ஈஷா சமையல்

க்ரீமி பரங்கிக்காய் சூப்

தேவையான பொருட்கள்

1 பெரிய பரங்கிக்காய்

4 டேபுள்ஸ்பூன் ஆலிவ் ஆயில்

1 சிறிய துண்டு இஞ்சி

1 டீஸ்பூன் பொடித்த தனியா

1 டீஸ்பூன் பொடித்த சீரகம்

1 டீஸ்பூன் மஞ்சள் பொடி

2 கப் காய்கறி வேகவைத்த தண்ணீர்

1-2 டேபுள்ஸ்பூன் மேப்பிள் சிரப் அல்லது வெல்லம்

(சுவைக்கேற்ப)

1 கப் தேங்காய் பால் அல்லது கெட்டியான க்ரீம்

உப்பு மற்றும் மிளகு தூள் (தேவைக்கேற்ப)

அலங்கரிக்க:

¼ கப் பச்சை பரங்கிக்காய் விதைகள்

புதிய க்ரீம்

1 கைப்பிடி கொத்தமல்லி இலை


செய்முறை:

  1. பரங்கிக்காயை வெட்டி, அதன் விதைகளை எடுத்துவிட்டு, தோலினை நீக்கவும். பின்னர் சிறு துண்டுகளாக நறுக்கவும். ஒரு சிறு துண்டு இஞ்சியை தோலினை நீக்கிவிட்டு, துருவிக்கொள்ளவும்.
  2. காய்கறி வேகவைத்து தண்ணியை எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.
  3. துருவிய இஞ்சியை ½ டீஸ்பூன் ஆலிவ் ஆயிலில் வதக்கி தனியாக வைக்கவும்.
  4. மீதமுள்ள ஆலிவ் ஆயிலை ஒரு கனமான வாணலியில் ஊற்றி மிதமான தீயில் சூடாக்கவும்.
  5. நறுக்கி வைத்துள்ள பரங்கிக்காய் துண்டுகளை அதில் போட்டு ஒரு 5 நிமிடங்களுக்கு வதக்கிக்கொள்ளவும்.
  6. இதில் தனியா, சீரகம், மஞ்சள் தூள் மற்றும் இஞ்சி சேர்த்து இன்னும் 2 நிமிடங்களுக்கு வதக்கவும்.
  7. காய்கறி தண்ணியை விட்டு, மேப்பிள் சிரப் அல்லது வெல்லம் சேர்த்து கொதிக்கவிடவும்.
  8. பரங்கிக்காய் நன்றாக வேகும் வரைக்கும் அல்லது ஒரு 20 நிமிடங்களுக்கு மிதமான தீயில் வைக்கவும்.
  9. தீயிலிருந்து எடுத்து, அதனை ஆற வைக்கவும்.
  10. பிறகு அதனை ஒரு ப்லெண்டரை (மத்து) உபயோகித்து நன்றாக மசித்துக் கொள்ளவும்.
  11. தேங்காய் பால் அல்லது க்ரீமை சேர்த்து கலக்கவும். தேவைக்கேற்ப மிளகும், உப்பும் சேர்க்கவும்.
  12. திரும்பவும் ஒருமுறை, மிதமான சூட்டில், அவ்வப்போது கிளறி, சூப்பை சூடாக்கவும்.
  13. ஒரு வாணலியில் பரங்கி விதைகளை நல்ல வாசனை வரும் வரை வறுத்தெடுத்து கொள்ளவும்.
  14. பரங்கி விதைகள், கொத்தமல்லி இலை மற்றும் க்ரீம் சேர்த்து சூப்பை அலங்கரிக்கவும். சூடாக பரிமாறவும்.