வாழ்வின் மர்மங்கள்

காசி: இந்தப் புராதன நகரின் சக்தி கட்டமைப்பு இன்னமும் உறுதியாக உள்ளதா?

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கும் மேலாக புனித நகரமான காசி, பல முறைகள் அழிக்கப்பட்டது. ஆனால் காசி இன்னமும் சக்திரீதியாக உறுதியுடன் இருக்கிறதா? அதனை மறுகட்டமைப்பு செய்யமுடியுமா? காசியில் ஒரு சத்சங்கத்தின்போது, சத்குரு ஆச்சரியகரமான ஒன்றை நம்மிடம் கூறுகிறார் – எது மக்களுக்கு முக்கியமாக இருக்கிறதோ, அது காசிக்கான முக்கியத் தேவை அல்ல.

கேள்வியாளர்: நமஸ்காரம், சத்குரு. எனது கேள்வி காசியைக் குறித்தது. காசியின் சக்தி உடல் நிலத்திற்கு மேல் இருப்பதாக நீங்கள் கூறினீர்கள். இதுவரை நிகழ்ந்துள்ள குறிப்பிடத்தக்க அழிவுகள் காசியின் சக்தி உடல் மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா? காசியை மறுகட்டமைப்பு செய்ய நீங்கள் திட்டமிடுகிறீர்களா?

சாரம் கட்டுவதற்கும், சக்தி கட்டுமானத்துக்கும் இடையில் வேறுபடுத்துதல்

சத்குரு: இல்லை, மேலும் காசியை மறுகட்டமைக்கத் தேவையில்லை. அதைபோலவே, இன்றைக்கு நீங்கள் பார்க்கும் தியானலிங்கத்தின் புறத்தன்மையான கட்டமைப்பும் உண்மையில் தேவையில்லை. நாம் அதை நீக்கியிருக்கலாம் ஏனென்றால் அது ஒரு சாரமாகத்தான் பயன்படுத்தப்பட்டது. ஒரு கட்டடத்தைக் கட்டுவதற்கு, சாரக்கட்டுமானத்தை பயன்படுத்துகின்றனர். கட்டிடம் போதிய வலிமை அடைந்துவிட்டால் , அவர்கள் அதை அப்புறப்படுத்துகின்றனர். சாரக் கட்டுமானத்தை வைத்துக்கொண்டே இருந்தால், நீங்கள் கட்டிடத்தைப் பயன்படுத்த முடியாது.

கட்டமைப்பை நீங்கள் பலப்படுத்தும் தருணத்தில்தான் சாரக்கட்டுமானம் தேவைப்படுகிறது. கட்டிடம் உறுதிப்பட்டதும், அதை நீங்கள் அகற்றிவிடலாம். ஒரு கட்டிடத்தைப் பொறுத்தவரை, நாம் அதை அகற்றுவது ஏனென்றால், அந்தக் கட்டிடத்தை நாம் திறனுடன் பயன்படுத்துவதற்கு சாரக்கட்டுமானம் தடையாக இருக்கும். ஆனால் இந்த விதமான சக்தி கட்டமைப்புகள் விஷயத்தில், நாம் சாரக்கட்டுமானத்தை அகற்றுவதில்லை ஏனென்றால் பெரும்பாலான மக்களும் அவர்களது காட்சிப் புரிந்துணர்தலின் வழி செல்கின்றனர். அவர்களால் அங்கே வெறுமனே அமர்ந்து, அதை உணர முடியாது; அவர்கள் பார்ப்பதற்கு ஏதோஒன்று தேவைப்படுகிறது. அங்கே கலாச்சார நிகழ்வுகள், பாரம்பரிய செயல்முறைகள், மற்றும் பல விஷயங்கள்; இல்லையென்றால், அவர்கள் ஒரு கோவிலுக்குள் வந்து, அதன் உள்ளே ஒன்றுமில்லை என்றால், “ அது எங்கே உள்ளது?” என்று திகைப்பார்கள்.

இந்த விதமான சக்தி கட்டமைப்புகள் விஷயத்தில், நாம் சாரக்கட்டுமானத்தை அகற்றுவதில்லை ஏனென்றால் பெரும்பாலான மக்களும் அவர்களது காட்சிப் புரிந்துணர்தலின் வழி செல்கின்றனர்.

சாரக்கட்டுமானத்தை நாம் அகற்றுவதில்லை ஏனென்றால் பெருவாரியான மனிதர்களுக்கு, அவர்கள் காண்பதுதான் புலன் புரிந்துணர்வில் (sense perception) அதிகமாக ஆதிக்கம் செலுத்துகிறது மற்ற நான்கு புலன்களும் குறிப்பிடத்தக்க அளவு குறைவாகவே உள்ளது. ஆனால் உங்களையே நீங்கள் உண்மையாக, உணர்திறன் உள்ளவராக்கினால் – நீங்கள் யோகியானால் – தொடு உணர்வுதான் மிகப்பெரிய புலன் புரிந்துணர்வாக இருக்கிறது.

கவனக்குவிப்பில் மாற்றம் ஏற்படுத்துவதன் மூலம், உங்கள் புரிந்துணர்தலை மேம்படுத்துவது

உங்கள் காட்சிப்புலனை நீங்கள் பயன்படுத்தும்போது, உங்களுக்கு எல்லாவிதமான மாறுபட்ட பிம்பங்களும் கிடைக்கின்றன. ஆனால் நீங்கள் உங்கள் கண்களை மூடினால், நீங்கள் பலவற்றையும் தொட்டுப்பார்க்கிறீர்கள் – பல வழிகளிலும் வாழ்க்கை உங்களைத் தொடுகிறது. உங்கள் சக்திகள் அதிக தீவிரமடையும்பொழுது, நீங்கள் பயன்படுத்தும் வெவ்வேறு புலன்களின் விகிதமும் அதற்குத்தக்கவாறு மாற்றமடைகிறது. தற்போது, உங்கள் பார்வைப்புலன் 65% இருக்கலாம், ஆனால் கண்களை மூடினால் அது மாறத்தொடங்கி, தொடு புலன் உணர்வு 65-70% ஆகலாம். அப்போது நீங்கள் எதையும் பார்க்கவேண்டியிருக்காது. நீங்கள் கண்களை மூடிக்கொண்டால், உங்களுக்கு முன்பாக கைகளை நீட்டினாலே, இங்கே யார் இருக்கின்றனர் அல்லது இல்லை என்பதை அறிந்துகொள்ள முடியும்.

இப்போது, என்னுடைய நுகர்ச்சி அல்லது மோப்பசக்தி மண்டலத்தை ஓரளவுக்கு நான் பாழ்படுத்திவிட்டேன், ஆனால் என் வாழ்வின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், நான் ஒரு கூடத்துக்குள் நடந்தால், அங்கே யார் இருக்கிறார்கள் என்பதை நான் அறிந்துவிடுவேன் – அவர்கள் ஒரு குறிப்பிட்ட வாசனைத் திரவியம் அல்லது அதைப்போன்ற எதையோ பயன்படுத்தியதால் அல்ல. மேலும், இரவில் காட்டுக்குள் நடப்பதற்கு நான் எப்போதும் விரும்புவேன் – டார்ச் விளக்கு இல்லாமல், ஒரு காட்டு விலங்கைப்போல் மோப்பத்தினால் மட்டும் நடந்துசெல்வேன்.

விலங்குகள் பெரும்பாலும் அவைகளின் வாழ்வை மோப்பத்தினால் உணர்கின்றன. மாமிச உண்ணிகளுக்கு, ஐந்து புலன் உணர்வுகளுள், மோப்ப உணர்வு மிக வலிமையாகவும், முக்கியமாகவும் உள்ளது. அவைகளுக்கு  மற்ற புலன்புரிதல்கள் அதிகம் இல்லை. குற்றவாளிகள், போதை வஸ்துக்களின் தடயத்தைத் துப்பு துலக்குவதற்குக்கூட நாய்கள் பயன்படுத்தப்படுவதன் காரணம் என்னவென்றால், அவைகள் மோப்பத்தினால் பொருட்களைக் கண்டுபிடிக்கின்றன.

நீங்கள் கண்களால் பார்ப்பது நிஜம் அல்ல

ஒரு யோகிக்கு, பார்ப்பது என்பது நம்புவது அல்ல ஏனென்றால் பார்ப்பது மிகவும் ஏமாற்றக்கூடியது. உங்களை நான் என் கண்களால் மட்டும் பார்த்துவிட்டு, “ ஓ, இவள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறாள். எல்லா வரவேற்பாளர்களும், விமானப் பணிப்பெண்டிரும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தோன்றுகிறது”, என்று நான் நினைத்துக்கொள்ளலாம். ஆனால் அது அப்படி இல்லை. நீங்கள் உங்கள் கண்களை மூடி, உணர்ந்தால்தான், யார் எப்படி இருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள். கண்களால் பார்ப்பது மிகவும் ஏமாற்றக்கூடியது – கண்களால் பார்ப்பதை மட்டும் நம்பினால், உலகத்தில் இருக்கும் எதுவும் உங்களை முட்டாளாக்கிவிட முடியும். எது அற்புதமாகத் தோன்றுகிறதோ, அது அவ்வளவு அற்புதமாக இல்லாமல் இருக்கலாம். ஏனென்றால் நீங்கள் பார்ப்பதெல்லாமே, பிம்பத்தை உருவாக்கும் ஒரு பிரதிபலிப்பு மட்டும்தான். அந்த பிரதிபலிப்பை, உங்கள் மனதில் விரும்பியவாறு அலசிப்பிரிக்க முடியும் என்பதுடன், அது பொருட்களின் உண்மையான இயல்பாக நிச்சயமாக இருப்பதில்லை.

நீங்கள் உண்மையாகவே ஏதோ ஒன்றைப் புரிந்துணர விரும்பினால், உங்கள் கண்களை நீங்கள் மூடிக்கொள்ளலாம். அதைப்பற்றிய உணர்வு உங்களுக்கு இல்லாமலிருக்கலாம், ஆனால் உள்ளே எங்கோ ஆழமாக, உங்கள் கண்களை மூடுவதனால் நீங்கள் சற்றே கூடுதலாகப் பார்க்கலாம் என்று உங்களுக்கு ஒரு உள்ளுணர்வு கூறுகிறது. உங்கள் கண்களை ஏன் மூடிக்கொள்ளலாம் என்பதற்கான மற்றொரு காரணம், பார்க்கும்போது கவனச்சிதறல்கள் இருப்பதில்லை. அதனால் உங்கள் எண்ணங்களை நீங்கள் சிறப்பாக ஒருங்கிணைக்கமுடிகிறது. உங்களின் மொத்த புலன் உணர்வுப்புரிதலில், 65-70% தொடு உணர்வாக மாறிவிட்டால், பிறகு உங்களை ஒருவரும் தொடவேண்டியதில்லை – வெறுமனே உங்களது இருப்பினால், இங்கு நீங்கள் எல்லாவற்றினாலும் தொடப்படுவீர்கள்.

ஒரு யோகிக்கு, பார்ப்பது என்பது நம்புவது அல்ல, ஏனென்றால் பார்ப்பது மிகவும் ஏமாற்றக்கூடியது.

நீங்கள் ஒரு கூடத்தில் 1000 பேருடன் அமர்ந்திருப்பதாக வைத்துக்கொள்வோம். குறைந்தபட்சம் அவர்களது சுவாசம் உங்களைத் தொட்டுக்கொண்டிருக்க வேண்டும், ஆனால் நீங்கள் அது குறித்த உணர்வில் இல்லை. வாழ்வின் குறிப்பிட்ட அம்சங்களைப் புரிந்துணர்வதற்கு, புலன் விகித மாற்றம் முக்கியமானது – இல்லையென்றால் நீங்கள் பார்ப்பதுதான் எல்லாமே என்று ஆகிவிடுகிறது. சாரக்கட்டுமானம் அகற்றப்படாமல் இருப்பதற்கு அதுதான் காரணம். எப்படி இருந்தாலும், எது சக்தியுடன் அமைக்கப்பட்டதோ அது  உயிர்ப்புடன் இருக்கிறது, ஆனால் சாரக்கட்டுமானத்தை நாம் அகற்ற விரும்பினால், அது மென்மையான முறையில் செய்யப்படவேண்டும் – அதை அழிக்க விரும்பும் ஒரு படையெடுப்பாளரால் அது செய்யப்படக்கூடாது. ஒரு படையெடுப்பாளர் சாரக்கட்டுமானத்தை அகற்றுவது முக்கியம் அல்ல.

சாரக்கட்டுமானத்தை நாம் திரும்ப அமைக்கவேண்டும், ஆனால் அது நீதித்துறையின் முடிவுக்கு உட்பட்டது; அது நான் மட்டும் தீர்மானிப்பதல்ல. காசியே தன்னளவில் சாரக்கட்டுமானத்தை சார்ந்திருக்கவில்லை, ஆனால் மக்களின் உணர்ச்சியும், அதனுடன் கொண்ட தொடர்பும் சாரக்கட்டுமானத்தைச் சார்ந்திருக்கிறது. அவர்களுக்காக அது திரும்ப அமைக்கப்படவேண்டும்; ஆனால் காசிக்கு, அது முக்கியம் அல்ல.

காசியில் காயங்களை ஆற்றுவது

பல வழிகளிலும், கடந்த எட்டு வருடங்களில் காசியில் நிகழ்ந்திருப்பது அதிசயிக்கத்தக்கது. முன்பெல்லாம், அதை நீங்கள் மகத்தான இடமாகப் பார்த்தாலும், காசிக்கு வருவதை உங்களுக்கு ஒரு மோசமான அனுபவமாக இருப்பதை மக்களும், சூழ்நிலையும் உறுதிப்படுத்துவதாகவே இருந்தது. இப்போது, அங்கே ஒரு ஒழுங்கான நுழைவுவாயில் உள்ளது. நிச்சயம், சச்சரவுகள் இருக்கின்றன; குறிப்பிட்ட மக்கள் ஒரு தீர்மானம் எழுவதை விரும்பவில்லை. மக்களின் பிரச்சனைகள் மீது அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கும் ஒரு ஒட்டுமொத்த கூட்டத்துக்கு, ஒரு பிரச்சனை என்பது பெரும் மூலதனமாக இருக்கிறது. ஒரு தீர்வை நீங்கள் கண்டுபிடுத்துவிட்டால், அவர்கள் மேலேறுவதற்கான ஏணியை இழக்கின்றனர். நீதித்துறை உடன்படிக்கை நிகழும் என்று நான் நம்புகிறேன். அவர்கள் அந்தத் திசையில் நகர்ந்துகொண்டிருப்பதாக நான் நினைக்கிறேன்.

இந்தக் கோவிலை தரைமட்டமாக்குவதற்கான எழுத்துபூர்வமான ஓர் ஆணையைத் தெளிவாகக் காட்டும் வரலாற்று ஆவணங்கள் உள்ளன. மேலும் அதை இடித்துத்தள்ளியவர்கள், ஆணை நிறைவேற்றப்பட்டதையும் மற்றும் அதே கட்டிட இடிபாட்டுப் பொருட்களைப் பயன்படுத்தி, ஒரு மசூதியைக் கட்டுவோம் என்பதையும் குறிப்பிட்டு, அவர்கள் ஒரு திட்டம் நிறைவேற்றிய அறிக்கையையும் கொடுத்தனர். இந்த வரலாற்று ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன, ஆகவே இதில் உண்மையான சொத்துரிமைத் தகராறு இல்லை. அது தீக்கிரையாகாமல் இருப்பதை உறுதிப்படுத்தும்வண்ணம், அது இனப் பிரச்சனையைத் தீர்ப்பது குறித்த விஷயமாகவே இருக்கிறது.

இது தீர்க்கப்படவேண்டும் ஏனென்றால் ஒரு தேசத்தில் இப்படிப்பட்ட சீழ்பிடித்த காயங்கள் நீடிப்பது நீண்டகால நோக்கில் நல்லது கிடையாது. இப்போது அது மக்களின் விழிப்புணர்வுக்குள் வந்துவிட்டதால், சில நூற்றாண்டுகளாக அவர்கள் தூங்கிவிட்டதைப்போல், நீங்கள் மீண்டும் அவர்களைத் தூங்கவைக்க முடியாது.

முன்னேறிச் செல்வதற்கான விவேகத்தைக் கைக்கொள்ளுதல்

அதைக் கூறிவிட்டதால், காசி மீண்டும் கட்டப்படவேண்டுமா? அந்த ரீதியில் நாம் சிந்திக்கவேண்டியதில்லை. தற்போது, வேறு எதைக்காட்டிலும் அரசியலமைப்பை நாம் நம்பும் காரணத்தால், அனைவரும் அரசியலமைப்புச் சட்டத்தின்படி சென்று, அதனை முடிக்கவேண்டும். வரலாற்றை நீங்கள் முடிவுசெய்யமுடியாது. உலகத்தின் எல்லா இடங்களிலும், ஏதோ ஒரு வழியில், யாரோ ஒரு சாராருக்கு மோசமான விஷயங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. இங்கே இது பெரும்பான்மையான இனத்துக்கு நிகழ்ந்துள்ளது. அதனை நீங்கள் மறக்கக்கூடாது, ஏனென்றால் அதை மறந்துவிட்டால், அதேபோன்ற விஷயங்கள் உங்களுக்கு மீண்டும் நிகழலாம். ஆனால் அதே நேரத்தில், கடந்த காலத்தில் நிகழ்ந்த அதிபயங்கரமான விஷயங்களினால், வெறுப்புணர்வுடன் நாம் விஷத்தன்மை கொள்ளக்கூடாது.

கடந்த காலத்தில் நிகழ்ந்த அதிபயங்கரமான விஷயங்களினால், வெறுப்புணர்வுடன் நாம் விஷத்தன்மை கொள்ளக்கூடாது.

இன்றைக்கு நாம் காணக்கூடிய இனங்கள், படையெடுப்பாளர்களுடன் எந்தத் தொடர்பும் இல்லாதவர்கள். ஆனால் துரதிருஷ்டவசமாக, அவர்களுள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள், அந்த படையெடுப்பாளர்களுடன் அடையாளம் மேற்கொள்கின்றனர். அத்தகைய மக்கள் அதற்காக வருத்தப்பட்டு, நல்லிணக்கத்துக்கு வரவேண்டும் – அப்போதுதான் பிரச்சனை முடிவுக்கு வரும். ஏனென்றால் அது எல்லாருடைய வாழ்க்கையையும் குறித்தது, 300-400 வருடங்களுக்கு முன்னால் நிகழ்ந்த விஷயத்துக்காக சண்டையிடுவது குறித்ததல்ல. நேற்றைய வாழ்க்கை மோசமானது, ஆனால் அந்த அழுகலை நாம் இன்றைக்கும், வரும் காலத்துக்கும் பரப்பிவிட வேண்டியதில்லை. இன்றைய வாழ்க்கையும், நாளைய வாழ்க்கையும் சுமுகமாகச் செல்வது முக்கியம். இந்த விவேகம் தேவைப்படுகிறது.