கேள்வியாளர்: எனது கணவர் கடந்த பௌர்ணமி நாளன்று மறைந்துவிட்டார். பௌர்ணமி நாளன்று இறப்பதற்கு, மரணத் தருவாயில் இருப்பவருக்கு அது உதவியாக இருக்கிறதா?
அது வெறும் மூட நம்பிக்கையல்ல: நமது சூரிய மண்டலத்தில் இருக்கும் சூரியன், சந்திரன், மற்றுமுள்ள கிரகங்கள் நமது வாழ்க்கை முழுவதும் மட்டுமல்லாமல் நம் மரணத்திலும் தாக்கம் ஏற்படுத்துகிறது. நமது விண்ணுலக தொடர்பை சத்குரு வாயிலாக மேலும் அறிந்துகொள்ளுங்கள்.
கேள்வியாளர்: எனது கணவர் கடந்த பௌர்ணமி நாளன்று மறைந்துவிட்டார். பௌர்ணமி நாளன்று இறப்பதற்கு, மரணத் தருவாயில் இருப்பவருக்கு அது உதவியாக இருக்கிறதா?
சத்குரு: நம்முடைய வாழ்க்கையில் தாக்கம் ஏற்படுத்தும் வானியல் அமைப்பின் ஒன்பது அம்சங்களை நாம் அடையாளம் காண்கிறோம். இவைகளை நாம் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு (வியாழன்), சுக்கிரன் (வெள்ளி), சனி, ராகு மற்றும் கேது என்று அழைக்கிறோம். சூரியன், சந்திரன் மற்றும் ஐந்து சூரிய குடும்ப கிரகங்களுடன் சந்திரனின் வளர்கின்ற வடக்கு முனை ராகுவாகவும் மற்றும் தேய்கின்ற தெற்கு முனை கேதுவாகவும் இருக்கின்றது. சூரிய கிரகணங்களுக்கு, ராகு பொறுப்பானது; சந்திர கிரகணங்களுக்கு, கேது பொறுப்பானது. சூரியனும், சந்திரனும் வானமண்டலத்தைக் கடக்கும்போது அவற்றின் பாதைகள் ஒன்றையொன்று வெட்டும் புள்ளிகள், ராகு மற்றும் கேது எனப்படுகிறது.
‘க்ரஹ’ என்ற சொல்லுக்கு, புரிந்துணர்தல் என்பது பொருள். ஆனால், அதை மற்றொரு விதத்தில் பார்த்தால், தாக்கம் என்றும் வரையறுக்கலாம். வானமண்டலப் பொருட்களுள், சூரியனும், சந்திரனும் நமது பௌதிக உடல்களால் சக்திரீதியாக கிரகிக்கப்படுவதிலும், அவற்றின் நகர்வு மற்றும் நிலைப்பாடுகளால் நம்மில் தாக்கம் ஏற்படுத்துவதிலும் மிக முக்கியமான பங்காற்றுகின்றன. நமது தாய்மார்களின் உடல்கள் சந்திரனின் சுழற்சிகளுடன் ஒத்திசைவில் இருந்த காரணத்தினால்தான், நாம் இங்கு பிறந்து, இன்றைக்கு இங்கே அமர்ந்துகொண்டிருக்கிறோம்.
தக்ஷனின் 27 மகள்களை சந்திரன் மணந்தது எப்படி என்பதைப் பற்றி ஒரு அழகான கதை உண்டு. தக்ஷன், “என் 27 மகள்களையும் சமமாக நடத்தி, கௌரவிக்க முழு சம்மதம் இருந்தால் மட்டும்தான் எனது மகள்களை மணமுடித்துத் தருவேன்’, என்று சந்திரனிடம் கூறினார்.
ஆனால் காலப்போக்கில், மெல்லமெல்ல, சந்திரன் தனது அன்பை அதிகம் சம்பாதித்த விருப்பமான ஒருத்தியிடம், சாயத் தொடங்கினான். மற்றவர்களை அது கோபமூட்டியதால், அவர்கள் மறையத் தொடங்கினர். ஆகவே, இப்படித்தான் பூமியைச் சுற்றிவரும் சந்திரனின் சுழற்சி 27 நாட்கள், 8 மணி நேரமாகியது, ஏனெனில் அந்த அளவுக்கு சந்திரன் அவள்பக்கமாகச் சாய்ந்தான். அவளால் மற்றவர்கள் மறைக்கப்படுவதால், எப்பொழுதும் கோபத்தை வெளிப்படுத்துவர்களாக இருக்கின்றனர் – சிலர் முழுமையாகவும் கறுத்துவிடுகின்றனர், மற்றவர்கள் சந்திரனின் பிறைகளாகிவிடுகின்றனர்.
இது, வான சாஸ்திரம் பேசுவதற்கான அற்புதமான வழியாக இருக்கிறது. வானமண்டலத்தின் வடிவியல் நம்மைச் சுற்றி எப்படி செயல்படுகிறது என்பதற்கான கதைக்குள் பல கதைகள் உள்ளன. யோகா அதனை வடிவங்களாகவும், வடிவியலாகவும் மட்டும் பார்க்கிறது, ஆனால் இந்து கலாச்சாரம் அதனை இயங்குவியல்முறையில் பார்க்கிறது. அதே வடிவியல்தான் அற்புதமான கதைகளாக மாற்றப்பட்டுள்ளது.
பௌர்ணமி தினம், சந்திரனுடைய விருப்பமான மனைவியின் நாள்; மற்றவர்களைவிட அவள் அதிகமாக ஒளிர்கிறாள். சந்திரன், நிலவின் அரசனானவன், அவளிடம் கூடுதல் கவனம் செலுத்தும் காரணத்தால், அவளுக்குக் கூடுதல் ஒளி கிடைத்தது. அந்த நாளில், பல நற்பலன்கள் உள்ளன.
பௌர்ணமி தினங்களில், நுரையீரல் செயல்பாடு, இரத்தம் மற்றும் ஊட்டச்சத்துக்களின் ஓட்டம், மற்ற வாழ்வின் அம்சங்கள் அவற்றின் உச்சத்தில் செயல்படுவதாக காட்டும் ஆராய்ச்சிகள் இன்று உள்ளன. இதய அறுவை சிகிச்சைகளில் பிழைத்தெழுபவர்களின் விகிதம், பௌர்ணமி தினங்களிலும், அமாவாசை தினங்களிலும் மிக அதிகமாக இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆனால், நரம்புமண்டல அமைப்பு என்று வரும்பொழுது, பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்கள் உங்களுக்கு எதிராக செயல்படுவது ஏனென்றால், அந்த நாட்களில் நிலவின் ஈர்ப்பு விசைகள் அதிகமாக சக்தியை வெளியிடுகின்றன. சமுத்திரங்கள் மேலெழும்புவதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். உங்களுக்கு உள்ளேயும்கூட, எல்லா நீர்மச்சத்துக்கள், திரவங்கள் மற்றும் சுரப்புகள் உயர்கின்றன. உங்கள் ஒட்டுமொத்த உடலமைப்பும், பல்வேறு சுரப்பிகளால் மிகச்சரியாகவும், நுணுக்கமாகவும் நிர்வகிக்கப்படுகிறது. மேலும் முழுநிலவு மேலெழும்பும்பொழுது, சமுத்திரம் உயர்வது போலவே, நிலவானது பீனியல் சுரப்பியிலிருந்து சுரப்புகளை அதிகரிக்கும் திறன் பெற்றுள்ளது.
உங்களுக்கு நரம்பியல் பிரச்சனைகள் இருந்தால், பௌர்ணமி தினங்களில், நீங்கள் அதிகமான தொந்தரவு மற்றும் கரகரப்பை உணரமுடியும். ஏற்கனவே நரம்பின் பாதைகளில் பிரச்சனைகள் இருக்கும்பொழுது, மின் இணைப்புகளில் இருப்பதுபோல், அதிக சக்தி ஓட்டம் இருந்தால், அது மேலும் படபடத்து தொந்தரவு ஏற்படுத்துகிறது. ஆனால் உங்கள் மனநிலை என்று வரும்போதும், தற்போது உங்கள் உடல் எப்படி உணர்கிறது என்பதும், அது எல்லாமே திரவங்களும், சுரப்புகளும் எவ்வளவு திறனுடன் நிகழ்கிறது என்பதைக் குறித்ததாக இருக்கிறது.
பௌர்ணமி நாட்களில், உங்கள் உடலமைப்புக்குள் திரவங்களுடன் தொடர்புடைய அனைத்தும் உச்சத்தில் இயங்குகிறது. பொதுவாக இந்தியாவில், அதுபோன்ற ஒரு நல்ல நிலையில் நீங்கள் இருக்கும்பொழுது, அது இறப்பதற்கான ஒரு நல்ல நாளாகப் பார்க்கப்படுகிறது. ஒரு நல்ல நாளில் நாம் இறக்க விரும்புகிறோம். எல்லாமே நன்றாக இருக்கும்பொழுது, நீங்கள் மகத்துவமாக உணரும்பொழுது, நீங்கள் செல்லவேண்டும்
யாரோ ஒருவர் பௌர்ணமி இரவில் இறப்பதைப் பற்றிய விபரங்களுக்குள் நான் செல்லவிரும்பவில்லை, ஆனால் வாழ்வின் ஒரு குறிப்பிட்ட ஓட்டம் உள்ளது, அதனால் தான் பொதுவாக ஏன் அந்த நாள் நீங்கள் இறப்பதற்கான நல்ல நாள் என்று கருதப்படுகிறது. குறிப்பாக நீங்கள் விழிப்புணர்வுடன் கடந்து சென்றால், அந்த நாளில் மேலும் அதிக இனிமையான தன்மையில் உங்களால் இறக்கமுடியும்.