கேள்வியாளர்: ஒரு சீடர் தயார்நிலையில் இருக்கும்போது குரு தோன்றுவார் மற்றும் சீடர் நிஜமாகவே தயாராக இருக்கும்போது, குரு மறைந்துவிடுகிறார் என்று சிலர் கூறுகின்றனர். இதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?
ஆன்மீக நிலைமாற்றமடைதலை அணுகுவதற்குரிய சிறந்த வழி எது? ஒரு குருவை நீங்கள் கண்டடைகிறீர்களா, அல்லது குரு உங்களைத் தேடிவருகிறாரா? மேலும் யார் காணாமல் போகவேண்டும்? இவற்றிற்கும், மேலும் அனைத்து கேள்விகளுக்கும் சத்குரு பதிலளிக்கிறார்.
கேள்வியாளர்: ஒரு சீடர் தயார்நிலையில் இருக்கும்போது குரு தோன்றுவார் மற்றும் சீடர் நிஜமாகவே தயாராக இருக்கும்போது, குரு மறைந்துவிடுகிறார் என்று சிலர் கூறுகின்றனர். இதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?
சத்குரு: இன்றைக்கு ஆன்மீகம் என்று எதை சொல்கிறீர்களோ அதில் இருக்கும் பிரச்சனை என்னவென்றால், மக்கள் ஆன்மீகத்தைப் பற்றி பேசுவதிலும், படிப்பதிலும் மும்முரமாக உள்ளனர். ஆன்மீகமானது, நீங்கள் பேசுவதற்கும், படிப்பதற்குமான ஒன்றல்ல, ஏனென்றால் அது பொருள்தன்மையற்ற வாழ்க்கையின் ஒரு பரிமாணம். கருத்தாக்கங்கள், ஒழுக்கவிதிகள் அல்லது நன்னெறிகளின் குவியல் ஆன்மீக செயல்முறையை உருவாக்காது. ஒவ்வொரு தலைமுறையிலும், இது எப்போதும் ஒரு பிரச்சனையாகவே இருந்து வந்துள்ளது: எப்போதெல்லாம் குருமார்கள் அல்லது வெவ்வேறு கலாச்சாரத்தில் எவ்வாறு அழைக்கின்றீர்களோ அவர்கள் தோன்றுகின்றனரோ, அப்போதெல்லாம் மக்கள் அவர்களை, முந்தைய காலத்தவர்களுடன் ஒப்பிடுகின்றனர்.
அடுத்த தலைமுறையும்கூட, இந்தத் தலைமுறையின் குருமார்களைப் பார்த்து, அவர்களுடைய குரு இதைப்போல இருப்பதை எதிர்பார்க்கும். அதற்கடுத்தவர்கள் வரும்போதும், நீங்கள் நிஜமான குரு அல்ல, ஏனெனில் கடந்த காலத்தில் இருந்த ஒருவர்தான் உண்மையானவர் என்று கூறுகிறார்கள். கடந்தகாலத்திற்கு என்று ஒரு கண்மூடித்தனமான மோகம் நமக்கு உள்ளது, ஏனென்றால் அது மறைந்துவிட்டது. மறைந்துபோன விஷயங்களை நாம் விரும்புகிறோம். இறந்துவிட்டவர்களை நாம் நேசிக்கிறோம். அவர்கள் உயிருடன் இருக்கும்பொழுது நம்மால் அவர்களிடம் பேசமுடியாது, ஆனால் அவர்கள் இறந்துவிட்டால் உருகுகிறோம். நீங்கள் தயாராக இருக்கும்பொழுது, ஒரு குரு வருவார், மற்றும் நீங்கள் உண்மையாகவே தயார்நிலை அடையும்பொழுது, அவர் மறைந்துவிடுவார் என்று கூறும் இந்த உயிரற்ற கற்பிதங்களையெல்லாம் புத்தகங்களிலிருந்து எடுத்துக்கொள்ளாதீர்கள்.
நீங்கள் நிஜமாகவே தயாராக இருக்கும்பொழுது, நீங்கள் மறையவேண்டும். அதுதான் உண்மையான விஷயம். குரு மறைகிறார் என்றால், அது அவருக்கு நல்லது, உங்களுக்கு நல்லதல்ல. நீங்கள் சிறு குழந்தைகளைப்போல், தனிப்பட்ட தன்மை இல்லாமல் இருக்கவேண்டும். ஒரு குழந்தையிடத்தில், தனிநபர் என்ற தன்மை எளிதில் மறைந்துவிடுகிறது, இல்லையா? குழந்தையானது கோபமாக இருக்கும்போது, நீங்கள் அவருடன் விளையாடினால், அவரது தனிப்பட்ட தன்மை மறைந்துவிடுகிறது. மீண்டும், அவர் மகிழ்ச்சியாகிறார். அதைபோல், குரு வந்துவிட்டார் என்றால் நீங்களும் மறைந்து போகவேண்டும்.
உங்களுக்குள் நீங்களே நிரம்பியிருக்கும் நிலையில் குரு மறைந்துவிடுகிறார் என்றால், அவர் மிகவும் அதிர்ஷ்டசாலி. ஏனென்றால், ஏற்கனவே நிரம்பியிருக்கும் அல்லது அது நிரம்பியிருப்பதாக எண்ணும் ஒரு கோப்பையை நிரப்புவதற்கு முயற்சிக்கும் தொல்லை அவருக்கு இல்லை. தற்போது உங்கள் உடல், மனம் மற்றும் உங்கள் ஆன்மீகக் கருத்துகள் அடங்கலாக நீங்கள் சேகரித்துள்ள அனைத்தையும் எப்படி மறையச்செய்ய முடியும் என்று பாருங்கள்.
நீங்கள் விஷயங்களைத்தான் சேகரிக்கமுடியும், உயிர்த்தன்மையை அல்ல – அது இங்குதான் உள்ளது. அது மற்ற விஷயங்களால் முழுமையாக மூடி மறைக்கப்பட்டுள்ளது. அதை மூடியிருக்கும் பெருங்குவியலை நீங்கள் குறைத்தால், அது அங்கே இருப்பது புலப்படும். நீங்கள் மறையவேண்டும். குரு மறைகிறார் என்றால், அவர் உங்களைக் கைவிடுகிறார் என்றுதான் அர்த்தம், ஒருவேளை உங்களது குவியல் அவருக்கு மிகவும் பெரியதாக இருப்பது காரணமாக இருக்கலாம். சாத்தியம் அருகில் இருந்தால், நாம் அவர்களுடன் ஒருவிதமாக செயல்படுவோம். சாத்தியம் இருக்கிறது, ஆனால் அது சற்று தொலைவில் இருந்தால், அவர்களுடன் நாம் வேறொரு விதமாக செயல்படுவோம். சாத்தியம் வெகு தொலைவில் இருந்தால், அவர்களுடன் நாம் மேலும் வேறுவிதமாகத்தான் செயல்படுவோம்.
உங்கள் சாத்தியக்கூறு அருகில் இருக்குமளவுக்கு நீங்கள் இருப்பதையும், மற்றும் உங்களால் இயன்ற அளவுக்கு எல்லாவற்றையும் நீங்கள் செய்துள்ளீர்களா என்பதையும் கவனிப்பது உங்கள் பொறுப்பு. எப்படி செய்வது என்று உங்களுக்குத் தெரியாத சில சின்ன விஷயங்களை, உங்களுக்காக அவர் செய்வார். நீங்கள் எதுவுமே செய்யவில்லை என்றால், எல்லாக் குப்பைகளையும் அவர் சுத்தம் செய்வார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அதனை அவர் செய்யமாட்டார், நீங்களே சுத்தம் செய்து, நீங்கள் சேகரித்துள்ள எல்லா ஆன்மீக முட்டாள்தனத்தில் இருந்தும் விடுபட்டால், பிறகு நம்மால் நெருப்புப் பற்றவைக்க முடியும். நீங்கள் ஈரப்பதமாக இருந்தால், உங்களை எப்படி ஒளியேற்றுவது? அவை எல்லாவற்றையும் நீங்கள் விலக்கினால், அப்போது உங்களை ஒளியேற்றுவது எளிதாக இருக்கிறது. செயல்முறைகளுக்கு உங்களையே நீங்கள் தகுதியாக்கிக்கொள்வது உங்கள் வேலை.
உங்களது வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களிலும், சில விஷயங்களை உங்களால் செய்யமுடியும், மற்ற விஷயங்களைச் செய்யமுடியாது. உங்களால் செய்ய முடிந்ததை நீங்கள் செய்தால், உங்களால் செய்யமுடியாததை, உங்களுக்காக செய்யமுடியும். ஆனால் உங்களால் செய்யமுடிந்ததை நீங்கள் செய்யவில்லை என்றால், உங்களை உந்தித்தள்ள ஒருவரும் விரும்புவதில்லை.
வரலாற்றை நீங்கள் உற்று நோக்கினால் – கிருஷ்ணர் வந்தபோது, அவர் மிகவும் விளையாட்டுத்தனமாக, நன்றாக உடையணிந்து, அன்பும், ஈடுபாடும் மிகுந்திருந்தார். மக்கள் அவரை மோசக்காரன் என்று அழைத்தனர், ஏனென்றால் அவருக்கு முன்பாக ராமர் வந்திருந்தார், மிகவும் கண்டிப்பான, நேர்மையான, முற்றிலும் நல்லொழுக்கவாதியானவர். ஒரு நிஜமான தெய்வீக மனிதர் அப்படித்தான் இருப்பார் என்று, கிருஷ்ணரை அவர்கள் நிஜம் இல்லை என்றனர். அவர் இறந்தபிறகு, கிருஷ்ணர் அற்புதமான மனிதராக இருந்தார் என்றும் அவரைப் போல் ஒருவரும் இல்லை என்றும் அனைவரும் பேசத் தொடங்கினர்.
அதன் பிறகு புத்தர் வந்தார். அவர் வெறுமனே அமர்ந்தார். உடனே மக்கள், “நீங்கள் என்ன மாதிரியான மனிதர், இறந்துவிட்டதைப் போல் இந்த மாதிரி வெறுமனே அமர்ந்திருக்கிறீர்கள்? கிருஷ்ணர் எப்படி இருந்தார் தெரியுமா? அவர் எவ்வளவு உயிரோட்டமாக இருந்தார், அவர் எப்படி குழல் இசைத்தார், அவர் எப்படி நடனமாடினார், அவர் எப்படி நேசித்தார்? உங்களைப் பாருங்கள். நீங்கள் ஒரு இறந்த மனிதனைப் போலவே இருக்கின்றீர்கள். எங்களுக்கு நீங்கள் வேண்டாம்” என்றனர். கௌதம புத்தருக்குப் பிறகு, வெவ்வேறு தலைமுறைகளில் இதைப்போன்ற பலர் வந்துள்ளனர்.
குருமார்கள் தோன்றும்போதெல்லாம், மக்கள் அவர்களை முந்தைய தலைமுறையோடு ஒப்பிட்டு, சமகால குருமார்கள் சிறப்பாக இல்லை என்று கூறுகின்றனர். ஏசு உயிருடன் இருந்தபொழுது, மக்கள் அவருக்கு மிகக் கொடுமையான விஷயத்தைச் செய்தனர். அவர் மரித்தபிறகு, அதையும்கூட மக்கள் கொண்டாடினர். தொன்றுதொட்டு நாம் இதைத்தான் செய்துகொண்டிருக்கிறோம். இங்கே, இப்போது இருப்பவரை அடையாளம் காண்பதற்கு, உங்களுக்கு விழிப்புணர்வு தேவை; அவருடன் நீங்கள் உயிரோட்டமாக இருக்கவேண்டியுள்ளது. யாரோ ஒருவர் இறந்தபிறகு, அனைவரும் அவரை வழிபடமுடியும். ஏனென்றால், குரு மறைந்துவிட்டால், அவரைக்கொண்டு நீங்கள் விரும்புவதை உருவாக்கமுடியும்.
அவர் உயிருடன் இருந்தபொழுது, உங்களைத் தொந்தரவு செய்துகொண்டு, உங்களை அசௌகரியமாக உணரச் செய்துகொண்டிருந்தார். ஆகவே இரகசியமாக, அவர் சென்றுவிடுவதை நீங்கள் விரும்பினீர்கள். ஏனென்றால் மரித்துப்போன ஒரு குரு, எப்போதும் நல்லதொரு முதலீடாக இருக்கிறார். அவர் பெயரில் ஒரு புதிய மதம் தொடங்கமுடியும்; அவரை முன்னிட்டு பிழைப்பு நடத்திக்கொள்ள முடியும். ஆனால் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு குரு, உங்களது விஷயங்கள் பலவற்றையும் அழிக்கிறார். சாத்தியத்துக்கும், நிஜத்துக்கும் இடைப்பட்ட தூரம் ஒன்று உள்ளது. அதை நீங்கள் கடக்கவேண்டும். அந்த சாத்தியத்தை மிக எளிதாக நீங்கள் புரிந்துகொண்டு உங்களுக்கு கிடைக்கும்படி நாம் செய்வோம், ஆனால் அங்கு சென்றடைவதற்கான அந்த சில படிகளை நீங்கள்தான் எடுத்து வைக்கவேண்டும். வாழ்வின் சாத்தியத்துடன் செயல்படுவதற்கு வேறு எந்த வழியும் இல்லை.
உங்களுக்கு வழங்கப்பட்டிருப்பது என்னவாக இருந்தாலும், சாத்தியத்துக்கும், நிஜத்துக்கும் இடைப்பட்ட தூரத்தை மூடுவதற்கான அந்த சில படிகளை நீங்கள் எடுக்கவில்லை என்றால், உங்கள் வாழ்க்கையில் அது மெய்ப்படாது. உங்கள் வாழ்க்கையில் இது மெய்ப்படவேண்டும் என்பது எனது விருப்பமும், ஆசியுமாக இருக்கிறது. உங்களுக்கும், உங்களைச் சுற்றியுள்ள அனைத்துக்கும் வாழவேண்டும்.நீங்கள் ஒரு ஆசீர்வாதமாக இருக்கவேண்டும். அந்த மாதிரி நீங்கள் வாழவேண்டும். நீங்கள் சுவாசித்தால், உங்களைச் சுற்றிலும் உயிர்கள் தழைக்கவேண்டும், அவ்வாறு நீங்கள் இருப்பீர்களாக.வாழவேண்டும்.