சத்குரு

கடந்த சில மாதங்களாக சத்குரு எப்படி இருந்தார், அவரது வார்த்தைகளிலேயே…

சத்குருவின் மூளை அறுவை சிகிச்சைக்குப் பிறகான சில மாதங்களுக்கு, ஈஷா தியான அன்பர்கள் தங்களது அன்பான குருவிடமிருந்து புதிய செய்திகளுக்கு, எப்போதாவது வெளியிடப்பட்ட ஆடியோ பதிவுகளை மட்டுமே எதிர்பார்த்துக் காத்திருக்க முடிந்தது. ஆகவே, செப். 23, 2024 சத்குருவின் ஞானோதயத் திருநாளுக்கான தரிசனம் அறிவிக்கப்பட்டபொழுது, அலையாய் எழுந்த ஆவல் இயற்கையாகவே கரைகாணாததாக இருந்தது. முடிவில்லா காத்திருப்புக்கு முத்தாய்ப்பாக, நேரில் அல்லது நேரடி ஒளிபரப்பில் அவரை மீண்டும் தரிசிக்க முடிந்தது. இயல்பாகவே, ஒவ்வொருவரின் நினைவிலும் சுழன்ற, கொழுந்து விட்டெரியும் எளிமையான, ஆனால் ஆழ்மனக் கேள்வி: சத்குரு எப்படி இருந்தார்? இதோ, அவரது பகிர்தல்...

கேள்வியாளர்: நமஸ்காரம் சத்குரு. இது இணையத்திலும், நேரிலும் மிக அதிகம் காணப்படுகின்ற கேள்வி. நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள்? கடந்த சில மாதங்களாக நீங்கள் எப்படி இருந்தீர்கள் என்பதைப் பற்றி அனைத்தையும் அவர்கள் தெரிந்துகொள்ள விரும்புகின்றனர்.

சத்குரு: அதனுடைய விளைவு மிகச் சிறப்பாக இருப்பதாகத்தான் தோன்றுகிறது.

உடலளவில், அது வலி மிகுந்ததாகவே இருந்தது, ஆனால் உண்மையில் என்னை எதுவும் வீழ்த்துவதில்லை என்பதுபோல நான் என்னையே உருவாக்கியிருந்தேன். கடந்த சில மாதங்களில், சில விஷயங்கள் நிகழ்ந்ததாலும், சிலவற்றை நான் பேசியும், செய்தும் இருந்ததாலும் ஒட்டுமொத்த மருத்துவமனையின் மக்களும் – மருத்துவர்கள், செவிலியர், பணியாளர்கள் – அனைவரும் என்னைப் பெரிதும் பின்பற்றுபவர்களாகிவிட்டனர்.

உடலளவில், அது கடினமாகவே இருந்தது, ஆனால் நான் எனக்கு அதைக் கடினமாக்கிக் கொள்ளவில்லை. என்னை அவர்கள் இழந்துவிட்டதாக, மருத்துவர்கள் நினைத்த கணங்கள் இருந்தன. ஆனால் இதோ, இங்கே உங்கள் முன் நான் இருக்கிறேன். என்னைக் கொல்வது எளிதல்ல.

நாம் ஒரு சில துணிச்சலான விஷயங்களைச் செய்தோம், ஆனால் நாம் எப்போதும் துணிச்சலாகத்தான் செய்துகொண்டுள்ளோம். என் உயிருக்கு ஆபத்தானவற்றை எல்லா இடங்களிலும் எப்போதும் நான் செய்து வந்துள்ளேன். இந்தமுறை, எதிர்பாராதவிதமாக, அது மிக அதிகமாக ஒரு பொதுஜனப் பார்வைக்கு ஆளாகிவிட்டதால், அனைவருமே அறிந்துகொண்டனர் என்பது சற்று சங்கடமாகத்தான் உள்ளது.

உடலளவில், அது வலி மிகுந்ததாகவே இருந்தது, ஆனால் உண்மையில் என்னை எதுவும் வீழ்த்துவதில்லை என்பதுபோல நான் என்னையே உருவாக்கியிருந்தேன்.

உங்களுக்கு அதன் நல்ல பக்கத்தைக் கூறுகிறேன். அநேகமாக, தொடர்ந்து நான்கு, ஐந்து மாதங்களாக, நான் நேரம் தவறாமல் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன். நான் 18 அல்லது 20 வயதாக இருந்தபோதிலிருந்து அது நிகழ்ந்திருக்கவில்லை. அப்போதிலிருந்து, நான் எப்போதும் ஒரு “பசித்த பூனை” என்ற நிலையில்தான் இருந்துள்ளேன்.

ஒரு வேளை உணவு சாப்பிடும்போதே, அடுத்த வேளை உணவுக்கு முன்னதாகவே திட்டமிடும் அநேக மக்களை எனக்குத் தெரியும். ஒருபோதும் என் வாழ்க்கையை நான் உணவை முன்னிட்டு திட்டமிடுவதில்லை. எனக்கு என்ன செய்யவேண்டுமோ அதைமட்டும் செய்கிறேன். சில நேரங்களில் உணவு வருகிறது, சில நேரங்களில் அது வருவதில்லை, இருப்பினும் கடந்த சில வருடங்களாக, நான் எதையாவது எடுத்துக்கொள்வதை உறுதிசெய்துகொள்வதற்கு, என்னைச் சுற்றிலும் இருக்கும் மக்கள் அரும்பாடுபடுகின்றனர். முன்னர், உணவு இப்படி வரவில்லை, ஆனால் அது ஒருபோதும் எனக்குப் பொருட்டாகவும் இருந்ததில்லை.

ஆனால் தினமும் சரியான நேரத்துக்குச் சாப்பிடுவது நன்றாகவே இருப்பதை நான் பார்த்துள்ளேன். ஏறக்குறைய ஐம்பது வருடங்களாக எனக்கு இது நிகழ்ந்ததில்லை.

மற்றொன்று, சில மருந்துகள், தற்போது நிறுத்தப்பட்டுவிட்டாலும், என்னை மயக்கத்தில் வைத்திருந்தன. சில மருத்துவ நிபுணர்களிடம் நான் கேட்டேன், “நான் செய்யவேண்டிய சிறந்த விஷயம் என்ன?” அவர்கள் என் தலையில் ஒரு ஜன்னலைத் திறந்துவிட்டதால், எவ்வளவு மூளையை அவர்கள் எடுத்துவிட்டனர் என்பது எனக்குத் தெரியாது. ஆகவே, அவர்களை நாம் கேள்வி கேட்டபோது, “சத்குரு, உங்களுக்கு ஒரே ஒரு சிகிச்சைதான் உள்ளது – உறக்கம், உறக்கம், உறக்கம், அவ்வளவுதான்”, என்றனர்.

காலையில் எழுந்தேன், நடந்தேன், ஏதாவது சாப்பிட்டேன், பிறகு உறங்கினேன். மீண்டும் நான் எழுந்தேன், நடந்தேன், ஏதாவது சாப்பிட்டேன், பிறகு உறங்கினேன். மீண்டும் மாலையில் நான் நடந்தேன், ஏதாவது சாப்பிட்டேன், நடந்தேன், பிறகு உறங்கினேன். ஒரு “இலட்சிய வாழ்க்கை!” இது தவிர, நான் மறுபார்வையிட வேண்டியிருந்த இரண்டு புத்தகங்கள் இருந்தன, அவற்றைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

மற்றபடி, என்னைச் சுற்றிலும் இருந்த பற்பல மக்களும் – இங்கும், இந்தியாவிலும் – அனைத்தும் சரியாக நிகழ்வதை உறுதிசெய்வதற்காக தங்களது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டிருந்தனர். தவிர, நான் சற்றே செயலற்று இருக்கும்போது, மக்களுக்கு என்னைப் பிடிக்கிறது, எனது மகள் தொடங்கி மற்ற அனைவருக்கும்கூட. அவர்கள், “இல்லை, இதனை நீங்கள் இப்படித்தான் செய்யவேண்டும். இப்போது நீங்கள் உறங்கியாக வேண்டும்”, என்று கட்டளை இடுகின்றனர்.

“என்ன? நீங்கள் எப்போது தலைவரானீர்கள்?” என்று தோன்றுமளவுக்கு!

அறக்கட்டளையில் மற்ற விஷயங்கள் நான் இல்லாமல் நன்றாகவே நிகழ்கின்றன. ஆகவே இது நல்லதுதான்.

அந்தக் கட்டத்தில், விஷயம் சற்று கைமீறிவிட்டது. நான் ஏறக்குறைய மார்ச் 17ஆம் தேதியில் இங்கே வந்து, அறுவை சிகிச்சை இல்லாமல் என்னையே சரிசெய்வதற்கு ஒரு மாத அவகாசம் எடுத்துக்கொள்ளத் திட்டமிட்டிருந்தேன். ஆனால் அதில் சிறிது தாமதம் ஏற்பட்டுவிட்டது. பல கூடுதலான விஷயங்கள் சேர்ந்துவிட்டதில், அது கட்டுப்பாட்டை மீறிச் சென்றுவிட்டது.

ஆங்கிலத்தில் ஒரு சொல், வழக்கில் உண்டு, “நன்றாக முடிவடையும் அனைத்தும் நல்லதே.” ஆகவே இதோ, நாம் இருக்கிறோம்.

இங்கே நான் சிவனின் மடியில் இருக்கிறேன்; அங்கும் நான் சிவனின் மடியில்தான் இருக்கிறேன்.

நான் இறுதிக் கட்டத்துக்கு மிக நெருக்கமாக இருந்தேன், ஏறக்குறைய கடந்துவிட்டேன். நிச்சயமாக, அறக்கட்டளை மற்றும் நாம் செய்துகொண்டிருந்த பல்வேறு விஷயங்களைப் பொறுத்தவரை, நான் சென்றுவிட்டிருந்தால் அது ஒரு பெரிய அடியாக இருந்திருக்கும்.

என்னைப் பொறுத்தவரை, மற்றும் என் பணியின் முக்கிய பகுதியைப் பொறுத்தவரை, எந்த வித்தியாசமும் இல்லை. இங்கே நான் சிவனின் மடியில் இருக்கிறேன்; அங்கும் நான் சிவனின் மடியில்தான் இருக்கிறேன். இங்கே நான் அதே விஷயத்தை செய்கிறேன்; அங்கும் நான் அதே விஷயத்தை செய்கிறேன். அதன்படி பார்த்தால், எங்கும் வித்தியாசமில்லை.

ஆன்மீகரீதியாக, என் நிலையிலோ அல்லது உங்கள் நிலையிலோ வித்தியாசம் இருக்காது. ஆனால் நான் அங்கே இல்லாதபோது, ஹால்ஃப் மைதானம் போன்ற மற்ற விஷயங்கள் நன்றாக வடிவம் பெறாமல் போகலாம், அது குறித்து கவலைகொள்கிறேன்.