சத்குரு அவர்கள் தனது 30,000கிமீ பயணத்தில் தொடர்ந்து இடையராது சென்றுக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், அவருடைய இந்த முயற்சிக்கு பெருவாரியான மக்களிடமிருந்து ஆதரவு குரல்கள் குவிந்துக்கொண்டிருக்கின்றன. உலகின் பல பகுதிகளிலிருந்தும் செல்வாக்கு நிறைந்த பலர் நம் காலத்தின் மிக முக்கிய பிரச்சனையைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த முன்வந்துள்ளனர். மண் காப்போம் இயக்கத்திற்காக உடன் நின்று ஆதரவு அளிக்கும் பலரில் சிலரது மட்டும் இங்கே.
முனைவர் இரத்தன் லால், ஒஹியோ மாநில பல்கலைக்கழகத்தில் மண் அறிவியலில் புகழ்பெற்ற பேராசிரியர், மேலும் பெருமைமிக்க 2020 உலக உணவு பரிசினை பெற்றவர். அவர் சத்குரு அவர்களுடன் மண்ணினை ஒரு வாழும் / உயிருள்ள ஒன்றாக அங்கீகரிக்க வேண்டியதின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசுகின்றார்.
மிகவும் பிரபலமான கொலம்பிய பாடகர், பாடலாசிரியர் மற்றும் நடிகருமான மலுமா மண் பாட்டினை சத்குரு அவர்களுடன் அறிந்துகொண்டு அதனை முழு இதயத்துடன் பாடுகின்றார்.
தவத்திரு 14வது தலாய் லாமா Conscious Planet - மண் காப்போம் முன்னெடுப்பிற்கு அவரது ஆதரவினை வழங்கியுள்ளார்.
அல்டிமேட் பைட்டிங் சேம்பியன்சிப் (UFC)ன் வண்ண வர்ணனையாளர் மற்றும் நகைச்சுவையாளர், ஜோ ரோகன், "த ஜோ ரோகன் அனுபவங்கள்" என்ற அவரது வெற்றிபெற்ற வலையொளி (போட்காஸ்ட்) யின் ஒரு அத்தியாயத்தில், சொர்க்கம் முதல் மண் வரையிலான பல்வேறு தலைப்புகளைப் பற்றி சத்குரு அவர்களுடன் கலந்தாய்கிறார்.
ஆங்கில பிரைமட்டாலஜிஸ்ட் (குரங்குகள், சிம்பன்சிகள் மற்றும் மனித ஆய்வாளர்) மற்றும் மானுடவியலாளர், முனைவர் ஜேன் குட்ஆல், DBE, ஜேன் குட்ஆல் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் ஐநா அமைப்பின் அமைதி தூதுவர், இந்த உலகின் மிகப்பெரிய சுற்றுச்சுழல் அமைப்பாக மண் இருப்பதினைப் பற்றி பேசுவதுடன் நம் அனைவரையும் மண் காப்போம் இயக்கத்திற்காக ஒன்றுசேர வேண்டி வலியுறுத்துகிறார்.
இந்திய கிரிக்கெட் வர்ணணையாளர் மற்றும் பத்திரிக்கையாளர், ஹர்ஷா போக்லே, மண் காப்போம் இயக்கத்திற்கு தனது முழுமனதான ஆதரவினை வழங்கியுள்ளார்.
கிராமி பரிசு பெற்றவரும் மல்டி-ப்ளாடினம் R&B பாடகர் - பாடலாசிரியருமான SZA, மண் காப்போம் இயக்கத்திற்கான அவரது ஆதரவினை பகிர்கின்றார்.
டிம் கிறிஸ்டோபர்சென், ஐக்கிய நாட்டின் சுற்றுச்சுழல் திட்டத்தின் (UNEB) நேச்சர் ஃபார் கிளைமேட் கிளையின் தலைவர், மண்ணின் முக்கியத்துவத்தையும் மண் காப்பதற்கான அவசரத் தேவையையும் வலியுறுத்துகிறார்.
தமன்னா பாட்டியா சத்குரு அவர்களுடன், விழிப்புணர்வினை ஏற்படுத்தவும் மண் காப்போம் இயக்கத்தில் மக்களின் பங்கேற்பை ஊக்குவிக்கவும் அவர் மேற்கொண்டுள்ள ஐரோப்பா வழியான அவரது பயணத்தின் போது உரையாடுகின்றார்.
உலக புகழ்பெற்ற வாழ்க்கை மற்றும் வணிக செயல்திட்ட வல்லுநர், டோனி ராபின்ஸ், மண் மற்றும் மண் காப்போம் இயக்கம் பற்றி மேலும் அதிகம் கற்றுக்கொள்ள நம்மை அழைக்கின்றார்.
சிரிய-பாலஸ்தீன-அல்ஜீர நடிகை மற்றும் பாடகி நெஸ்ரீன் தாஃபெஷ் மண் காப்போம் இயக்கத்திற்கு தனது ஆதரவினை பகிர்கின்றார்.
அமெரிக்க நடிகர் மற்றும்திரைப்பட தயாரிப்பாளர் ராப்பர் மார்க் வால்பெர்க் மண் காப்போம் இயக்கத்திற்கு நம்முடைய பங்களிப்பை வழங்குமாறு நம் ஒவ்வொருவரையும் கேட்டுக்கொள்கின்றார்.