
சான் ஃப்ரன்சிஸ்கோவில் நடைபெற்ற Dreamforce எனும் வருடாந்திர மாநாட்டில் கலந்துகொண்டதன் மூலம், மூன்று மாதங்களுக்குப்பின் முதல்முறையாக சத்குரு பொதுநிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இரண்டு வெவ்வேறு நிகழ்வுகளில் தொழில்நுட்பம் பற்றியும், சமூகத்தில் அதன் தாக்கங்களைப் பற்றியும் அவர் விவாதித்தார்.
முதல் நிகழ்வில், சத்குருவுடன் இணைந்த அமெரிக்கன் கேன்சர் சொசைட்டியின் CEO டாக்டர். கரென் நட்ஸன் மற்றும் தொகுப்பாளர் மொலி Q. ஃபோர்ட் ஆகியோர் சமூக ஆரோக்கியத்தில் செயற்கை நுண்ணறிவின் திறன்களையும் அதன் தாக்கங்கள் பற்றியும் விவாதித்தார்கள். டாக்டர். நட்ஸன் அவர்கள் புற்றுநோய் சிகிச்சையில் செயற்கை நுண்ணறிவின் பங்கு எந்த அளவிற்கு இருக்கும் என்பதைப் பற்றியும், AI மூலம் வாழ்க்கையை மேம்படுத்தும் வழிகள் பற்றியும் எடுத்துக்கூறினார். AIன் பெரும் தாக்கங்களைப் பற்றி எச்சரித்த சத்குரு, "நாம் மாற்றத்திற்கான தொழில்நுட்பங்களில் மிகவும் கவனம் செலுத்துகிறோம், ஆனால் மனிதர்கள் மாற்றமடைவது தான் நிகழத்தேவையானது" என்று வலியுறுத்தினார். “AI என்பது நல்ல விஷயம் என்பது மட்டுமல்ல, நீங்கள் அதை சரியான வழியில் பயன்படுத்தினால் அது நம்பமுடியாத அற்புதம். தவறாகப் பயன்படுத்தினால் பயங்கரமானவை" என்று கூறி, AIன் முன்னேற்றத்திற்கு ஒரு சமநிலையான அணுகுமுறையின் அவசியத்தை அவர் அடிகோடிட்டுக் காட்டினார்.
தொழில்நுட்பத்திற்கும் தனிமனித வளர்ச்சிக்கும் இடையேயான உறவைப் பற்றி கூறும்விதமாக, “மாற்றத்திற்கான தொழில்நுட்பங்கள் என்பது நல்லது, ஆனால் தனிமனிதரின் மாற்றம் என்பது முதன்மையானது” என்று சத்குரு ட்வீட் செய்தார்.
இரண்டாம் நாள், “Leading with Purpose, Building for Legacy” என்ற சிந்தனையைத் தூண்டும் கலந்துரையாடலில், அகாடெமி விருது பெற்ற புகழ்பெற்ற நடிகர் மத்யூ மெக்கொவி, தலைசிறந்த ப்ரைமட்டாலஜிஸ்ட் டாக்டர்.ஜேன் குட் ஆல் DBE ஆகியோர் சத்குருவுடன் பங்கேற்றனர். தொழில்நுட்பத்தை சுற்றுச்சூழலுக்கும் சமூக மேம்பாட்டிற்கும், வருங்கால சந்ததியினரை ஊக்குவிக்கவும், எப்படி பயன்படுத்தலாம் என்பது குறித்து அவர்கள் கலந்துரையாடினர்.
விலங்கினங்களின் நுண்ணறிவு முதல் செயற்கை நுண்ணறிவு வரை அவர்கள் வெளிப்படுத்திய ஆழமிக்க பார்வைகளை, மேலும் அறிய ஆர்வமா? “From Treetops to AI – What Lies Ahead for Humanity?” என்ற கட்டுரையில் அறியுங்கள்.
டென்னிசியில் உள்ள ஈஷா யோக மையத்தில் (iii) சத்குரு ஞானோதயமடைந்த நாளான செப்டம்பர் 23 அன்று, சத்குருவின் சிறப்பு தரிசனத்திற்காக தியான அன்பர்கள் ஆவலுடன் கூடியிருந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்நிகழ்வு, நவம்பர் 2023க்குப் பிறகு iiiல் நடைபெற்ற சத்குருவின் முதல் தரிசன நிகழ்ச்சியாகும். இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் நேரில் கலந்துகொண்ட அதேவேளையில், உலகம் முழுவதிலுமிருந்து நேரலை மூலம் இணைந்தனர்.
சத்குரு அங்கே வந்தவுடன் பக்தியின் அலை மக்கள் கூட்டம் முழுவதும் பரவியது, அவரது இருப்பு மகிமா ஹால் முழுவதும் நிரப்பியது. சாதகர்கள் ஆனந்தம் நிறைந்த இதயங்களுடன் அமர்ந்திருந்தனர். தனித்துவமான தனது நகைச்சுவை உணர்வும் ஞானமும் மிக்க உரையால், ஞானோதய நிலையின் இயல்பு மற்றும் இன்றைய உலகில் விழிப்புணர்வான வாழ்க்கையின் முக்கியத்துவம் போன்ற ஆழமான அம்சங்களை அவர் எடுத்துரைத்தார்.
அனைவரின் மனதிலும் உள்ள முதன்மையான கவலையைப் போக்கும் விதமாக, சத்குரு தனது உடல்நலம் குறித்த அப்டேட்டை வெளிப்படையாக வழங்கினார். மேலும், பொது நிகழ்ச்சிகளிலிருந்து விலகியிருக்கும் காலம் பற்றியும் அவர் பேசினார். “How Sadhguru Has Been in the Past Few Months, in His Own Words” [o01] என்ற கட்டுரை, இந்த காலகட்டத்தில் சத்குருவின் அனுபவங்களைப் பற்றிய ஒரு விரிவான கண்ணோட்டத்தை வழங்குகிறது.
ஆன்மீக வளர்ச்சியையும் விழிப்புணர்வையும் வளர்க்கும் இடங்களை உருவாக்குவதன் அவசியத்தை வலியுறுத்தி, யோக நகரத்திற்கான தனது தொலைநோக்குப் பார்வையையும் சத்குரு பகிர்ந்துகொண்டார். மாலையின் மற்றொரு சிறப்பம்சமாக, ராதேவின் மெய்சிலிர்க்க வைக்கும் பரதநாட்டிய அபிநயங்கள் அந்த அழகிய கதைக்கு உயிர்கொடுக்க, சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் “அலக் நிரஞ்சன்” என்ற இசைக் காணொளி[o02] அரங்கேறியது.
தரிசனம் முடிந்ததும், பலர் ஆனந்தக் கண்ணீரால் நிரம்பிய கண்களுடனும், நன்றியுணர்வால் நிரம்பி வழியும் இதயங்களுடனும் இருந்தனர். இந்த அனுபவத்தை அங்கிருந்தவர்களும் ஆன்லைனில் பங்கேற்பவர்களும் பகிர்ந்துகொண்டனர்.
செப்டம்பர் 28 2024 அன்று ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியில் “Loneliness: In is the Only Way Out” என்ற தலைப்பில் சிந்தனையைத் தூண்டும் ஒரு கலந்துரையாடலில், அமெரிக்க சர்ஜன் ஜெனரல் டாக்டர் விவேக் மூர்த்தி அவர்கள் சத்குருவுடன் இணைந்தார். நமது டிஜிட்டல் உலகில் பெருகிவரும் தனிமை தொற்றுநோய் குறித்து அவர்கள் விவாதித்தனர். தனிமையின் ஆரோக்கிய தாக்கங்கள், உண்மையான மனித உறவுகளின் முக்கியத்துவம் மற்றும் வாழ்வில் நிறைவு ஆகிய அம்சங்களை இந்த கலந்துரையாடல் ஆராய்ந்தது.
உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் சமூகத் தொடர்பின் தாக்கம் குறித்து டாக்டர் மூர்த்தி எடுத்துரைத்தார். நல்வாழ்வைப் பராமரிப்பதில் தனிமனித பொறுப்புணர்வு குறித்து சத்குரு எடுத்துரைத்தார். அவர்கள் இருவரும் நம் வாழ்வில் தொழில்நுட்பத்தின் சவால்களை எதிர்கொள்வது பற்றி பேசினர். மனித உறவுகளை மீண்டும் கட்டியெழுப்புவது குறித்து டாக்டர் மூர்த்தி அவர்கள் கவனம் செலுத்திய அதேவேளையில், தொழில்நுட்பத்துடன் விழிப்புணர்வாக ஈடுபாடு கொள்வது பற்றி சத்குரு வலியுறுத்தினார். மேலும் அறிவதற்கு, “The Silent Epidemic of Our Time: U.S. Surgeon General and Sadhguru Address Loneliness” என்ற கட்டுரையைப் படியுங்கள்.