அவர்தான் சாஹில் ஜா. ஒரு வெகுஜன அணுகுமுறையைக் கையில் எடுத்துக்கொண்டு, மண் அழிவு குறித்த விழிப்புணர்வை வளர்ப்பதற்காக தற்போது இவர் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவாறு - தகுந்த நடவடிக்கை எடுத்தாலன்றி, அடுத்த தலைமுறையினர் எதிர்கொள்ளப்போகும் உணவுப் பற்றாக்குறையை வலியுறுத்திக்கூறி எச்சரிக்கிறார். 16 வயதே நிரம்பியவராக, மேற்குவங்கம், கொல்கத்தாவில் இருந்து இந்தியா முழுவதும் 25,000 கிமீ தூரத்தை மிதிவண்டியில் கடக்கும் இலட்சியப் பயணத்தை அச்சமின்றி மேற்கொண்டுள்ளார். மனோதிடம் மட்டுமே துணையாக வர சாஹில், அச்சுறுத்தும் தனிமைப் பயணத்தை 2022, மே மாதம் 1ஆம் தேதி தொடங்கினார். அவரது இலக்குகள் பூர்த்தியாகும்வரை, இரண்டு வருடங்களுக்கு மிதிவண்டியின் சக்கரங்கள் சுழலும் என்று எதிர்பார்க்கிறார்.
தனது 65வது வயதில், லண்டனில் இருந்து இந்தியாவுக்கு, 30,000 கிமீ தொலைவு மோட்டார்வாகனம் ஓட்டியவாறு, பல நிலைகளில் வாட்டியெடுக்கும் 100 நாள் பயணத்தை, மண் காப்போம் இயக்கத்தை முன்னிறுத்தி மேற்கொண்ட சத்குருவிடம் இருந்து, சாஹிலின் பெரும் பயணம் துளிர்ப்பதற்கு ஊக்கம் பெற்றது. மண் இல்லை, உணவு இல்லை, உயிர் இல்லை: சத்குருவின் இந்தத் தொலைநோக்குப் பார்வையின் ஆழமான புரிதலில் இருந்து சாஹிலுக்கான முதன்மை நோக்கம் எழுச்சியடைந்தது.
வடகிழக்கு பகுதிகளைத் தவிர்த்து, அவரது பயணவழியில் பெரும்பாலான இந்திய மாநிலங்களை இணைத்து, ஏற்கனவே மண் காப்போம் நோக்கில் விவசாய முறைகளை நடைமுறைப்படுத்தும் மக்களைக் காட்டிலும், நகரவாசிகளின் மீதே சாஹில் கவனம் செலுத்துகிறார்.
ஒருநாள் அவரது பணியிடத்துக்கும் வங்கிக்கும் 30கிமீ தூரம் சைக்கிளில் சென்றதைத்தவிர, இந்தப் பயணத்துக்காக வேறெந்த முன்னேற்பாடும் அவர் செய்யவில்லை என்பது வியப்புக்குரியது. சாஹில் தன்னுடன் ஐந்து மண் காப்போம் டி-ஷர்ட்கள், இரண்டு பேண்ட்கள், ஒரு ரெயின்கோட் மற்றும் உலகளவு நம்பிக்கையுடன் பயணத்தை ஆரம்பித்தார். தளராத உறுதியும், உன்னதமான காரணங்களும் கைகோர்த்து உடன்வர, அவர் முன்வைத்த அடி பிறழாமல் முன்னேறினார். சாஹிலுக்குத் தேவைப்படும் எல்லா பயிற்சிகளையும் சைக்கிள் ஓட்டுவதே உள்ளடக்கியதாக இருக்க - தற்போது, துணிச்சலான இந்த மிதிவண்டிப் பயணி தனது முயற்சியில் 100 நாட்களைக் கடந்து, 4000 கிமீ தூரத்தைத் தொட்டுள்ளார்.
இந்த மகத்தான சைக்கிள் பயணத்துக்கு, சாஹிலுடன் பின்தொடரும் குழுவினரோ அல்லது பரிசோதனை இடங்களில் பராமரிப்புக் கருவிகள் சகிதம் காத்திருக்கும் மக்களோ யாரும் இல்லை மற்றும் எந்த ஆதரவும் இல்லை. அடுத்து வரவிருப்பது என்ன மாநிலம் என்பதைத் தவிர, உணவுக்காக அல்லது சிறிய ஓய்வுக்காக அல்லது உறக்கத்துக்காக எப்போது வண்டியை நிறுத்துவது என்று சாஹில் முன்கூட்டியே எதையும் திட்டமிடுவதில்லை. அவர் தன்போக்கில் மக்கள் கூட்டங்களைச் சந்தித்துக்கொண்டு, அவரது அடிப்படை தேவைகள், சைக்கிள் பிரச்சனைகள், கடுமையான பருவ நிலைகள் மற்றும் எதிர்பாராத நிகழ்வுகளுக்கு ஏற்ப அவ்வப்போது செயல்படுகிறார்.
சாஹில் ஒரு இளம்பருவத்தினராக இருந்தாலும், அவரது வயதைக்கடந்த ஒரு முதிர்ச்சியுடன் காணப்படுகிறார். தனது சட்டைப்பையில் வைத்திருந்த வெறும் 500 ரூபாயுடன் சைக்கிள் பயணத்தைத் தொடங்கியவர், செல்லும் வழியில் ஊற்றாக சுரக்கும் மனிதர்களின் பரிவை (ஆனால் அதனை எதிர்பார்க்காமல்) நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்கிறார். உயிர் பிழைத்திருத்தலைச் சார்ந்த சாஹிலின் அணுகுமுறை ஒரு சன்னியாசியின் மனோநிலைக்கு ஒப்பானதாக இருக்கிறது; சாலையோர வாழ்க்கையை, இலக்கற்ற ஒரு யாசகனாகவே அணுகுகிறார்.
அதிர்ஷ்டவசமாக, அவரது பொறுப்புணர்வைப் பாராட்டும் பல பெருந்தன்மையான மக்களைச் சந்திக்கிறார். உதாரணத்துக்கு, ஒரு ஈஷா தன்னார்வலர், தலைக்கவசம் ஒன்றை பரிசளித்தார். இந்தியாவெங்கும் பரவியிருக்கும் ஈஷா தன்னார்வலர்களிடம் இருந்து வெள்ளமெனப் பெருகும் உதவிகளால் சாஹில் திக்குமுக்காடிப்போய், அளவுகடந்த நன்றிப்பெருக்கில் நனைகிறார். முன்பின் அறிமுகமில்லாதவர்கள்கூட, அவருக்கு தேவையானதையும், சில நேரங்களில் மலர்கள் கொடுப்பதுமாக இருக்கின்றனர். ஒருமுறை, அதிகாலை வேளையில் ஒரு சைக்கிள் கடையில் சாஹிலின் டயர் இலவசமாக சரிசெய்து தரப்பட்டது. மேலும், டெகத்லான் போன்ற நிறுவனங்கள் முன்னறிவிப்பில்லாத சில சைக்கிள் ஓட்டங்களை ஏற்பாடு செய்வதுடன், அவருக்கு அத்தியாவசியமான உபகரணங்கள் அளித்து, பயணத்தில் ஒரு குறிப்பிட்ட தூரத்துக்கு ஸ்பான்சர் செய்துள்ளன.
இந்த மகத்தான நோக்கத்தை செயல்படுத்துவதற்கு, சாஹில் அவரது பெற்றோரிடமிருந்து முன்னதாக ஆசிகளைப் பெற்றிருக்காததில் ஆச்சரியமில்லை. ஒருநாள் காலையில், தனது மிதிவண்டியில் தாவி ஏறியவராக, 10 கிமீ தூரத்திற்குப்பிறகு, வீட்டிற்கு தொலைபேசியில் இதுபோன்ற வரிகளில் கூறினார், “ஹாய் அப்பா! அடுத்த இரண்டு வருடங்களுக்கு நான் இந்தியா முழுவதும் சைக்கிள் ஓட்டிக்கொண்டு, மண் காப்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தப் போகிறேன், ஆகவே இரவு உணவுக்கு நான் வீட்டில் இருக்கமாட்டேன்.” சாஹில் நகைச்சுவைக்காக ஏதோ கூறுவதாக அவர்கள் நினைத்தனர்! இந்த மாபெரும் பணிக்காக தனியாக பயணிக்கும் அவர்களது 16 வயது மகனை அந்தப் பெற்றோர் மன்னிக்காமல் இருக்கலாம் என்றாலும், சாஹில் சரியான பாதையில் செல்வதை அவர்கள் புரிந்துகொண்டு, தினமும் அவரிடம் தொடர்புகொண்டு, கண்காணிக்கின்றனர்.
கல்வியைப் பொறுத்தவரை, சாஹில் உறுதிமாறாமல், சுயமாகக் கற்கும் அணுகுமுறையைக் கடைபிடிக்கிறார். அவர் ஆர்வமுடன் படிக்கும் சில புத்தகங்களைக் கூறவேண்டும் என்றால், விவசாயம் மற்றும் பயிரிடுதலில் இருந்து, புனைக்கதைகள் மற்றும் ஆன்மீகம் வரை செறிவு மிகுந்த புத்தகங்களை வாசிக்கிறார். அவரைக்காட்டிலும் மிகப்பெரிய ஒரு நோக்கத்துக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த சைக்கிள் பயணத்தில், கற்பனைக்கெட்டாத வகையில், வாழ்க்கை குறித்தவற்றை அதிகம் கற்றுக்கொள்வதாக சாஹில் பகிர்ந்துகொண்டார்.
சாஹில், 50க்கும் மேற்பட்ட பள்ளிகளிலும், விவசாயக் கல்லூரிகள் மற்றும் அறிவியல் மன்றங்களிலும் உரை நிகழ்த்தியுள்ளார். அவர் ஏறக்குறைய எல்லா வர்த்தகப் பிரிவினருடனும் இணைந்து, சமூகத்தின் எல்லா மட்டங்களின் மக்களிடமும் கலந்துரையாடியுள்ளார். அது மட்டுமில்லாமல், தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகங்கள் மற்றும் செய்தித்தாள்களில் 300க்கும் அதிகமான நேர்காணல்களை நடத்தியுள்ளார். சமூக ஊடகங்களைப் பொறுத்தவரை, அவரது வீச்சு அனுமதிக்கும் அத்தனை மக்களிடமும் பேச்சுப் பரிமாற்றம் நிகழ்த்தி, அதன் விளைவாக பெருத்த தாக்கம் ஏற்படுத்துபவர்களை மண் நண்பர்களாக உருவாக்குகிறார்.
அதிர்ஷ்டவசமாக, சாஹில் தனது பயணத்தின் முதல் பகுதியில், சட்டசபை உறுப்பினரைச் சந்தித்தார். அதன் விளைவாக, மண் காப்போம் இயக்கத்துக்கு பாராட்டு தெரிவித்துள்ள எண்ணற்ற அலுவலர்களை இந்த இளம் பிரச்சாரகர் தொடர்பு கொள்வதற்கு அவர் வழிகாட்டினார். சாஹிலின் ஆர்வம், இளமை மற்றும் ஒரு கடுமையான பயணத்தை மேற்கொள்ளும் உறுதி ஆகியவை பரவலான ஆதரவைத் திரட்டுவதற்கு ஏதுவாக இருந்தது. சாஹிலின் பயணத்துக்கு உறுதுணையாக இருப்பது, மண் அழிவு என்பது உணவுப்பஞ்சத்துக்கு இணையானது என்ற இந்த நோக்கம்தான் என்பதை மீண்டும் நினைவுக்கூற வேண்டியதில்லை.
இது மட்டுமின்றி, கேரளா மற்றும் ஒடிஷா ஆளுனர்கள் வாயிலாக மக்களவையின் ஆதரவு பெறப்பட்டது. விழிப்புணர்வை உயர்த்தும் சாஹிலின் உறுதிக்குத் துணையாக, தாங்கள் என்ன செய்யவேண்டும் என்று அதிகாரபீடத்தில் இருப்பவர்கள் வெளிப்படையாகவே சாஹிலிடம் கேட்டனர். ஒரு விழிப்புணர்வான உலகமாக நம்மை இணைப்பதற்கு, ஒற்றுமையுடன் செயல்படுவதற்காக, உலகை வல்லமைப்படுத்தும் நோக்கத்துடன், நினைவில் நிற்கத்தகுந்த வகையில், கேரளாவில் சசி தரூர் அவர்களையும் சந்தித்து, சாஹில் வாழ்த்து பெற்றார். ஆட்சியாளர்கள் சாஹிலுடன் தொடர்பில் இருந்துகொண்டிருப்பதால், பயணம் விரைவாக வேகமெடுக்கிறது. இந்த இளைஞரின் முயற்சிகளுக்கு குறிப்பிடத்தக்க தாக்கம் ஏற்படுத்தவல்ல பிரம்மிப்பூட்டும் உதாரணங்களாக இவை இருக்கின்றன.
ஆச்சரியமான இத்தகைய சாகச செயல் எளிதில் வருவதல்ல. அவரது முந்தைய வாழ்வாதாரம் ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரராக இருந்தது என்றாலும், மிதிவண்டி பயணம் தொடருமளவுக்கு சைக்கிளைப் பராமரிப்பதற்கு, சாஹில் எதிர்பாராத எந்த சூழலிலும் மிகக் கடுமையாக தாக்குப்பிடிக்கிறார். ஒருநாள் இரவில், அவரது சைக்கிளின் டயர் பழுதாகிவிட்டது. விடாமுயற்சியுடன் களைப்பு மேலோங்கிய நிலையிலும் அருகில் இருந்த கிராமத்திற்கு அவரது வண்டிச்சக்கரங்களைத் தள்ளிக்கொண்டு 5 கிமீ நடந்து செல்லவேண்டியிருந்தது.
குறிப்பாக ஒருமுறை, ஒரு மேம்பாலத்தைத் தவறுதலாக கணித்தபோது, சாஹில் அதிபயங்கரமான கணத்தைச் சந்திக்க நேர்ந்தது. பாலத்தின் முகட்டுப்பகுதியை கூடுதலான வேகத்தில் கடந்ததில், அவர் சைக்கிளிலிருந்து தூக்கி வீசப்பட்டார்! கீழே பரவிக்கிடந்த சிறு கற்களினூடாக சறுக்கியவாறு, அவரது கைகள், முழங்கைகளில் காயத்துடன் விழுந்தார். அந்த மதியப்பொழுதை கடுமையான வலியை கவனிக்க எவருமின்றி கழிக்க வேண்டியிருந்தது. பின்னிரவில் ஒரு தன்னார்வலரின் இருப்பிடத்தை அடையும்வரை, பல்லைக் கடித்துக்கொண்டு அசையாத உறுதியுடன் இருக்க வேண்டியிருந்தது.
அவ்வப்பொழுது, கடுங்காற்றும், பருவகால மழைகளும் இணைந்துகொள்வதால், நெடுஞ்சாலைகளில் முழு வேகத்தில் விரையும் சரக்கு வாகனங்களைப் பின்னாலிருந்து பிடித்தபடி, சாஹில் சைக்கிளை விரைந்து செலுத்தும்படி நேர்கிறது. இதனை அவர் விரும்பவில்லை, ஆனால் அப்படிப்பட்ட கடினமான சூழலை சாஹில் இவ்வாறுதான் சமாளிக்க முடிகிறது. இது அபாயகரமானது, ஆனால் தேவைப்படுகிறது, ஏனென்றால் அப்படி செல்வதனால், முக்கிய சந்திப்புகளுக்கு சரியான நேரத்திற்கு சென்றடைய முடிகிறது. சீதோஷ்ணம் கடுமையாக இருக்கும்போது எல்லாம் கடினமான சூழல்கள் இருக்கவே செய்கின்றன. தயார்நிலையில் படுக்கை இல்லாதது அல்லது சாலையோரத்தின் உண்பதற்கே தகுதியில்லாத உணவு போன்ற மற்ற பிரச்சனைகளுக்கும் குறைவில்லை. சாஹில், பாதுகாப்பாகவும், நலமுடனும் இருக்க விழைகிறோம்.
பாதிப்படையக்கூடிய தன்மையுடன், கடுமையான இழப்புகளையும் தாங்கிக்கொள்ள முடியாத நிலையில், சாஹில் எந்த அளவுக்கு உணர்கிறாரோ அதை நன்கு அறிந்தும் இருப்பதாக நம்மிடம் தெரிவித்தார்: அவர் சத்குருவின் அருளின் பாதுகாப்பில் இருக்கிறார். அதன் விளைவாக, பல்லைக் கடித்துக்கொண்டு தாக்குபிடிக்கும் அத்தகைய தருணங்களில், சத்குருவின் அருள் சாஹிலை ஆற்றுப்படுத்துகிறது. அதுமட்டுமின்றி, அவரது தினசரி பயிற்சிகளான ஷாம்பவி மஹாமுத்ரா மற்றும் ஈஷா கிரியாவில் இருந்து அவர் கூடுதலாக பலம் பெறுகிறார்.
சராசரியாக, சாஹில் ஒரு நாளில் 50 லிருந்து 100 கிமீ வரை சைக்கிள் ஓட்டுவார். பெரும்பாலான மக்களின் தைரியத்தையும் இது வெகு விரைவிலேயே வடித்துவிடக்கூடியது. ஆனால் சாஹிலின் தைரியத்தை அல்ல. சத்குருவின் அருள், ஈஷா யோகா பயிற்சிகளிலிருந்து பெறும் சக்தி மற்றும் மனஉறுதியின் வலிமை அவரை மெருகேற்றியதில், ஒரு நாளில் 170கிமீ சைக்கிள் ஓட்டுகிறார். பாராட்டுக்கள் சாஹில்!
2021ல், சாஹில் அவரது அடுத்த வாசிப்புக்கான புத்தகத்தைத் தேடிக்கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக, எடுத்தால் கீழே வைக்கமுடியாத, மரணம் – ‘சொல்லப்படாத ரகசியங்கள்’ புத்தகம் அவருக்கு கிடைத்தது. அவரது ஆர்வம் மேலோங்கவே, சாஹில் தொடர்ந்த தேடலில், ‘பாதையில் பூக்கள்’ என்ற புத்தகத்தில் சத்குருவை மீண்டும் சந்தித்தார். ஒருபடி மேலே சென்று யூடியூப் வீடியோக்களை முழுமையாக உள்வாங்கினார். ஜூலை 2022 வாக்கில், சாஹில் ஏழு நாள் இன்னர் எஞ்சினியரிங் வகுப்பை முடித்துவிட்டார். இந்தக் கட்டத்தில்தான் அவர் தனது விருப்பங்களை ஒருங்கிணைத்தார்.
ஆகஸ்ட் 2022ல், சமீபத்தில் ஈஷா யோக மையத்துக்கு வந்திருந்தபோது, அந்த அற்புதரையே தரிசிக்கும் அதிர்ஷ்டம் சாஹிலுக்கு வாய்த்தது. அவருடனான குறுகிய நேர சந்திப்பில், ஒரு வார்த்தைகூட பேசமுடியாத அளவுக்கு சாஹில் உணர்ச்சிப் பெருக்கினால் மூழ்கடிக்கப்பட்டார். சத்குருவின் இருப்பில் முழுமையாக நனைந்தவராக, “இந்த வாழ்க்கையையும், இந்த நீண்ட சைக்கிள் பயணத்தையும் சற்று சுமூகமாக நிகழ்த்துவதற்கு அவரது ஆசிகளைப் பெற்றார்”. இந்த பதின்ம வயதினரின் நினைவுகூறத்தக்க பயணத்தின் இன்னொரு பாகத்தை வரையறுத்தபடி - பரவசத்தின் கண்ணீர் சாஹிலின் கன்னங்களில் கோலமிட்டது.
அடுத்த 12ல் இருந்து 18 மாதங்களுக்கு உலகளாவிய மட்டத்தில் மாற்றத்தை உருவாக்குவதற்காக, மண் காப்போம் இயக்கத்தை ஆன்லைன் மற்றும் நேரடியாக தினசரி அளவில் முன்னெடுத்துச் செல்லவேண்டியதன் முக்கியத்துவத்தை சாஹில் வலியுறுத்துகிறார். இதனை நாங்கள் மிக்க ஆமோதிக்கின்றோம், சாஹில். இதுவரை சிறப்பாக செய்துள்ளீர்கள், உங்கள் பயணம் மேலும் சிறப்பாக அமைய வாழ்த்துகள் –அளப்பரிய தாக்கத்தினை நீங்கள் ஏற்படுத்துகிறீர்கள்!
சாஹிலின் இருசக்கர சாகசங்களைப் பின்தொடர @withsahiljha, உங்களது போஸ்ட்டில் #SaveSoil மற்றும் #ConsciousPlanet ஐ டேக் செய்யவும்.
மண் காப்போம் இயக்கம் குறித்து மேலும் தெரிந்துகொள்ளவும் இவ்வியக்கத்தின் அங்கமாகவும், savesoil.org