியில் மாண்புமிகு கர்நாடக முதல்வர் திரு.பசவராஜ் பொம்மை, மாண்புமிகு மாநில சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர். கே.சுதாகர், மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் B. C. நாகேஷ் ஆகியோர் கலந்துகொண்டு, ஆதியோகி திவ்ய தரிசனத்தைக் கண்டுகளித்தனர்.

பிரபல கர்நாடக நாட்டுப்புற நடன வடிவங்களான கம்சலே மற்றும் டொல்லு குனிதா மற்றும் கேரள பாரம்பரிய நெருப்பு நடனமான தெய்யம் ஆகியவற்றின் கண்கவர் நிகழ்ச்சிகளையும் அவர்கள் கண்டுகளித்தனர்.

Saudis and Expats Converge to Hear Sadhguru Speak about Save Soil (12 May)

Sadhguru received a very warm welcome in Riyadh. He addressed an enthusiastic and highly engaged public gathering organized by the Embassy of India, Riyadh, answering questions of all kinds, and of course – talking about Soil.

ராதே ஜக்கி அவர்களும் ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்களும் இணைந்து மண் காப்போம் இயக்கத்தை கருப்பொருளாகக் கொண்டு கலைநயமிக்க ஒரு பரதநாட்டிய நிகழ்ச்சியை அரங்கேற்றினர். அவர்களின் கலைநயமும் திறமையும் பார்ப்பவர்களை வியக்க வைத்தது.

பின்னர் சத்குரு மண் காப்போம் இயக்கத்தின் முக்கியத்துவத்தையும், 100 நாட்கள் மண் காப்போம் பயணத்தின்போது கிடைத்த ஆதரவு எவ்வாறு வளர்ந்து வருகிறது என்பதையும் எடுத்துரைத்தார். அவர் பின்னர், இவ்வியக்கத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பிரான்சிலிருந்து பெங்களூரு வரை கிட்டத்தட்ட 8,000 கிமீ சைக்கிள் ஓட்டிய நத்தாலியை அறிமுகப்படுத்தினார்!

அந்த மயக்கும் மாலைப் பொழுதை வர்ணித்து சுருக்கமாக சத்குரு சொன்னது:

வாழ்க்கைக்கு ஒரு விழிப்புணர்வான பதில்வினையாக மாறுவதற்கும், விழிப்புணர்வான உலகை உருவாக்குவதற்குமான அனைத்து சாத்தியங்களையும் ஆதியோகி வழங்குகிறார். உலகில் பொறுப்புணர்வுடன் பதில்வினை ஆற்றக்கூடிய ஒரு தீர்வாக மாற முயற்சிப்பவர்களுக்கு எதிர்காலம் சொந்தமானது. அந்த மகிழ்ச்சியையும் ஆதியோகியின் அருளையும் நீங்கள் உணர்வீர்களாக.

அன்பும் ஆசியும்,

சத்குரு