பிற மொழிகளில் வாசிக்க:
English | Hindi

வேடிக்கையான மனிதர்கள்

உருளைக்கிழங்கு விவசாயி
ஆப்பிள் பழங்களை தரையில் தேடுகிறார்.

ஆப்பிள் விவசாயி
உருளைக்கிழங்கை மரத்திலிருந்து பறிக்கப்பார்க்கிறார்.

பழக்கத்தினால் இயங்கும் உயிர்கள்
தங்கள் செல்வத்தை
பழங்காலத்தில் கடந்துவந்த உயிர்வடிவங்களிடம் தொலைக்கின்றனர்.

ஆதிகால கட்டாயங்கள் அவர்களை
ஆனந்தத்தையும் அன்பையும் உலகில் தேடச்செய்கின்றன

சொர்க்கத்தை பூமிக்கு சேர்க்கக்கூடிய
விழிப்புணர்வான தெளிவை விட்டுவிட்டு
குழப்பத்திலும் போராட்டத்திலும் வாழ்வை வீணாக்கச்செய்கின்றன

- சத்குரு

Share This