வாழ்வின் அசைவில்
உடல், மனம், உயிர்சக்தியின் அசைவில்
நாம் அனைவரும் தனிமனிதராக,
தனித்தனியாக, தனித்தனி இருப்பாக ஆகிறோம்
மனிதர்கள் மட்டுமல்ல, அனைத்துயிர்களும்
தனித்தனியாவது அசைவில் மட்டும்தான்.
ஆனால் அசைவின்மையில் ஒருமை உள்ளது
நிச்சலனம்தான் கருப்பொருள்
அசைவு என்பது மேற்பரப்பு மட்டுமே.
மேற்பரப்பின் ஆனந்தமான வெளிப்பாடு
ஆனந்தமாக இருப்பது உயிரின்
கருப்பொருளில் வேரூன்றி இருக்கும்போதுதான்.
நாம் மரணத்தில் மட்டுமே அசைவின்றி ஆவோமா
அல்லது வாழும்போதே கருப்பொருளான உயிரின்
நிச்சலனத்துடைய அழகை அறிவோமா?