
மாந்திரீக பாரம்பரியங்களில் உச்சம் தொட்ட நிலப்பரப்புகளில், புதிரான நாகதோஷம் சாதாரணமாக ஒருவிதமான அச்சத்தையும், கற்பனையையும் எழுப்புகிறது. தனித்துவமான வழிகளில் உருவெடுக்கும் எதிர்பாராத சக்திகளுக்கு ஒரு ஏற்புத்தன்மையை வெளிப்படுத்துவதற்காக, சத்குரு நம் குழப்பத்தைத் தெளிவுபடுத்துகிறார்.
சர்ப்பங்கள், அவற்றின் அசைவின்மை, புலனுணர்தல், மற்றும் ஆன்மீகத்துடன் இணைந்த தன்மைகளுக்காக வணங்கப்பட்டு, ஆழமான குறியீட்டு இயல்பை உரியதாக, தெய்வத் திருவுருவங்களுக்கு அருகாமையில் நாகரீகங்களைக் கடந்து நிலைத்துள்ளன. தனித்துவமான மறைபொருள் சக்திகளையும், ஆன்மீக சாம்ராஜ்யத்தில் அவற்றின் நீடித்த இடத்தையும், இந்த ஆர்வமெழுப்பும் கட்டுரை வெளிக்கொணருகிறது.
சத்குரு: நாகதோஷம் என்று அழைக்கப்படும் ஒரு விஷயம் உள்ளது. நாகா என்றால் நாகப்பாம்பு. தோஷம் என்றால் இலக்காகும் தன்மை என்பது பொருள். படைப்பின் குறிப்பிட்ட சக்திகளுக்கு இலக்காகும் ஒரு தன்மையை நீங்கள் பெறமுடியும்.
பொதுவாக, இந்த விஷயங்களைப் பற்றி பேசுவதை நான் தவிர்த்து வந்துள்ளேன், ஏனென்றால் இந்தவிதமான விஷயங்களில் அதீத கற்பனைகளுடன் பைத்தியக்காரத்தனமாக பல வழிகளிலும் அவற்றைத் தவறாகப் பயன்படுத்தும் மக்கள் இருக்கின்றனர். “என்னை சத்குரு இதனைச் செய்யவைக்கிறார்", என்று அவர்கள் செய்யும் எல்லா முட்டாள்தனங்களுக்கும் உரிமை கொண்டாடும் பல மக்கள் ஏற்கனவே இருந்துகொண்டுதான் உள்ளனர். இந்த எல்லா பரிமாணங்களையும் அவர்களிடம் நான் கூறினால், அவர்களுடைய கற்பனை கட்டுக்கடங்காமல் ஓடும்.
தியானலிங்கத்தில் ஒரு கணமேனும் அமர்ந்துள்ள மக்கள் நாகதோஷத்துக்கு இலக்காக முடியாது. முற்றிலும் வித்தியாசமான ஒரு வழியில் அந்தப் பரிமாணங்கள் தீர்மானிக்கப்படுகின்றன.
நாகதோஷத்தைப் பொறுத்தவரை – குறிப்பிட்ட சில கணங்களில், ஒருவர் அப்படிப்பட்ட சக்திகளுக்கு இலக்காக இருக்கமுடியும். தியானலிங்கத்தில் ஒரு கணமேனும் அமர்ந்துள்ள மக்கள் நாகதோஷத்துக்கு இலக்காக முடியாது. முற்றிலும் வித்தியாசமான ஒரு வழியில் அந்தப் பரிமாணங்கள் தீர்மானிக்கப்படுகின்றன.
சில குறிப்பிட்ட நோக்கங்களுக்காக உருவங்களைப் படைத்து அவர்களைக் கட்டுப்பாட்டிலிருந்து தளர்த்தும் முழுமையான ஒரு அறிவியலும், கலையும் இருக்கிறது. உயிர்களாக இருக்கும் இவைகள் பேய்களோ, வேதாளங்களோ, அல்லது மாய உருவங்களோ அல்ல. நான் குறிப்பிடுவது ஒரு உயிர் அல்ல, ஆனால் யாரோ ஒருவரால் உருவாக்கப்பட்டு, உலகில் உலாவுவதற்காக அனுமதிக்கப்பட்ட ஒரு சக்தி வாய்ந்த வடிவம். உலகில் உலாவவிடுவது ஏனென்றால், இந்த வடிவங்கள் குறிப்பிட்ட சாதனாக்கள் செய்வதற்காகத் தேவைப்படுகின்றன.
கடந்த காலத்தில் பல்வேறு பெண்தன்மை வாய்ந்த பெண் தெய்வங்கள் உருவாக்கப்பட்டதுடன், அவைகள் இன்னமும் இருந்துகொண்டிருக்கின்றன. இன்றைக்கும்கூட, அவைகள் ஆற்றல் வாய்ந்த சக்திகளாக, எழுச்சியடையக் கூடியவைகளாக உள்ளன. உங்களில் சிலர், ராக்கினிகள், தாக்கினிகள், சங்கினிகள், ராங்கினிகள் குறித்து கேள்விப்பட்டிருக்கலாம். கடந்தகால யோகிகளால் உருவாக்கப்பட்ட இவைகள் அனைத்தும் மிகுந்த சக்தி வாய்ந்த பெண்தன்மையின் வடிவங்களாக, வாழ்வின் வெவ்வேறு பரிமாணங்களையும், இயற்கையின் தன்மைகளையும் குறிக்கின்றன.
சில குறிப்பிட்ட நோக்கங்களுக்காக உருவங்களைப் படைத்து அவர்களைக் கட்டுப்பாட்டிலிருந்து தளர்த்தும் முழுமையான ஒரு அறிவியலும், கலையும் இருக்கிறது.
அவர்கள் ஏறக்குறைய வாழும் உயிரினங்களைப் போன்று, குறிப்பிட்ட நோக்கங்களுக்காக படைக்கப்பட்டவர்கள். உலகத்தின் ஏதோ ஒரு இடத்தில் அவர்களை எழுப்பினால், பொருள்தன்மையில்கூட, மிகவும் ஆற்றல் வாய்ந்த ஒரு வழியில் அவர்கள் வெளிப்படுவார்கள், மற்றும் பல வழிகளிலும் பயன்படுத்தப்படுகிறார்கள்.
அதைப்போன்று, சர்ப்பத்தின் பல்வேறு வடிவங்களும், முக்கியமாக நாகப்பாம்புகள், குறிப்பிட்ட சாதனாவுக்காக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அவைகள் எந்த இடத்திலும் இருக்கமுடியும், ஆனால் பெரும்பாலான மக்கள் ஒருபோதும் அவர்களுடன் தொடர்பில் வரமாட்டார்கள். ஆனால் சில நேரங்களில், குறிப்பிட்ட நிலைகளின் இலக்காகும் தன்மையில், இத்தகைய விஷயங்கள் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தலாம். இதுதான் நாகதோஷம்.
யோகிகள் பல வடிவங்களை உருவாக்கிய உலகத்தின் இந்தப் பகுதியில் முக்கியமாக சர்ப்பத்தின் பாதிப்பு நிகழ்கிறது. இந்த இடத்தைச் சுற்றிலும் அவைகள் இருக்க முனைவதால், சில நேரங்களில், மக்கள் அவைகளுக்கு இலக்காகக்கூடும்.
முந்தைய சம்யமா நிகழ்ச்சிகளில் இருந்தவர்கள் பார்த்திருப்பார்கள், குறைந்தபட்சம் 25 சதவிகித மக்கள் “சர்ப்பங்களாக” உருவெடுத்து, சில நேரங்களில் கண்களை மூடியபடியே, அங்குமிங்கும் ஊர்ந்துகொண்டிருப்பார்கள். நாம் ஒருபோதும் சர்ப்பங்கள் குறித்து பேசியதில்லை, ஆனால் நான் ஒரு சாத்தியத்தைத் திறந்த கணமே, அந்த பாதிப்பு இருந்த அனைவரும் இங்கே அதிகம் ஈர்க்கப்பட்டனர்.
குறிப்பாக, சில மாந்திரீகப் பயிற்சிகள் பரவலாக இருந்த பகுதிகளில், நாகதோஷம் மிகவும் சாதாரணமாக இருக்கிறது.
பொதுவாக, தமிழ்நாட்டில், சர்ப்பத்தினால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்களை நாம் கவனித்துக்கொண்டோம். அந்த நேரத்தில், ஆசிரமம் இல்லை, சர்ப்பக் குறியீடுகள் இல்லை என்றபோதிலும், அந்த சக்தியை நாம் திறந்த கணமே, அவர்கள் பெரும் எண்ணிக்கையில் வந்தனர். வகுப்புகள் சத்திரங்களிலும், திறந்தவெளி அரங்குகளிலும் நிகழ்த்தப்பட்டன, ஆனால் அவர்களில் பலரும் அதை நோக்கி ஈர்க்கப்பட்டனர். அவர்கள் நாகதோஷம் கொண்ட மக்களாக இல்லை, ஆனால் அவர்கள் சர்ப்பத்தின் வலிமையான பரிமாணத்தைத் தங்களிடம் கொண்டவர்களாக இருந்தனர்.
மக்கள் சர்ப்பத்தின் இந்த பாதிப்பை அடையும்போது, குறிப்பிட்ட விளைவுகள் உடலிலும், மனதிலும் நிகழக்கூடும். எந்த மருந்தும் பலனளிக்காத தீராத தோல் பிரச்சனைகள், அதன் மிக இலேசான வடிவமாக உள்ளது. அவர்கள் நாகா கோவிலை மூன்று சுற்றுகள் வந்தவுடன், அது மறைந்துவிடுகிறது. குறிப்பாக, சில மாந்திரீகப் பயிற்சிகள் பரவலாக இருந்த பகுதிகளில், நாகதோஷம் மிகவும் சாதாரணமாக இருக்கிறது.
கேள்வி: உலகில் எத்தனையோ பல விலங்குகள் உள்ளன. நாகதோஷம் மட்டும் இருப்பது ஏன்?
சத்குரு: நாகதோஷம் மட்டும் இருப்பது ஏன்? உலகின் இந்தப் பகுதியில், ஆன்மீக செயல்முறைகளுக்கான ஒரு குறியீடாக சர்ப்பம் தேர்வு செய்யப்பட்டது ஏனென்றால் அதனுடன் தொடர்புடைய தன்மைகள் சர்ப்பத்துக்கு உண்டு. பண்டைய காலங்களிலிருந்தே, விஷ்ணு உறங்குவதற்கு ஒரு சர்ப்பம் தேவையாக இருந்தது. சர்ப்பம் இல்லாமல் சிவனால் எதையும் செய்யமுடியாது; அது சதாசர்வ காலமும் அவரது கூட்டாளியாக இருந்துவருகிறது. கிருஷ்ணன் சண்டையிடுவதென்றால், அது ஒரு சர்ப்பத்துடன் இருக்கவேண்டியுள்ளது. ஏவாள் தூண்டப்படுவதற்கு, ஒரு சர்ப்பம் அவசியமாகிறது. இது தற்செயலானது அல்ல – எந்த வகையிலாவது, மக்கள் இந்த விஷயங்களைப் பற்றி அறிந்திருந்தனர்.
பாம்பு ஆன்மீக செயல்முறைகளுக்கான குறியீடாக தேர்ந்தெடுக்கப்பட்டது ஏனெனில், அவற்றுடன் தொடர்புள்ள தன்மைகளை பாம்பு கொண்டுள்ளது.
இங்கே, மக்கள் சிவன் மற்றும் சர்ப்பங்கள் பற்றி பேசிக்கொண்டிருந்தபோது, அது மிகவும் தனிப்பட்டதாக இருந்தது – அவர்கள் மிகச்சரியாக எதைப்பற்றி பேசிக்கொண்டிருக்கின்றனர் என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்ததுடன், அது கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது. இவையெல்லாம் இருந்தபோதிலும், மக்கள் சர்ப்பங்கள் மீதான நேசத்தை வளர்த்துக் கொள்ளவில்லை. இந்தக் கலாச்சாரத்தில், ஆண்டுக்கு ஒருமுறை, நாகபஞ்சமி தினத்தில், சர்ப்பங்களை நீங்கள் வணங்குகிறீர்கள். சிலர் எறும்புப் புற்றுக்குள் பாலை ஊற்றி, எறும்புகளை மூச்சுத் திணற வைக்கிறீர்கள். இருப்பினும், சர்ப்பங்கள் மீதான போதிய நேசம் வளராதது ஒரு சோகம்தான்.
ஆனால், ஆன்மீகப் பாதையில் இருப்பவர்கள் ஏன் சர்ப்பங்களுடன் ஈடுபாடு கொண்டு, வேறு எந்த வடிவங்களைவிடவும் அதிகமாக சர்ப்ப வடிவங்களை உருவாக்குகின்றனர்? அவர்களால் ஏன் வேறொரு விலங்கை, ஒரு யானை அல்லது ஒரு பன்றியை உருவாக்க முடியாது? பன்றி உருவங்களும்கூட உள்ளன. உயிரின் மீது குறிப்பிட்ட நிலைகளில் ஆளுமை அடைவதற்கான, சில குறிப்பிட்ட சாதனாக்களுக்காக அவர்கள் பன்றிகளை பிரதிஷ்டை செய்தனர், மற்றும் இன்றைக்கும்கூட, அவைகள் மிகவும் உயிரோட்டத்துடன் இருக்கின்றன. அதைப்போன்று, மக்களுக்கு வராகத்தின் பாதிப்பும் இருக்கமுடியும்.
ஆனால் மிக அதிகமாக சர்ப்பங்களுடன் செயல்கள் செய்யப்பட்டன, ஏனென்றால் ஆன்மீக செயல்முறையைப் பின்பற்றும் எந்த ஒரு மனிதருக்கும், ‘நீங்கள்’ என்று கருதுவது இனி இல்லை என்ற நிலையை எட்டும் அளவுக்கு அசையாமல் இருப்பது உச்சபட்ச இலக்காக உள்ளது. மிக அதிகமான அசைவு இருக்கும் காரணத்தினால்தான் ‘நீங்கள்’ ஒரு நபராக இருக்கிறீர்கள். நீங்கள் அசைவில்லாமல் ஆகிவிட்டால், எல்லையுள்ள “நீங்கள்” எனப்படுவது மறைந்துபோகும்.
ஆன்மீகச் செயல்முறையை மேற்கொள்ளும் அனைவருக்கும் உச்சபட்ச இலக்கு என்பது, நீங்கள் என்று கருதும் தன்மை இல்லாத அளவுக்கு அசைவற்ற நிலைக்குச் செல்வதே ஆகும்.
அசைவில்லாமல் ஆகிவிடுவதுதான் உச்சபட்ச இலக்கு. சர்ப்பம், அசைவற்ற தன்மையுடைய ஒரு விலங்கு. நீங்கள் ஒரு அரை மணி நேரம் அமர்ந்தால், உங்களது அமர்வு நிலையை மாற்றவேண்டியுள்ளது. யோகிகள் எப்போதும் சர்ப்பங்கள் மீது பொறாமையடைந்தனர் ஏனென்றால் அவைகளால் முடிவில்லாமல், மணிக்கணக்காக முற்றிலும் அசைவில்லாமல் அமரமுடியும்.
மற்றொரு அம்சம் என்னவென்றால், சர்ப்பம், குறிப்பாக நாகப்பாம்பு, ஒரு குறிப்பிட்ட புலனுணரும் தன்மை கொண்டது. உங்கள் சக்திகளை ஒரு குறிப்பிட்ட வழியில் நீங்கள் உருவாக்கிக்கொண்டால், அவைகள் உங்களிடம் ஈர்க்கப்படுகின்றன. பல யோகிகளும் இதனை உணர்ந்துள்ளனர்: அவர்கள் அமர்ந்து தியான நிலையை அடைந்து, அவர்களின் ஒரு குறிப்பிட்ட பரிமாணம் உயிர்ப்படையும்போது, அவர்களைச் சுற்றிலும் நாக சர்ப்பங்கள் இருப்பதை அவர்கள் கண்டனர்.
சர்ப்பமும், ஆன்மீகமும் இணைந்திருந்தது ஏனென்றால் இந்தக் கலாச்சாரத்தில், மக்கள் சிவனையும், சர்ப்பங்களையும் எப்போதும் இணைத்தே பார்த்தனர். சிவன் ஒரு குறிப்பிட்ட நிலையிலான உணர்தலை அடைந்து, இந்த சக்தியினால் நாக சர்ப்பங்கள் ஈர்க்கப்பட்டபோது, மீண்டும் ஒருமுறை, மக்களின் மனங்களில் இது ஆன்மீகம் மற்றும் சர்ப்பங்களுக்கு இடையிலான தொடர்பை பலப்படுத்தியது. ஆன்மீகத்தின் குறிப்பிட்ட பரிமாணங்களுக்கு, சர்ப்பம் அதிக உணர்திறனைக் கொண்டிருக்கிறது.
