ஈஷா வித்யா

கற்றலை ஈடுபாடும், வேடிக்கையுமாகக் கையாளும் ஈஷா வித்யா பள்ளிகளின் 8 புதுமையான கற்பித்தல் வழிமுறைகள்

பல ஆண்டுகளாக, ஈஷா வித்யா தனது கிராமப்புறப் பள்ளிகளில் மாணவர்கள் கல்வியில் சிறந்த முன்னேற்றமடையவும், தனிமனிதர்களாக வளர்ச்சிபெறவும், எதிர்காலத்துக்கு தயார்நிலையில் உருவாகவும், பல புதுமையான வழிகளை அறிமுகப்படுத்தி வருகின்றது. புதிய திறன்களை மாணவர்கள் எளிதாக எப்படிக் கற்கின்றனர் என்பதற்கான சில உதாரணங்களை இங்கே காணலாம்.

பவர் ஆங்கில வகுப்புகள்

பெரும்பாலான நமது மாணவர்கள், வீட்டில் அவர்களது தாய்மொழியில் பேசுவதால், ஆங்கிலத்தில் பேசும் வழக்கம் இல்லாதவர்கள். ஆகவே, ஆங்கிலம் கற்பதில் கூடுதல் உதவி தேவைப்படும் 1-4 வகுப்பு மாணவர்களுக்கு, கரடி பாத் வழிமுறை (Karadi Path methodology) பயன்படுத்தப்படுகிறது. ஒரு “முழுமையான உடலியல் பிரதிபலிப்பு” செயல்பாட்டுடன் நாம் பவர் ஆங்கில வகுப்புகளை நடத்துகிறோம். இந்த வழிமுறையானது, இசை கேட்டல், கதை வாசிப்பு மற்றும் திரையில் காண்பதை நடித்துக்காட்டுவது போன்றவற்றை உள்ளடக்கியது. இந்த செய்முறையானது மாணவர்களை முனைப்பாக வைத்திருந்து, அவர்களது மொழித் திறன்களை வளர்க்கிறது.

மௌலிநாத், கரூர் ஈஷா வித்யாவில் 7ம் வகுப்பு பயிலும் மாணவன் கூறுவது, “என்னை வெளிப்படுத்துவது கடினமாக இருந்ததால், நான் ஆங்கிலத்தில் பேசுவதற்கு தயங்குவது வழக்கம். கதை வாசிப்பு எனது ஆங்கில வார்த்தைப் பிரயோகத்தை மேம்படுத்தியதால், இப்போது ஆங்கிலத்தில் பேசுவது எளிதாக இருக்கிறது.”

கோட் வித்யா (Code Vidhya)

மாணவர்களை எதிர்காலத்துக்கு தயார்செய்யும் நோக்கத்தில், நான்காம் வகுப்பிலிருந்து மாணவர்களுக்கு “Code Vidhya,” கற்பிக்கப்படுகிறது. இதன் மூலம் அவர்கள் புரோகிராம் செய்தல், வெப் டிசைன் செய்தல் போன்றவற்றைக் கற்றுக்கொண்டு, அவர்களது தர்க்கரீதியான சிந்தனை, பிரச்சனைக்கு தீர்வு காணும் திறன்கள், படைப்பூக்க சிந்தனை ஆகியவற்றில் திறமை பெறுகின்றனர். இந்த வகுப்புகளின்போது, தொழில்நுட்பம் குறித்து மேன்மேலும் அறிந்துகொள்வதில் அவர்கள் ஆர்வம் பெறுகின்றனர்.

சமீபத்தில் ஒரு வகுப்பில், கடலூர் ஈஷா வித்யாவின் 7ம் வகுப்பு மாணவர்கள், micro:bit உடன் Microsoft MakeCode பயன்படுத்தி, NeoPixel வளையங்களில் வானவில் வண்ணங்களை உருவாக்கினர். LED உடன் NeoPixel வளையங்கள், கடிகாரங்களிலும், GPS-ல், பாதை கண்டுபிடிப்பதிலும் பயன்படுத்தப்படுகிறது.

லீப் (LEAP) - சுயமாக தேடிக் கண்டுபிடித்து, உரை வழங்குவதன் மூலம் கற்றல்

6 மற்றும் 7ம் வகுப்பு மாணவர்கள், பல்வேறு தலைப்புகளில் மைக்ரோசாஃப்ட் பவர் பாயிண்ட் ப்ரசண்டேஷன்களை (Microsoft PowerPoint (PPT) presentations) வழங்குவதில் திறமை பெறுவதால், அவர்களது சிந்தனைகளை ஒருங்கிணைத்து, தங்களை திறமையாக வெளிப்படுத்தக் கற்றுக்கொள்கின்றனர்.

சேலம், ஈஷா வித்யாவின் 8ம் வகுப்பு மாணவி திவ்யதர்ஷிணி, அவரது எழுத்துத் திறன், இணையத்தில் தேடும்திறன் மற்றும் பிரசண்டேஷன் திறனை ஒருங்கிணைக்கக் கற்பதற்கு, LEAP உதவியதாகக் கூறுகிறார்.

Atal Tinkering Laboratories

இந்திய அரசாங்க முன்னெடுப்பின், அடல் இன்னொவேஷன் மிஷன், (Atal Innovation Mission) ன் ஒரு பகுதியாகிய அடல் டிங்கரிங் லேபோரடரிகள் எனப்படுவது சமீபத்தில், ஏழு ஈஷா வித்யா பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ளது. இளம் பருவத்திலேயே, ஆர்வம், படைப்பாற்றல் மற்றும் கற்பனைத்திறனை வளர்க்கவும், வடிவமைக்கும் திறன், கம்ப்யூடேஷனல் சிந்தனை, கற்றல் திறன், பிசிக்கல் கம்ப்யூடிங் போன்ற திறமைகளை உருவாக்குவதும் இதன் நோக்கமாக உள்ளது.

4-12ம் வகுப்பிலிருந்து மாணவர்கள் ஸ்டெம், STEM (Science, Technology, Engineering, and Mathematics) கற்பதற்காக, பல துறைகளிலிருந்தும் சாதனங்கள், இந்த சோதனைச் சாலைகளில் இடம்பெற்றுள்ளன. கற்றல் பெரும்பாலும் செயல்முறையாகவும், சக மாணவர்களிடையே விவாதங்கள் மூலமாகவும், ஆசிரியரின் குறைந்தபட்ச வழிகாட்டுதலுடனும் நடைபெறுகிறது.

ஈரோடு ஈஷா வித்யா, 11ம் வகுப்பை சேர்ந்த மாணவரான சிவகிருஷ்ணா என்பவர், மெரைன் இன்ஜினியரிங் படிப்பை மேற்கொள்ளத் திட்டமிடுகிறார். ATL ல் கற்பது, படகுகளில் உள்ள மின்னியல் குறித்து அவருக்கு ஒரு தெளிவான கருத்தை வழங்கியிருப்பதாகக் கூறுகிறார். முன்னதாக, கப்பல் ஓட்டுவதற்கான சென்சார்கள் பயன்பாடு பற்றி அவர் யோசித்துக்கொண்டுள்ளார்.

சக மாணவருடன் கற்றல்

சக மாணவருடன் இணைந்து கற்பது பலவிதங்களிலும் அவர்களை முன்னேற்றுகிறது. பார்வையாளர்கள் முன்பு தெளிவாக உரையாட அவர்களை இது ஆயத்தப்படுத்துகிறது, அவர்களது நெருக்கடி கால சிந்தனை, வாய்மொழி/மௌனமொழி திறன்களை கூர்மையாக்க உதவுகிறது, அவர்களது பேச்சுத்திறனை வளர்த்துக்கொள்ள வாய்ப்பளிக்கிறது, மேலும் திட்டமிடாத நேரங்களிலும் சட்டென்று பேசும் திறனைக் கற்றுக்கொடுக்கிறது. இது தவிர, சக மாணவர் போதிக்கும்போது, மாணவர்கள் சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக்கொள்ளும் தயக்கங்கள் களைந்து, சுதந்திரமாக கற்கின்றனர்.

தற்போது 8ம் வகுப்பு மாணவர்கள் இருவர் இணைந்து, 4-5 மாணவர்கள் கொண்ட குழுக்களுக்கு சக மாணவர்களுடன் கற்கும் வகுப்புகளை, 2-5ம் வகுப்பு மாணவர்களின் தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களில் செயல்படுத்துகின்றனர்.

ஈரோடு, ஈஷா வித்யாவின் 10ம் வகுப்பு மாணவி அருணா, 6ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் போதித்ததைப் பற்றி கூறுகையில், ஜூனியர்களுக்கு எளிய முறையில் கருத்துகளை விளக்கும் அவரது திறன் மேம்பாடு அடைந்ததாகவும், மேலும் தன்னம்பிக்கை பெறுவதற்கு அவருக்கு அது உதவியதாகவும் கூறுகிறார்.

தற்சார்பு நிர்வாக சாத்தியங்கள்

மாணவர்களுக்கு, முற்றிலும் சுயமாக ஒரு புராஜெக்ட் அல்லது நிகழ்வை பொறுப்பேற்று நடத்தும் வாய்ப்பு வழங்கப்படுகின்றது. சமீபத்தில், கோவை ஈஷா வித்யா மாணவர்கள் மெடிக்கல் கேம்ப் ஒன்றை ஒருங்கிணைத்தனர். அவர்களது ஆசிரியர்களின் வழிகாட்டுதலில், மாணவர்கள் தனித்தனியாக குழுக்களை உருவாக்கி, அட்டவணையிடுதல், தேவையான பொருட்கள் ஏற்பாடு செய்தல், பதிவு பராமரிப்பு போன்ற பல்வேறு பணிகளைப் பிரித்துக்கொண்டனர். அதன்மூலம், அவர்கள் ஒருங்கிணைப்பு, தலைமைப்பண்பு, குழுப்பணி மற்றும் பல திறன்களைக் கற்றனர்.

மாணவர் குழுவின் ஒரு பாகமாக இருந்த சுபஸ்ரீ, தான் நேரத்தை நிர்வகிக்கக் கற்றுக்கொண்டதாகவும், தகவல் பரிமாற்றத்தில் தெளிவு கிடைத்திருப்பதாகவும் கூறுகிறார். இந்தக் கற்றலை அவரது படிப்பில் முன்னேற்றமடையப் பயன்படுத்துகிறார்.

தொழில் முனைப்பு தினம்

சமீபத்தில், பல்வேறு துறைகளாகிய பொறியியல், மருத்துவம் மற்றும் சட்டம் போன்ற தொழில்களிலிருந்து 18 கௌரவ பேச்சாளர்கள், ஆன்லைனில் 9-12ம் வகுப்பு மாணவர்களுக்கு, எதிர்காலத்தில் தொழில் தேர்ந்தெடுத்தல் குறித்து உரையாற்றி, அந்தத் தொழில்களை எப்படிக் கண்டடைவது என்று வழிகாட்டினர். ஆன்லைன் அமர்வுகளால் ஆர்வமடைந்த நமது மாணவர்கள் பலவாறு கேள்விகளை எழுப்பியதால், அவர்களது உற்சாகம் கண்டு பேச்சாளர்கள் நெகிழ்ந்துவிட்டனர்.

தமிழ்செல்வன் என்ற மாணவர் பகிர்ந்துகொண்டார்,” இந்த அமர்வுகள் புதிய விஷயங்களில் எனது ஆர்வத்தை விசாலமாக்கி, ஒரு சிறப்பான எதிர்காலத்துக்கு எனக்கு நம்பிக்கையூட்டியது. நான் ஏற்றுக்கொள்வதுடன் இருக்கவேண்டும், என் கனவுகளை நனவாக்க முயற்சிக்க வேண்டும், எனது பணியில் முழுமையான விருப்பத்துடன் இருக்கவேண்டும் என்று நான் கற்றுக்கொண்டேன்.”

பாலர்பள்ளியில் வேடிக்கை வழி கற்றல் செயல்பாடுகள்

மழலையர்பள்ளி மாணவர்கள் சிரமமின்றி கற்பதற்கு உதவி செய்வதற்காக, மொழி அரிச்சுவடி, வடிவங்கள், எண்கள் கற்றுக்கொள்வது போன்ற எளிமையான பாடங்களுக்குக்கூட நாம் வேடிக்கை வழி செயல்முறைகளை அறிமுகப்படுத்துகிறோம்.