உறவுகள்

உங்களுடைய ஆன்மீக நாட்டம் உங்கள் உறவுகளை அழிக்கிறதா?

அமைதியான, ஆனால் தீவிரமான ஆன்மீக நாட்டத்தில், உள்தன்மையின் நல்வாழ்வுக்கான தேடுதல் சில நேரங்களில் குடும்பச் சச்சரவினால் தடைபடலாம். திருமண மோதல்களின் சிக்கலில், சாதனா அல்லது ஆன்மீகப் பயிற்சியானது ஒரு குற்றவாளியாக இருக்கக்கூடுமா என்ற கருத்தை சத்குரு தனக்கேயுரிய நகைச்சுவையும், ஞானமும் இழையோடு பிரித்து ஆராய்கிறார். ஆன்மீகப் பயிற்சியின் உண்மையான இயல்பையும், உறவுப் பிணைப்புகளின் மீதான அதன் தாக்கத்தையும் குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்.

கேள்வியாளர்: நமஸ்காரம், சத்குரு. எனது கணவரும், நானும் ஈஷாவினால் வழங்கப்பட்ட சாதனாவை பயிற்சி செய்கிறோம், ஆனால் தினசரி அளவில் நாங்கள் மோதல்களை சந்திக்கிறோம். இது ஆன்மீகப் பயிற்சியின் ஒரு பகுதியாக உள்ளதா?

சத்குரு: நீங்கள் ஆன்மீக செயல்முறை மீது குற்றம் சுமத்துகிறீர்களா? ஆன்மீகம் எப்போதுமே விவாகரத்துக்கான ஒரு நல்ல சாக்குப்போக்காக இருந்து வந்துள்ளது. அவனை அல்லது அவளை வெறுக்கிறேன் என்பதால் நீங்கள் விலகிச்செல்வதாகக் கூறினால், பிறகு மக்கள் கணவனை அல்லது மனைவி குழந்தைகளை விட்டுச் செல்வதற்கு, இவன்/இவள் எந்த விதமான ஆண்/பெண் என்று நினைக்கலாம். ஆனால் நீங்கள், எனக்கு ஒரு ஆன்மீக தாகம் உள்ளது,” என்று கூறினால், அது சற்றே வித்தியாசமாக இருக்கலாம். கௌதம புத்தர் ஆன்மீகத் தேடுதலில், அவரது மனைவியையும் சிறு குழந்தையையும் விட்டுச் சென்றது உங்களுக்குத் தெரியும் – ஆகவே வரலாற்று ஆதரவும் இதில் உண்டு.

நீங்கள் சமநிலைக்கு வரும்போதுதான் உங்களது புத்திசாலித்தனம், உங்களுக்கும் உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கும் உண்மையாகவே உபயோகமாக உள்ளது. இல்லையென்றால், மனித புத்திசாலித்தனமானது பிரபஞ்சத்திலேயே மிக வக்கிரமான விஷயமாக இருக்கக்கூடும்.

உங்கள் கணவர்/மனைவியுடன் நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பது உங்களது விஷயம், நான் அதற்குள் வரவில்லை. எப்படியிருந்தாலும், சாதனா என்பது உள்முகமான செயல்முறை, அது நீங்கள் வேறு எவருடனும் செய்யும் ஒரு விஷயமல்ல. நாம் அனைவரும் ஒரே இடத்தில் அமர்ந்திருக்கலாம், ஆனால் நீங்கள் அவர்களுடன் பயிற்சிகள் செய்வதில்லை; பயிற்சிகளை நீங்கள் உங்களுக்குள் செய்கிறீர்கள்.

சாதனா என்பது உள்முகமான செயல்முறை, அது நீங்கள் வேறு எவருடனும் செய்யும் ஒரு விஷயமல்ல.

என் தந்தையார், கல்விரீதியாக சாதித்த வெற்றிகரமான ஒரு மனிதராக இருந்த காரணத்தினால், நான் சிறுவனாக இருந்தபோதே, என் தந்தை அவரது மகன் அந்த சாதனை மரபைச் சுமக்கவேண்டும் என்று எதிர்பார்த்தார். அவர் தனது மருத்துவப் புத்தகங்கள் மற்றும் குறிப்புகள் அனைத்தையும் நான் என் தலையில் ஏற்றிக்கொள்வேன் என்று நம்பிக்கொண்டு, அவைகளைப் பாதுகாத்திருந்தார். ஆனால் ஐந்து அல்லது ஆறு வயதிலேயே, நான் வேறு எங்கோ இருந்தேன். அவர்கள் என்னிடம் புத்தகத்தைக் கொடுத்தபோது, நான் ஒரு வார்த்தையும் படிக்கமாட்டேன், என் கண்ணின் கருவிழிகளை இங்கும், அங்கும் நகர்த்தவும் மாட்டேன். நான் முழுமையாக ஈர்க்கப்படுவதற்கு, ஒரு காகிதத்தின் சிறிய புள்ளி ஒன்று போதுமானதாக இருந்தது.

எனது ஒவ்வொரு மாத மதிப்பெண் அட்டையைப் பார்த்தபோதும், அவர் ஏன் வருத்தமடைய வேண்டும் என்பது எனக்குத் தெரியவில்லை. 12 வருடங்களாக, மாறாமல் நான் எடுத்த மதிப்பெண், மிக மதிப்பு வாய்ந்த எண் – பூஜ்யம்; அதைக்காட்டிலும் அதிகமான எதையும் எடுக்காமல் இருப்பதில் உறுதியாக இருந்தேன். என் தந்தை என்னிடம் பேசுவதற்கு வந்தபோது, ஆரம்பத்தில், “இந்தப் பிள்ளையை என்ன செய்வது? இவனுக்கு என்ன நிகழுமோ?” என்று இதைப்போன்ற எதையோ அவர் கூறுவதை நான் கேட்டேன். சிறிது நேரம் கழித்து, சொற்களிலிருந்து என்னால் எந்த அர்த்தத்தையும் புரிந்துகொள்ள முடியவில்லை; எனக்கு சப்தம் மட்டுமே கேட்டது. பிறகு, எனக்கு சப்தமும்கூடக் கேட்கவில்லை. சிறிது காலம் கழித்து, நான் அவரைக்கூட அதற்குப்பின் பார்க்கவில்லை – ஒரு சக்தி குமிழ் அங்குமிங்கும் சுற்றுவதை மட்டும்தான் நான் கண்டேன்.

ஆன்மீக செயல்முறை என்றால் எல்லா உறவுகளும் உடைந்துவிடும் என்பது அர்த்தமல்ல.

உங்கள் கேள்விக்கு பதில், நீங்கள் தியானம் செய்ய விரும்பினால், தொலைவு ஒரு அற்புதமான விஷயம். யாரும் உங்களிடம் தொந்தரவு செய்வதில்லை.

அனைவரும் ஒரு பிணைப்புக்கான தேடலில் உள்ளனர். நீங்கள் சுதந்திரம் மற்றும் விடுதலையைத் தேடிக்கொண்டிருப்பதால் இங்கே வந்தீர்கள் என்று நான் நினைத்தேன். உங்கள் மனதில் முடிவு செய்துகொள்ளுங்கள், நீங்கள் ஒரு பிணைப்புக்கான தேடலில் உள்ளீர்களா, அல்லது விடுதலைக்கான தேடலில் உள்ளீர்களா? நீங்கள் விடுதலையைத் தேடும்போது, ஒட்டுமொத்த உலகமும் உங்களைத் தனிமையாக விட்டுவிட்டால், அது அற்புதமானது. உங்கள் கணவரை அல்லது மனைவியைக் கைவிடுவதற்கு, சாதனாவை ஒரு சாக்காகப் பயன்படுத்துவது வழியல்ல. அதற்கு சாதனா காரணமல்ல, ஆனால் ஏற்கனவே உங்களுக்குப் பிரச்சனை இருப்பதுதான் காரணம்.

ஆன்மீக செயல்முறை என்றால் எல்லா உறவுகளும் உடைந்துவிடும் என்பது அர்த்தமல்ல. அதற்கு அர்த்தம், ஒவ்வொன்றும் விழிப்புணர்வாக மாறுகிறது. நீங்கள் எதையும் நிர்ப்பந்தமாக செய்யாதபோது, அதுவே சிறப்பாக இருப்பதற்கான வழி. ஒவ்வொரு கணமும் நீங்கள் விழிப்புணர்வாகத் தேர்வு செய்யும்போது, நீங்கள் தொடர்புகொள்ளும் அனைத்தும் ஒருவிதமான அழகுடன் இருக்கிறது. நீங்கள் அதனுடன் நிர்ப்பந்தமாக சிக்கிக்கொள்ளும்போது, அனைத்தும் ஒருவிதத்தில் அவலக்ஷணமாக இருக்கிறது. ஆகவே, உங்கள் திருமணம் அல்லது விவாகரத்துக்கும், ஆன்மீக செயல்முறைக்கு எந்தத் தொடர்புமில்லை, அது ஒரு தேர்ந்தெடுத்தல்.