ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாக, ஈஷா அவுட்ரீச்சின் தென்சேரிமலை உழவன் உற்பத்தியாளர் நிறுவனம் 2023-24 நிதியாண்டிற்கான சிறந்த செயல்திறன் மிக்க FPO என்ற மதிப்புமிக்க விருதைப் பெற்றுள்ளது. வேளாண் மேம்பாடு மற்றும் கிராமப்புற மேம்பாட்டிற்கான இந்நிறுவனத்தின் சிறந்த பங்களிப்பை நபார்டு வங்கி (தமிழ்நாடு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கி) அங்கீகரித்துள்ளது.
மண் காப்போம் இயக்கத்தின் ஓர் அங்கமாக ஈஷா அவுட்ரீச் மூலம் வழிநடத்தப்படும் 25 FPOகளில் ஒன்றான தென்சேரிமலை உழவன் உற்பத்தியாளர் நிறுவனம், கோவை சுல்தான்பேட்டை பகுதியில் நிறுவப்பட்டுள்ளது. முதல் ஆண்டில், 750 விவசாயிகளை இந்நிறுவனம் ஈர்த்துள்ளது. பிரதானமாக தென்னை சாகுபடி மற்றும் சந்தைப்படுத்தல் மூலம், இது ரூ. 1.58 கோடி விற்பனையை எட்டியுள்ளது. ஈஷா அவுட்ரீச்சின் FPO முன்னெடுப்புகள் மூலம் ஒட்டுமொத்தமாக 9,377 விவசாயிகள் பயனடைவது குறிப்பிடத்தக்கது.
தென்சேரிமலை FPOன் பாராட்டத்தக்க இந்த அம்சங்கள், இயற்கை சார்ந்த வேளாண் முறைகளில் அதன் புதுமையான அணுகுமுறையையும், உள்ளூர் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் அதன் குறிப்பிடத்தக்க தாக்கத்தையும் எடுத்துக்காட்டுகிறது.
உலகம் முழுவதிலுமிருந்து 1,100 பங்கேற்பாளர்கள் சாதனபாதா 2024 நிகழ்ச்சியில் இணைந்துள்ளதால், ஈஷா யோக மையத்தில் உற்சாகமும் ஆற்றலும் அதிகரித்துள்ளது.
கடந்த சில வாரங்களாக, பங்கேற்பாளர்கள் தங்களுக்குரிய சேவையில் (தன்னார்வ செயல்பாடுகள்) ஆழமாக ஈடுபட்டு, தீவிரமான தினசரி அட்டவணைக்கு ஏற்றவாறு தங்களை தகவமைத்துக் கொண்டுள்ளனர்.
அடுத்த 7 மாதங்களுக்கு இந்நிகழ்ச்சி தொடரும் என்பதால், பங்கேற்பாளர்கள் தங்களுக்காகக் காத்திருக்கும் உள்நிலை வளர்ச்சியையும், தெளிவையும், புத்திக்கூர்மையையும் அனுபவித்து மகிழ்ந்திட, உற்சாகத்துடனும் எதிர்பார்ப்புடனும் தங்கள் பயணத்தை தொடர்கிறார்கள்.
சமீபத்தில், சத்குரு குருகுலத்தின் 2024 ஹடயோகா ஆசிரியர் பயிற்சிக் குழுவினர், ஈஷா யோக மையத்தில் தங்கள் 5 மாத பயிற்சிக்கான பயணத்தைத் தொடங்கினர். உலகெங்கிலும் இருந்து இணைந்துள்ள பங்கேற்பாளர்கள், பாரம்பரிய ஹடயோகாவில் 1650 மணிநேர தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியானது, பாரம்பரிய ஹடயோகாவின் ஆழ்ந்த அறிவியலை அதன் முழு ஆழத்துடனும் பரிமாணத்துடனும் புத்துருவாக்கம் செய்யும் நோக்கில், பிரத்யேகமாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஆதியோகி ஆலயத்தில் நடத்தப்படுகிறது.
விரிவான இந்த பயிற்சியானது, யோகப் பயிற்சிகளை அதன் தூய்மையான வடிவத்தில் உலகளவில் பகிர்ந்திடும் விதமாக, இந்த அர்ப்பணைப்புமிக்க தனிமனிதர்களைத் தயார்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.