ஈஷா சமையல்

க்ரீமி முந்திரி காய்கறி சூப்

4 நபர்களுக்கு

தேவையானவை

1 கப் முந்திரி, 2 மணி நேரம் ஊறவைத்தது

4 கப் காய்கறி வேகவைத்த நீர்

1 குடமிளகாய், சிறு துண்டுகளாக்கப்பட்டது

2 கப் காளான் (பட்டன், ஷிடேக், கிரெமினி) துண்டுகளாக வெட்டப்பட்டது

1 கப் முட்டைகோஸ், பொடியாக நறுக்கப்பட்டது

1 கேரட், துண்டுகளாக்கப்பட்டது

1 செலரி தண்டு, துண்டுகளாக்கப்பட்டது

1 நடுத்தர சுரைக்காய், துண்டுகளாக்கப்பட்டது

1 மேசைக்கரண்டி ஆலிவ் எண்ணெய்

1 ஸ்பூன் காய்ந்த ஓமம்

1 ஸ்பூன் மிளகாய்த்தூள்

½ ஸ்பூன் சீரகத்தூள்

¼ ஸ்பூன் மிளகுத்தூள்

உப்பு சுவைக்கேற்ப

2 ஸ்பூன் எலுமிச்சை ஜூஸ்

சிறிதளவு பொடியாக நறுக்கப்பட்ட கொத்துமல்லித் தழை

செய்முறை

  • ஊறவைத்த முந்திரிகளை நீரை வடித்துவிட்டு வைத்துக்கொள்ளவும். வேகவைத்த காய்களை சிறிதளவு நீரை வடித்து வைத்துக்கொண்டு, காய்களை நீருடன், குழம்பாகவும், க்ரீமியாகவும் வரும்வரை மசித்து ஒருபுறம் வைக்கவும்.
  • ஒரு பெரிய பாத்திரத்தில், ஆலிவ் எண்ணெயை விட்டு, மிதமான சூட்டில் காயவைக்கவும். பிறகு சிறிதளவு நறுக்கிய முட்டைகோஸ் போட்டு, அது மென்மையாகும்வரை 3-4 நிமிடங்களுக்கு வதக்கவும்.
  • அதனுடன், நறுக்கிய கேரட் மற்றும் செலரி சேர்க்கவும்; இன்னொரு 3-4 நிமிடங்களுக்கு வேகவிடவும்.
  • இதனுடன் குடமிளகாய், காளான்கள், மற்றும் சுரைக்காயை சேர்க்கவும், 5-6 நிமிடங்களுக்கு, அவ்வப்போது கிளறிவிட்டு, வேகவைக்கவும்.
  • காய்ந்த ஓமம், மிளகாய்த்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள் இவைகளைச் சேர்த்துக் கிளறவும். வாசனை வரும்வரை மேலும் ஒரு நிமிடம் வேகவைக்கவும்.
  • அதில் மீதமிருக்கும் வேகவைத்த காய் நீரைக் கலந்து, மிதமான தீயில் மேலும் 10 நிமிடங்கள் அல்லது காய்கள் குழையும்வரை வேகவிடவும்.
  • விரும்பினால், க்ரீம் போன்ற பதத்துக்காக, சுமார் 2 கோப்பை அளவுக்கு காய்கள் கலவையை – குறிப்பாக சுரைகாய், கேரட்கள், மற்றும் முட்டைகோஸ் – வெளியில் தனியாக எடுத்து, குழையும்வரை மசித்துவிடலாம். இதனை மீண்டும் அடுப்பிலிருக்கும் பாத்திரத்துக்கு மாற்றி, நன்றாகச் சேரும்வரை கிளறவும்.
  • பின்னர் முந்திரி க்ரீமையும் சேர்த்து, நன்றாகக் கிளறவும். மேலும் அவ்வப்போது கிளறி ஐந்து நிமிடங்களுக்கு வேகவைக்கவும்.
  • சுவைக்கேற்ப தேவையான உப்பு சேர்க்கவும்.
  • அடுப்பிலிருந்து இறக்கிவைத்து, அதில் எலுமிச்சை சாற்றினை கலக்கவும்.
  • பொடியாக நறுக்கப்பட்ட கொத்துமல்லி இலைகளைத் தூவி, சூடாகப் பரிமாறவும்.