லிங்கபைரவியில் மஹாளய அமாவாசையன்று நிகழும் வருடாந்திர காலபைரவ சாந்தி செயல்முறையானது, வரும் செப்டம்பர் 25, 2022 அன்று நடைபெறுகிறது.
புனிதமிக்க அமாவாசை இரவில் நிகழ்த்தப்படும் இந்த செயல்முறை, இரத்த உறவினர்களில் உயிருடன் இருப்பவர்களுக்கும் இறந்தவர்களுக்கும் இடையே உள்ள ருனானுபந்தத்தை கரைத்திட உதவும் வகையில், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மஹாளய அமாவாசையன்று, நம்மை விட்டு மறைந்த குடும்ப உறுப்பினர்களுக்காகவும் அன்பிற்குரிய மறைந்த உறவுகளுக்காகவும் இந்த செயல்முறை நடத்தப்படுகிறது.
காலபைரவ சாந்தி செயல்முறையைச் செய்வதற்கு, இறந்தவரின் பெயருடன் அவர்களின் புகைப்படத்தையும் நீங்கள் வழங்க வேண்டும். மேலும், பிறந்த தேதி/ பிறந்த ஆண்டு மற்றும் இறந்த தேதி/இறந்த ஆண்டு ஆகியவற்றை வழங்கலாம் அல்லது இறந்தவரின் தாய் மற்றும் தந்தை இருவரின் பெயர்களையும் நீங்கள் வழங்கலாம். இந்த செயல்முறை லிங்கபைரவியில் நிகழ்த்தப்படும். இந்நிகழ்வை செப்டம்பர் 25 மஹாளய அமாவாசையன்று, இரவு 10:45 மணி முதல் செப்டம்பர் 26 நள்ளிரவு 12:45 மணி வரை நேரலையில் நீங்கள் பார்க்க முடியும்.
நம் வாழ்வில் பங்களிப்பு செய்து வாழ்வை செழுமையாக்கிய அனைவருக்கும் அனைத்திற்கும் ஒரு நன்றி வெளிப்பாடாக, தேவி லிங்கபைரவிக்கு அர்ப்பணிக்கப்படும் ஒரு நெருப்பு அர்ப்பணம். இந்த செயல்முறை நம் முன்னோர்களுக்காகவும் மற்றும் மறைந்த அனைத்து உறவுகளுக்காகவும் செய்யப்படலாம். அவர்களின் பெயர்கள், புகைப்படங்கள் மற்றும் பிற விபரங்கள் எதுவும் தேவையில்லை.
அக்னி அர்ப்பணத்திற்கு பதிவுசெய்ய, இங்கே க்ளிக் செய்யுங்கள்
மேலும் தகவல்களுக்கு, info@lingabhairavi.orgல் எங்களுக்கு இமெயில் செய்யலாம் அல்லது +91 83000 83111 என்ற எண்ணில் அழைக்கலாம்.
SHRI YOGINI TRUST
Linga Bhairavi, Ishana Vihar(Post),
Coimbatore-641114, Mobile: +91 83000 83111,
info@lingabhairavi@org | lingabhairavi.org Unsubscribe