
ஒரு இடைவிடாத பயன்மேம்பாட்டு யுகத்தில், உள்ளார்ந்த மேதைமையை வளர்த்தெடுக்கும் மறந்துபோன கலை ஒன்று உள்ளது. மனித ஆற்றலை மறு வரையறை செய்யுமளவுக்கு, இந்த மண் மனிதர்களைக் கடைந்தெடுத்து பிரகாசமாக்கியுள்ளது. புத்திகூர்மையின் தீப்பொறி மற்றும் மூளையின் வாணவேடிக்கைகளுக்கான லிங்கபைரவியின் பக்தி மற்றும் அருளின் சாம்ராஜ்யத்துக்கு வரவேற்கிறோம். அனைத்து நிலைகளிலும் மேம்படுத்துதலை விரும்புகிறீர்களா? மேலும் வாசியுங்கள்.
இந்த நிலப்பரப்பும், கலாச்சாரமும், அதன் ஒருங்கிணைப்புத்திறன்களின் அடிப்படையில் அல்லாமல், தனிமனித மேதைமையை வெளிப்படுத்துவதன் அடிப்படையில், மனித வரலாற்றில் நீண்ட நெடிய காலத்துக்கு செழிப்பும், மகத்தான வெற்றியும் அடைந்திருந்தது. கடவுள்களும் பொறாமை கொள்ளும் விதமான எண்ணற்ற அற்புதமான மனிதர்களை நாம் உருவாக்கியுள்ளோம்.
வாழ்க்கை எப்படி அதன் சிறப்பு நிலையை அடைகிறது என்பதை நாம் அறிந்த நிலையில், நமது செயல்பாடுகளின் வெற்றியானது, அளவில்லாமல் வெளிப்படும் மேதைமை அல்லது புத்திகூர்மையிலிருந்தே எப்போதும் வந்துள்ளது.
மனித புத்திக்கூர்மையை வெளிக்கொண்டுவரும் இந்த செயல்முறையில், ஒரு மனிதருக்குள் இருக்கும் பன்முகத்திறன்களை வெளிப்படுத்துவதற்காக, தேவிபைரவி என்று நாம் குறிப்பிடும் சக்தி உருவாக்கம் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கருவியாக உள்ளது. உங்களுக்குள் சில ஜன்னல்களை நீங்கள் திறந்துவிட்டால் மட்டும்தான், எந்த ஒரு மனிதரும் - கடந்த காலம் அல்லது நிகழ்காலத்தில் இருக்கலாம் - எப்போதோ அறிந்திருந்த அனைத்தும், உங்களுக்கு நிகழ்கணத்தின் உயிர்ப்பான அறிதலின் மூலமாக இருக்கமுடியும்.
வெவ்வேறு மக்களிடத்தில், அறிதலின் சிறுசிறு பகுதிகளாக மூலதனம் செய்யப்பட்ட வாழ்வின் பல அம்சங்களை நீங்கள் அறிந்துகொள்ளும் விதமாக, உங்களது புலனுணர்தலின் உலகத்துக்குள் பல்வேறு வாயிற்கதவுகளை நீங்கள் திறந்துவிட முடியும். இந்த சிறு பகுதிகள் இணைந்து வருமேயானால், மனிதகுலத்துக்கு வேறு ஏதோ ஒன்று நிகழக்கூடும். இந்த அறிதலானது, ஏதாவது ஒரு மனிதரிடத்தில் இணைந்து வந்தால், அவர்களைச் சுற்றிலும் நிகழ்வதென்னவோ நம்புதற்கரிதாகவும், அற்புதமாகவும் இருக்கும். அதுதான் தேவி பைரவியின் வல்லமை.
இந்தப் பரிமாணத்தை அடையப்பெறுவதற்கு, மனதளவில் அளவில்லா கூர்முனைப்பும், சக்திமிக்க திறன்களும் தேவைப்படுகின்ற சிக்கலான மற்றும் அதி நவீன வழிமுறைகளை நம்மால் உருவாக்கமுடியும். ஆனால் தீவிரமான பக்தி. இதற்கான மிக எளிதான வழியாக உள்ளது. நீங்கள் என்று கருதும் ஒவ்வொன்றையும் கரைத்துவிடுவதற்கு, பக்தி ஒரு ஆற்றல்மிக்க கருவியாக இருக்கிறது.
பக்தியின் பொருள் கரைதல். நீங்கள் என்று கருதும் அனைத்தையும் – உங்களது விருப்பங்கள் மற்றும் விருப்பமின்மைகள், வெறுப்புகள் மற்றும் நேசங்கள் - ஒட்டுமொத்தமாக நீங்கள் கரைத்துவிட்டால், அப்போது வாழ்வை அது உள்ளபடியே உங்களால் பார்க்கவும், உணரவும், அனுபவிக்கவும் முடிகிறது என்பதுடன், நீங்கள் தேவியின் அருளுக்குப் பாத்திரமாகிவிடுவீர்கள்.
இந்த அருளைப் பெறுபவர்கள், நீங்கள் சூப்பர் மனிதர் என்று மற்றவர்கள் நினைக்குமளவுக்கு வாழ்வீர்கள். இது சூப்பர் மனிதராக இருப்பதைக் குறித்தது அல்ல. மனிதராக இருப்பது சூப்பரானது என்று உணர்வதைக் குறித்தது. இந்தக் கலாச்சாரத்தில், சூப்பர் மனிதர் இருந்ததில்லை; கடவுள் போன்று எழுச்சியடைந்த மனிதர்கள்தான் உள்ளனர். சாதாரண மனிதர்கள், உங்களையும், என்னையும் போல் பிறந்தவர்கள், வாழ்வின் எல்லா சோதனைகள் மற்றும் இன்னல்களை அனுபவித்து இருப்பினும் அனைவரும் அவர்களை இறைத்தன்மையாகப் பார்க்கும் ஒரு இடத்துக்கு உயர்ந்தவர்கள்.
லிங்க பைரவி, உங்களை வாழ்க்கையுடன் பொங்கிப்பிரவாகிக்கச் செய்வாள் – எந்த அளவுக்கு என்றால், நீங்கள் இன்றைக்கு மரணமடையவேண்டும் என்றால், அதற்கும் முழு விருப்பத்துடன் நீங்கள் செல்வீர்கள். இதனால், நீங்கள் மரணமடைய விரும்புகிறீர்கள் என்பதல்ல. நீங்கள் வாழ்ந்திருப்பது நீங்கள் வாழ விரும்புவதன் காரணத்தால் அல்ல, ஆனால் உங்களையே நீங்கள் நன்றாக வைத்திருப்பதன் காரணத்தால் வாழ்கிறீர்கள். உங்களுக்கு வெற்றி தருவது திறன்தானே தவிர, ஆசை அல்ல
அதனுடன் தேவி பைரவி மிக அதிகமான ஒத்திசைவில் இருக்கிறாள்; உங்கள் ஆசைகள் என்ன என்பதில் அவள் கவனம் செலுத்துவதில்லை. இந்த வாழ்க்கைக்கும் அதனைத் தாண்டியதற்கும் உங்களை எப்படி திறன் மேம்பாடு அடையச் செய்வது என்பதை அவள் பார்க்கிறாள், மற்றும் அதுதான் முக்கியமானது.