ஈஷா சமையல்

ஜில்லென்ற தேங்காய் பாயசம்

தேவையான பொருட்கள்

தேங்காய் பால் அல்லது பசுவின் பால் - 2 கப்

பனஞ்சர்க்கரை அல்லது சர்க்கரை (அல்லது ஏதாவது இனிப்புச் சுவை) - ¼ கப்

நெய் - 1 மேஜைக்கரண்டி

பாதாம் - 2 மேஜைக்கரண்டி

முந்திரி பருப்பு - 2 மேஜைக்கரண்டி

பேரீச்சம்பழம் (சிறு துண்டுகளாக) - 2 மேஜைக்கரண்டி

ஏலக்காய் பொடி - ¼ தேக்கரண்டி

இளநீர் - ½ கப்

தேங்காய் துருவல் - ½ கப்

செய்முறை

  • பாதாம் மற்றும் முந்திரி பருப்பை நறுக்கி தனியாக வைக்கவும்; பேரீச்சம் பழத்தை ½ அங்குல துண்டுகளாக நறுக்கவும்.
  • ஒரு வாணலியை சூடுபடுத்தவும்; நெய் சேர்க்கவும். நெய் சூடானதும், பாதாம் மற்றும் முந்திரி பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும். பிறகு பேரீச்சம் பழத்துண்டுகளை 15-30 நொடிகள் வதக்கவும். எல்லாவற்றையும் ஒரு தட்டில் போட்டு தனியாக வைக்கவும்.
  • தேங்காய் பாலை (அல்லது பசுவின் பால்) அதே வாணலியில் சேர்த்து, நன்றாக கொதி வந்ததும், குறைந்த தீயில், பால் பாதியளவிற்கு சுண்டும் வரை வைக்கவும். பனஞ்சர்க்கரை (அல்லது ஏதாவது ஓர் இனிப்பு சுவை) மற்றும் ஏலக்காய் பொடி சேர்க்கவும். அடுப்பை அணைத்து, பாலை ஆற வைக்கவும்.
  • பால் நன்றாக ஆறியவுடன், தேங்காய் துருவலையும், இளநீரையும் சேர்த்து கலக்கவும். வறுத்த கொட்டைகளையும், பேரீச்சம் பழத்துண்டுகளையும் போட்டு அலங்கரிக்கவும்.
  • சுவையான தேங்காய் பாயசம் தயார். இதை உடனடியாகவோ அல்லது குளிர்சாதனப் பெட்டியில் குளிர்வித்தோ பரிமாறலாம்.