நடப்புகள்

சத்குருவைத் தொடருங்கள்

கடந்த சில வாரங்களின் கண்ணோட்டம்

Saudis and Expats Converge to Hear Sadhguru Speak about Save Soil (12 May)

Sadhguru received a very warm welcome in Riyadh. He addressed an enthusiastic and highly engaged public gathering organized by the Embassy of India, Riyadh, answering questions of all kinds, and of course – talking about Soil.

ஈஷா யோக மையத்தில் சத்குருவை CNN News18 நேர்காணுகிறது

24 ஜூன்

112 அடியில் கம்பீரமான ஆதியோகி பின்னணியில் இருக்க, மண் காப்போம் பற்றி சத்குருவிடம் நேர்காணலுக்காக CNN News18 ல் இருந்து ஆனந்த் நரசிம்மன் வந்திருந்தார். மோட்டார்சைக்கிளில் 28,000 கிலோமீட்டர்கள் பயணித்து 27 நாடுகளில் ஏறக்குறைய 700 நிகழ்வுகளை நடத்திய சத்குருவின் நம்புதற்கரிய அருஞ்செயலை நினைவுகூர்ந்தவராக ஆனந்த் உரையாடலைத் தொடர்ந்தார். எண்ணத்தைத் தூண்டும் கண்ணோட்டங்களை சத்குருவிடம் இருந்து பெறும்வகையில், சமூக செயற்பாடு, தேசியம் மற்றும் மன ஆரோக்கியம் போன்ற தற்கால சமுதாயப் பார்வையில் பல தலைப்புகளில் உரையாடல் நீண்டது.

ஏஷியாநெட் நியூஸ், சத்குருவை நேர்காணல் செய்கிறது

24 ஜூன்

மண் காப்போம் பயணம் முடிவடைந்த சில நாட்களிலேயே, ஏஷியாநெட் நியூஸ் என்ற மலையாள செய்தி சேனலுக்கு சத்குரு ஒரு நேர்காணல் வழங்கினார். உலகெங்கும் இந்த இயக்கத்துக்கு கிடைத்த அற்புதமான வரவேற்பு, பயணத்தில் அவர் கடக்கவேண்டியிருந்த கடினமான நிலப்பரப்பு மற்றும் மண் அழிவதைத் தடுப்பதற்கு அரசாங்கங்கள் என்ன செய்யமுடியும் என்பதைப் பற்றிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

இந்திய குளோபல் ஃபோரம்-ல் சத்குரு பேசுகிறார்

28 ஜூன்

மண் காப்போம் இயக்கம் மற்றும் அதற்கான உலகளாவிய சூழலியல் உரையாடலின் மீது ஏற்பட்டுள்ள தாக்கத்தை விளக்கியவராக, வரவிருக்கும் தலைமுறைகளுக்காக மண்ணின் ஆரோக்கியத்தை உறுதி செய்யும்பொருட்டு, தேசிய மண் கொள்கைகளை உருவாக்குவதற்கான முக்கியத்துவத்தை சத்குரு கோடிட்டுக் காட்டினார். மேலும் அவர், மண் பிரச்சனையை மற்ற சூழலியல் பிரச்சனைகளில் இருந்து பிரித்துக் காணவேண்டிய தேவையையும் அடிக்கோடிட்டார்

NRIVA-ன் 6வது உலகளாவிய கூட்டமைப்பு நிகழ்வில் சத்குரு

4 ஜூலை

வட அமெரிக்காவின், நான்ரெசிடென்ட் இந்தியன் வைசிய சங்கம் Non-Resident Indian Vysya Association (NRIVA) அவர்களது 6வது உலகளாவிய கூட்டமைப்பில் முக்கிய பேச்சாளராக இருப்பதற்கு சத்குருவை அழைத்தது. சத்குரு தன் உரையில், ஒருவர் தான் சேகரித்தவைகளுடன் சிக்கிப்போகாமல் இருப்பது குறித்தும், தனிமனிதத் தன்மையின் மாயை, குழந்தை வளர்ப்பு மற்றும் மண் காப்போம் குறித்தும் பேசினார்.

Saudis and Expats Converge to Hear Sadhguru Speak about Save Soil (12 May)

Sadhguru received a very warm welcome in Riyadh. He addressed an enthusiastic and highly engaged public gathering organized by the Embassy of India, Riyadh, answering questions of all kinds, and of course – talking about Soil.

துபாயின் அடையாளச் சின்னமான புர்ஜ் கலிஃபாவில் மண் காப்போம்

5 ஜூலை

துபாயின் புர்ஜ் கலிஃபா, மண் காப்போம் இயக்கத்துக்கு ஆதரவளிக்கும் நோக்கில் தன்னை ஒளிரச்செய்தது. மண் அழிவின் பிரச்சனை குறித்து உலகின் கவனத்தை ஈர்ப்பதற்காக, உலகின் மிக உயரமான கட்டடம் ஒளிக்காட்சியைப் பரப்பியது. ஒளிபரப்புக்கு முன்னதாக, மண் காப்போம் தன்னார்வலர்களுக்கு சத்குரு அளித்த வீடியோ அழைப்பின் உரையில், மண் காப்போம் இயக்கத்தை உலகின் மிகப்பெரிய மக்கள் இயக்கமாக உருவாக்குவதற்கு உறுதுணையாக இருந்த ஒவ்வொருவருக்கும் தனது நன்றிகளை வெளிப்படுத்தினார்.

Saudis and Expats Converge to Hear Sadhguru Speak about Save Soil (12 May)

Sadhguru received a very warm welcome in Riyadh. He addressed an enthusiastic and highly engaged public gathering organized by the Embassy of India, Riyadh, answering questions of all kinds, and of course – talking about Soil.

சத்குருவுடன் குரு பௌர்ணமி சத்சங்கம்

13 ஜூலை

குரு பௌர்ணமி சத்சங்கத்துக்காக, ஈஷா இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்னர் சைன்சஸ்-ல் இருந்து ஒளிபரப்பு செய்யப்பட்ட சிறப்பு நேரலையில் சத்குருவின் இருப்பில் இருப்பதற்கான வாய்ப்பு உலகெங்குமுள்ள ஆன்மீக சாதகர்களுக்கு கிடைத்தது. ஒரு மனிதரின் வாழ்க்கையில் ஏன், எப்பொழுது ஒரு குரு முக்கியமாக இருக்கிறார் என்றும், ஒரு குருவை அணுகக்கூடிய வெவ்வேறு வழிகளையும் சத்குரு விளக்கினார். சமூக ஊடகங்களிலிருந்து வந்த கேள்விகளுக்கு சத்குரு பதில் அளிக்கும்பொழுது, காளியின் ஆழமான குறியீடு பற்றியும், உலகைச் சுற்றுவதன் ஆன்மீக அம்சம் மற்றும் வெளிப்படத் தொடங்கியிருக்கும் சூழலியல் அழிவைக் குறைப்பது குறித்தும் அவர் பேசினார்.

வட அமெரிக்காவில் இருந்து 1300 க்கும் அதிகமான ஆர்வமுடைய சாதகர்கள் கலந்துகொண்ட இரண்டு நாள் நிகழ்வாக iii-ல் நடத்தப்பட்ட “குருவின் மடியில்” நிகழ்வில் இந்த சத்சங்கம் ஒரு பகுதியாக இருந்தது. சத்குருவின் இருப்பில் திளைத்து, சக்திவாய்ந்த தியான செயல்களில் ஈடுபட்டு, அவரது ஹாஸ்யம், நகைச்சுவை மற்றும் கூர்மையான ஞானத்தை நேரடியாக உணர்ந்த பங்கேற்பாளர்கள் இனிமையில் ஆழ்ந்த உணர்வையும், பக்தியையும் ஒருசேர அனுபவித்தனர்.