ஈஷா சமையல்

வானவில் காய்கறி சாலட்

தேவையான பொருட்கள்

சாலட்டிற்கு:

4 பெரிய கேரட்

3 நடுத்தர அளவிலான சுக்கினி

1/5 நடுத்தர அளவிலான சிவப்பு முட்டைக்கோஸ்

1 சிவப்பு குடமிளகாய்

½ கட்டு கொத்தமல்லி

தஹினிக்கு:

வெள்ளை எள்

ஆலிவ் ஆயில்

சாலட் டிரெஸ்ஸிங்கிற்கு:

1/3 கப் தஹினி (எள் விழுது)

1 மேசைக்கரண்டி எலுமிச்சை சாறு

1-2 மேசைக்கரண்டி மேப்பிள் சிரப் அல்லது தேன்

1 சிட்டிகை உப்பு

1 சிட்டிகை மிளகுத்தூள்

3-6 மேசைக்கரண்டி தண்ணீர்

அலங்கரிப்பதற்கு:

பறங்கிக்காய் அல்லது தர்பூசணி விதைகள்


செய்முறை:

காய்கறிகளை தயார்செய்துக் கொள்ளவும்

  1. சுக்கினியை மிகவும் மெல்லிய கீற்றுகளாக (தோராயமாக 5-7செமீ நீளத்திற்கு) வெட்டிக்கொள்ளவும். நீண்ட சுருள்களாக வெட்டிக்கொள்ளவும். வடிகட்டியில் இதனை வைத்து, உப்பினை தூவவும், அதிகப்படியான நீரினை சுக்கினி வெளியேற்றிவிடும்.
  2. கேரட்டையும் மெல்லிய கீற்றுகளாக வெட்டி வைத்துக்கொள்ளவும்
  3. சிவப்பு முட்டைக்கோஸையும் மெல்லிய கீற்றுகளாக வெட்டவும்.
  4. சிவப்புக் குடமிளகாயினை மெல்லியதாக வெட்டவும்.
  5. கொத்தமல்லியினை அலசி, கெட்டியான தண்டுகளை அகற்றிவிட்டு பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
  6. ஒரு பாத்திரத்தில் நறுக்கிய சுக்கினி, முட்டைக்கோஸ், கேரட் மற்றும் குடமிளகாயை சேர்க்கவும். தேவையான அளவு மட்டும் கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும்.

தஹினி தயார்செய்யும் முறை

  1. மிதமான சூட்டில், வாணலியில் எள்ளை போட்டு பொன்நிறமாக வாசம் வரும் வரை வறுக்கவும். பிறகு ஆறவைக்கவும்.
  2. சூடு குறைந்த பிறகு, மிக்சியில் நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
  3. அதனை வழுவழுப்பானதாக்க சிறிதளவு ஆலிவ் ஆயிலை அதில் சேர்க்கவும்.

ட்ரெஸ்ஸிங் மற்றும் தாளிதம் தயார் செய்து கொள்ளவும்

  1. ஒரு பாத்திரத்தில், தஹினி, எலுமிச்சைச் சாறு, மேப்பிள் சிரப் (அ) தேன், மிளகுத்தூள் மற்றும் உப்பினைச் சேர்த்து, ஒன்றாக சேருமாறு நன்றாக கலக்கவும்.
  2. பிறகு சிறிது சிறிதாக தண்ணீரைச் சேர்த்து ட்ரெஸ்ஸிங் நன்றாக வழவழப்பாக கிரீம் ஆகும் வரை அடித்து கலக்கவும்.
  3. சுவைத்துப் பார்த்து தேவைக்கேற்ப எலுமிச்சைச் சாறு, உப்பு அல்லது மேப்பிள் சிரப்/தேன் சேர்த்து சரிசெய்துக் கொள்ளவும்.
  4. பறங்கிக்காய் அல்லது தர்பூசணி விதைகளை வறுத்து வைத்துக்கொள்ளவும்.

சேலட் செய்யவும்:

  1. காய்கறிகளின் மீது ட்ரெஸ்ஸிங்கினை ஊற்றி மெதுவாக கிளறி ஒன்று சேர்க்கவும்.
  2. வறுத்த விதைகளை மேலே தூவி அலங்கரிக்கவும்.