ஜாம் நகரின் துறைமுகத்தில் தனது மண் காப்போம் பயணத்தைத் தொடர்வதற்காக சத்குரு தரைதொட்ட கணம் தொடங்கி, இந்தியா திரும்பும் அவரை வரவேற்பதற்கான ஆனந்தம் கரைபுரண்டு ஓடியது. சத்குருவை வரவேற்கும் அளவற்ற உற்சாகம், கலாச்சாரப் பன்முகத்தன்மை மற்றும் வண்ணமயமான சில கணங்களைப் படம்பிடித்த நிகழ்வுகளின் தொகுப்பு உங்கள் பார்வைக்காக.
ஐரோப்பா, மேற்கு ஆசியா, மத்திய கிழக்கு நாடுகள் வழியாக மோட்டார் சைக்கிள் பயணம் செய்தபிறகு, சத்குரு இந்தியாவின் ஜாம் நகர கடற்கரையை அடைந்ததும், வண்ணமும், கலாச்சாரமும், இசையும், நடனமுமான கோலாகலக் கலவையுடன் வரவேற்கப்படுகிறார்.
டியோகர் நகரில் பாரம்பரிய ராஜஸ்தானிய நாட்டுப்புறக் கலைஞர்கள் சத்குருவை வரவேற்கின்றனர். அவர்களின் பாடலும், தன்னையிழந்த ஆனந்தமும், சத்குருவையும் அவர்களுடன் இணையச் செய்துவிடுகிறது
சத்குரு மோட்டார் சைக்கிளில் வந்தடைந்ததும், அவரை ஆடியும், பாடியும், மலர்மாரி பொழிந்தும் வரவேற்பதற்கு பெருந்திரளான ஹரியானா மக்கள் கூடியிருக்கின்றனர்.
மண் காப்போம் இயக்கத்துக்கு ஆதரவு அளிப்பதற்கு ஆனந்தம்பொங்க திரண்ட 15,000 பேரும் மாபெரும் அரங்கம் நிறைத்த, சத்குருவின் டெல்லி மண் காப்போம் நிகழ்வின் பின்புலக் காட்சிகள் உங்கள் பார்வைக்கு.
சத்குருவை வரவேற்பதற்காக, டெல்லிக்கே உரித்தான ஆர்வம் கொப்பளிக்கும் உணர்வுடன் கட்டுப்பாடுகள் தகர்த்து முன்னேறினர்.
மண் காப்போம் பயணத்தின் இந்தத் துள்ளலான பகுதியில், அடிவான் முதல் தொடுவான் வரை நீண்ட மக்கள் வரிசையின் வரவேற்பினூடாக, நீண்டசாலையில் நிறைந்திருந்த பசுக்கூட்டங்களை இலாவகமாகக் கடந்து, இடையிடையே துரித பயிற்சிக்கான நிறுத்தங்களுடன், சத்குரு கான்பூரிலிருந்து போபால் வரை பயணிக்கிறார்.
ஷிர்பூரிலிருந்து, மும்பை வரையிலும் சாலையை நனைத்த மழை, தொடர்ந்த சத்குருவின் மோட்டார்சைக்கிள் ஓட்டத்தையோ, அல்லது அவரை கணமேனும் கண்களில் சிறைபிடித்து, இயக்கத்துக்கான தங்கள் ஆதரவைத் தெரிவிக்க சாலைகளில் விளிம்புகட்டி நின்ற தன்னார்வலர்களின் ஆர்வத்தையோ, சற்றும் குறைக்கவில்லை
மும்பையின் ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் மீட் ப்ரோஸ் குழுவினருடன், மண் காப்போம் இயக்கத்துக்காக இசையமைக்கப்பட்ட பிரபலமான “பந்தேயா” பாடலில் சத்குரு தானாகவே இணைகிறார்.
த தாராவி ட்ரீம் புராஜெக்ட் குழுவின் திறமையான குழந்தைகள், மண் காப்போம் இயக்கத்துக்காக, பிரத்யேகமாக இசையமைத்த கலப்பில்லாத, துடிப்புமிக்க ராப் பாடல்களுடன், மும்பையின் தாராவியில் அளித்த வரவேற்பால் சத்குரு ஆழமாக தொடப்படுகிறார்.
மண் காப்போம் இயக்கத்துக்காக ஆதரவும், உற்சாகமும் வெளிப்படுத்தும் நோக்கில் அள்ளித் தெளித்த வர்ணங்களில் ஆர்ப்பரிப்புடன் வீதிகளில் மக்கள் வரிசைகாத்து நிற்க, அழகான புனே நகரின் வழியே சத்குரு பயணிக்கிறார்.
ஐந்து நூற்றாண்டுகளுக்கு முந்தைய புகழ்பெற்ற அவரது மூதாதையராகிய விஜயநகரின் கிருஷ்ணதேவராய மன்னர் குறித்து பேசுகையில், இந்த சரித்திர நாயகன் தொடர்பான வரலாற்று உண்மைகள் மற்றும் பாரம்பரியத்தை விளக்குகிறார்.
சத்குரு பயணவழியில் சாலையோரமாக ஒரு ஆட்டுமந்தையை எதிர்கொண்டு, ஒரு ஆட்டுக்குட்டியை எடுத்து ஏந்திக்கொள்கிறார். விரல்களின் ஸ்பரிசத்தில் கனிவு மேலோங்க, இந்தச் சின்னஞ்சிறு உயிர்கள் அடங்கலாக, சகலத்தையும் தன் சுயலாபத்துக்காக பயன்படுத்தும் மனிதரின் துரதிருஷ்டவசமான அடங்காத்தேவைப் பற்றி பேசுகிறார்.