அனைவருக்கும் பிடித்து
அவர்கள் தங்களை முதலீடு செய்திருக்கும்
சாதாரண தர்க்கத்தில் என் ஜாலத்தை
புதைத்து வைத்திட நான்
எவ்வளவு பாடுபட்டுள்ளேன்.
மண்ணின் பாரத்தைத் தாங்காத
விதையைப் போல, என் மாயாஜாலம்
முளைவிட்டு மேலே வளர்ந்து
அற்பமான தர்க்கத்தின் கட்டமைப்புகள்
அனைத்தையும் அழித்துவிடும்