சத்குரு எக்ஸ்குளூசிவ்

தேஜா வூவின் நூதனக் காட்சி: உங்களது கர்மவினைச் சுமையை இலேசாக்குவதற்கு அது எப்படி உதவமுடியும்

ஒரு நிகழ்வை ஏற்கனவே அனுபவித்திருக்கும் ஒரு வினோதமான தேஜா வூ உணர்வை எப்போதாவது உணர்ந்ததுண்டா? இதனை உங்களது உடலமைப்பின் ஆழமாகப் பதிக்கப்பட்ட ஞாபகத்துடன் தொடர்புபடுத்தி, இந்த ஆர்வமெழுப்பும் நூதனக் காட்சிக்கு சத்குரு விளக்கமளிக்கிறார். தேஜா வூவைப் பயன்படுத்துவதனால், விழிப்புணர்வான கர்மவினையின் பாதுகாப்பான ஒரு கூட்டினைக் கட்டமைத்து, முடிவாக உங்களின் கர்மவினைச் சுமையை நீங்கள் இலகுவாக்கிக்கொள்ள உதவி செய்யும்படி, அதிகம் அறியப்படாத ஒரு பயிற்சியை அவர் நமக்கு வழங்குகிறார். உங்கள் சாதனாவை அதிக முயற்சியின்றி செய்து, வாழ்வினூடாக எளிதாகப் பயணப்படுவதற்கு இந்தக் கருவியை எப்படிப் பயன்படுத்துவது என்று கற்றுக்கொள்ளுங்கள்.

கேள்வி: நமஸ்காரம் சத்குரு, எனக்கு அடிக்கடி, குறிப்பாக நான் மௌனத்தில் இருக்கும்போது தேஜா வூ ஏற்படுகிறது. அது ஏன் நிகழ்கிறது என்று உங்களால் விளக்கமுடியுமா?

வெறும் கற்பனை, மறைபொருள் காட்சி, அல்லது கர்மவினை ஞாபகம்?

சத்குரு: தேஜா வூ என்பது, ஏற்கனவே கடந்த கால வாழ்வில் பார்த்துள்ள அல்லது அனுபவித்துள்ளதாக பலரும் கூறுகின்ற ஒரு நூதனக் காட்சியாக உள்ளது. வெளியுலகத்தில் ஒரு பொருள்தன்மையான அல்லது ஒரு உண்மையான சூழலைப் பற்றியதாக தேஜா வூ இருக்கவேண்டிய அவசியமில்லை என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம். அது கர்மவினையின் புரிதலில், முக்கியமாக ஞாபகம் என்ற அர்த்தத்தில், ஒரு உள்தன்மையின் சூழலாக இருக்கமுடியும்.

அணு சார்ந்ததாக அல்லது பிரபஞ்சம் சார்ந்ததாக இருந்தாலும், எல்லாப் பொருள்தன்மையான வடிவங்களும், ஞாபகத்தின் விளைவாகவே இருக்கின்றன. ஞாபகம் இல்லையென்றால், எந்தவிதமான சுழற்சி செயல்முறையும் இருக்காது. அணுக்களை ஒரு குறிப்பிட்ட வழியில் இயங்கச்செய்யும், ஒரு குறிப்பிட்ட விதமான ஞாபகம் இல்லாமல், அணுக்களால் தங்களையே நீடித்து வைத்திருக்க முடியாது. இதற்குப் பொதுவாக பிரபஞ்ச சக்திகள் காரணம் என்ற நிலையில், இந்த சக்திகள் எல்லா இடத்திலும் ஒரேவிதமாக நடந்துகொள்ளும் எதார்த்தமே, அவைகள் ஞாபகத்தின் ஒரு வடிவமாக இருப்பதாக வெளிப்படையாக விவரிக்க முடியும்.

அணு சார்ந்ததாக அல்லது பிரபஞ்சம் சார்ந்ததாக இருந்தாலும், எல்லாப் பொருள்தன்மையான வடிவங்களும், ஞாபகத்தின் விளைவாகவே இருக்கின்றன. ஞாபகம் இல்லையென்றால், எந்தவிதமான சுழற்சி செயல்முறையும் இருக்காது.

இந்த சக்திகள் எனப்படுபவை, அணுக்கள், பிரபஞ்ச வெளி, அமீபாக்கள், மனிதர்கள், மற்றும் ஒவ்வொரு உயிரிலும் ஒரேவிதமாக நடந்துகொள்ளும் நிலையில், ஒரு குறிப்பிட்ட ஞாபகம் எல்லாவற்றையும் திரும்பத்திரும்ப செய்யவைக்கிறது என்று பொருள்படுகிறது.

ஆற்றல் மிகுந்த தேக்கம்: கர்மவினை சுழற்சிகளைப் புரிந்துகொள்ளுதல்

நீங்கள் ஒன்றை உணராத நிலையில், ஒரு வட்டத்தில் சென்றுகொண்டிருந்தால், நீங்கள் ஒரு பயணம் செய்துகொண்டிருப்பதாக உணரக்கூடும். ஆனால் நீங்கள் வட்டங்களில் சென்றுகொண்டிருப்பதை உணர்ந்தால், நீங்கள் தேங்கியிருப்பதாக அறிந்துகொள்கிறீர்கள். அது ஒரே சூழ்நிலையாக இருக்கிறது, ஆனால் உங்களது புரிந்துணர்தல் மாறுபடுகிறது. வட்டங்களில் சென்றுகொண்டிருப்பது என்றால் ஆற்றல்மிக்க தேக்கம் என்று அர்த்தம்.

உங்களது மனரீதியான மற்றும் உடல்ரீதியான கட்டமைப்புக்குள் நிகழ்ந்துகொண்டிருக்கும் எல்லா ஞாபகங்களும், அனுபவங்களும், இயற்கையில் திரும்பத்திரும்ப நிகழ்பவையே. ஒரேவிதமான முந்தைய சம்பவம் தெளிவில்லாத ஞாபகமாக தேய்ந்துபோகும்போது, சில மீள்நிகழ்வுகள் சம்பவிக்கின்றன. ஒரே விஷயம் மீண்டும் நிகழும்போது, முந்தைய சம்பவம் உங்கள் ஞாபகத்தில் இன்னமும் தெளிவாக இருந்துகொண்டிருந்தால், ஒரே விஷயம் இரண்டுமுறை நிகழ்ந்ததாக உணர்கிறீர்கள்.

சூர்ய க்ரியாவைச் செய்வதற்காக நீங்கள் கண்களை மூடும்போது, அது இயல்பாக நிகழ வேண்டும், ஏனென்றால் நீங்கள் அந்த ஞாபகப் பதிவுகளை உடலமைப்பில் மிகவும் உறுதியாக உருவாக்கியுள்ளீர்கள்.

உடல்ரீதியான யோகப்பயிற்சிகள் என்று வரும்போது, உடலில் ஒரு வலிமையான தேஜா வூவை உருவாக்குவதற்கு நாம் விரும்புகிறோம். சூரியக்கிரியா செய்வதற்கு நீங்கள் கண்களை மூடும்போது, அது எளிதாக நிகழவேண்டும் ஏனென்றால், வேறொரு பிறவியில் அதை நீங்கள் அறிந்திருந்தது போலவும், அதனால் இங்கே அது முயற்சியில்லாமல் நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்றும் உணருமளவுக்கு, உங்கள் உடலமைப்புக்குள் அந்த ஞாபகத்தை நீங்கள் மிக வலிமையாக கட்டமைத்துள்ளீர்கள். சாதனா, இந்த தேஜா வூவைக் கட்டமைக்கும் ஒரு வழியாக இருப்பதால், நீங்கள் அதிகப்படியான புதிய கர்மவினையை சேகரிப்பதில்லை. இதை உங்களது விழிப்புணர்வுக்குள் கொண்டுவருவதற்குப் பல பிறவிகள் தேவைப்படலாம்.

குறைந்தபட்ச சுமையுடன் பயணிப்பது: உங்களது சுமையை இறக்கிக்கொள்ளும் கலை

சாதனாவின் நோக்கம் என்னவென்றால், உங்களுக்கே உரித்தான கர்மவினையின் கூட்டினை உருவாக்கிக்கொள்வதனால், வெளியிலிருக்கும் விஷயங்கள் உங்களைத் தொடமுடியாது என்பதுடன் உங்களால் சேகரிக்கப்படவும் முடியாது. நீர் அருந்துவதைப் போன்ற எளிமையான விஷயங்களைக்கூட பல பிறவிக்காலங்களாக நீங்கள் செய்துள்ளதாக உணருமளவுக்கு, கூடு அதிக வலிமையானதாக இருக்கவேண்டும்.

நீங்கள் அதிகப்படியான வெளிவிஷயங்களைச் சேகரித்தால், ஒரு நீண்ட பயணத்தைச் செய்வதற்கு நீங்கள் விரும்பமாட்டீர்கள். இதுதான் கர்மா – விழிப்புணர்வின் உச்சம் தொட முயற்சிப்பதற்குப் பதில், உங்கள் சௌகரியமான வட்டத்துக்குள் தங்கியிருப்பதையே நீங்கள் தேர்ந்தெடுப்பீர்கள்.

சாதனாவின் நோக்கம் என்னவென்றால், உங்களுக்கே உரித்தான கர்மவினையின் கூட்டினை உருவாக்கிக்கொள்வதனால், வெளியிலிருக்கும் விஷயங்கள் உங்களைத் தொடமுடியாது என்பதுடன் உங்களால் சேகரிக்கப்படவும் முடியாது.

எல்லாக் கருவிகளும் சாதனாவும் எதற்கென்றால், நீங்கள் புதிய சுமையை சேகரிக்காமலும் மற்றும் பழைய சுமையை விழிப்புணர்வாக விலக்குவதை உறுதிப்படுத்தவுமே இருக்கின்றன. சொர்க்கத்தின் வாயிற்கதவுகள் பிரம்மாண்டமாக, பளபளப்பாக இல்லாமல், குறுகலான சிறு துவாரமாக இருந்தால், சுமையில்லாமல் இருப்பவர்கள் மட்டும்தான் அதனுள் செல்லமுடியும். ஏனென்றால் உங்களது சுமையுடன் நுழைவதற்கு முயற்சித்தால், நீங்கள் சிக்கிக்கொண்டுவிடுவீர்கள். அதிக சுமையான பாரங்களைச் சுமந்துகொண்டு உங்களால் குறுகிய இடங்களில் நுழையவோ அல்லது செங்குத்தான சரிவுகளில் ஏறவோ முடியாது. அதனால்தான் குறைந்தபட்ச சுமையுடன் பயணிப்பது முக்கியம்.

முயற்சியற்ற ஒரு இருத்தலுக்காக கடந்த காலத்திலிருந்து

உங்களது காலைநேர சாதனாவின்போது, இதை நீங்கள் முயற்சி செய்யவேண்டும். நீங்கள் சூரியக் கிரியாவையோ அல்லது குருபூஜையையோ செய்யும்போது, இதனையே பல பிறவிகளாக நீங்கள் செய்துகொண்டிருப்பதாக கற்பனை செய்யுங்கள். அதை தேஜா வூ போலச் செய்வதே நோக்கம். ஒருவிதத்தில், நீங்கள் உங்கள் உறக்கத்தில் விழிப்புடன் இருப்பதற்குக் கற்றுக்கொள்கிறீர்கள் அல்லது பெரும்பாலான நேரமும் உறக்கத்தில் இருப்பது, இரண்டுமே நல்லது. இல்லையென்றால், நீங்களே உங்களை களைப்படையச் செய்கிறீர்கள்.

பெரும்பகுதி நாளில் உறங்குவதற்கு நீங்கள் கற்றுக்கொண்டால், நீங்கள் எல்லாவற்றையும் இலகுவாகச் செய்கிறீர்கள், ஏனென்றால் அதைத்தான் நீங்கள் ஆயிரக்கணக்கான பிறவிகளாகச் செய்துகொண்டிருக்கிறீர்கள். உங்களது உடலின் ஒவ்வொரு அசைவும், உங்களது மனதின் ஒவ்வொரு செயல்பாடும் லட்சக்கணக்கான முறைகள் அனுபவித்தவையாக உள்ளன. நீங்கள் ஒரு விழிப்புணர்வான முயற்சியினை மேற்கொண்டால், எல்லாவற்றையும் நீங்கள் தேஜா வூ வாகச் செய்யமுடியும். பெரும்பாலான நாளில் நீங்கள் உறங்கிக்கொண்டிருக்கும் நிலையிலேயே எல்லாவற்றையும் திறமையாகச் செய்வீர்கள்.

விழிப்புணர்வு நல்லது – தளைகளற்ற நிலையில் இருப்பது மேலானது.

நீங்கள் கேட்கலாம், “இது என்ன, சத்குரு? இத்தனை வருடங்களாக, விழிப்புடன் இருப்பதற்கு நான் முயற்சித்து வந்துள்ளேன், ஆனால் இப்போது நீங்கள் என்னை உறங்குமாறு கூறுகிறீர்களே?” விழிப்புணர்வு நல்லது – தளைகளற்ற நிலையில் இருப்பது மேலானது. ஆனால் அதற்கு, மேலும் அதிகமாகத் தேவைப்படுகிறது. உங்களால் விழிப்புணர்வாக இருக்கமுடியவில்லை என்றால், தளைகளற்ற நிலை அடையமுடியாததாகத் தோன்றலாம்.

குறைந்தபட்சம் காலைநேரப் பயிற்சிகளின்போதாவது, இந்த சாதனாவை பல பிறவிக் காலங்களாக நீங்கள் செய்துகொண்டிருப்பதாக கற்பனை செய்துகொள்வதன் மூலம், இந்த தேஜா வூ வை உருவாக்க முயற்சி செய்யுங்கள். இதன் நோக்கம் என்னவென்றால், உங்கள் உறக்கத்தில்கூட, உங்களது குருபூஜை, சூரிய கிரியா, மற்றும் உச்சாடனத்தை உங்களால் ஒழுங்காகச் செய்யமுடியும். நீங்கள் உங்களுக்குள் அதைக் கொண்டுவந்தால், நான் அதிசயங்கள் செய்வேன்.