பிற மொழிகளில் வாசிக்க:
English | Hindi

காற்றெனும் நகரும் படிக்கட்டு

நான் அசைவின்றி நிற்கையில்
உயிர்மூச்சின் கர்ஜனை என் நுரையீரலை நிரப்பி
ஒவ்வொரு உயிரணுவுக்குள்ளும் ஊடுருவுகிறது.

வெறும் உயிர்நாடியல்ல
கடந்து செல்வதற்கான ஏணிப்படி
இதன் பாதை
சுரப்பிகள், கோழை மற்றும் வாயுக்கள் நிறைந்த
உடலே ஒரு தனியுலகாக மாறாதவாறு பார்த்து
அதைக் கடந்து நாம் மேலெழ அனுமதிக்கிறது.
அதோடு மனதின் வலையோ
மெல்லிய சிலந்தி பின்னும்
நுட்பமான வலையைப் போன்றது
அது தன் வழியில் வரும் அனைத்தையும் அகப்படுத்தும்
ஆனால் அதுவும் கூட அந்த வலையை விட்டு
வெளியே செல்ல முடியாது.

அசைவற்று இருக்கையில் இந்த எளிய மூச்சு
கடந்து செல்வதற்கான நகரும் படிக்கட்டாகிறது

Share This