சத்குரு மண் காப்போம் இயக்கத்திற்காக தனிநபராக மேற்கொண்ட மோட்டார் சைக்கிள் பயணத்தின் ஒரு பகுதியாக சவுதி அரேபியாவிலிருந்து கோவை ஈஷா யோக மையம் வரை வந்த பயணத்தின் சிறப்பம்சங்களை இங்கே பார்க்கலாம்.
சுற்றுச்சூழல், நீர் மற்றும் வேளாண்மை அமைச்சர், மேதகு இஞ்சினியர் அப்துல்ரஹ்மான் பின் அப்துல்மொசென் அல் -ஃபத்லி, சத்குருவை ரியாத்தில் சந்தித்து, மண் காப்போம் இயக்கத்திற்கு தனது முழுமையான ஆதரவை வழங்கினார்.
சத்குருவுக்கு ரியாத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. உற்சாகமிக்க அதீத ஈடுபாடு கொண்ட பொதுக் கூட்டத்தில் அவர் உரையாற்றினார். அனைத்து வகையான கேள்விகளுக்கும் பதிலளித்தார், குறிப்பாக - மண்ணைப் பற்றி பேசினார்.
உலக முஸ்லிம் லீக் அமைப்பின் பொது செயலாளர் மேதகு டாக்டர். முஹம்மது பின் அப்துல்கரீம் அல்-இஸா அவர்கள், சத்குருவையும் மண் காப்போம் இயக்கத்தையும் மிகுந்த அன்புடனும், உற்சாகத்துடனும் வரவேற்றார். இதனை நிகழச் செய்வதற்கு நடைமுறைக்கேற்ற உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதில் உலக முஸ்லிம் லீக்கின் முழுமையான ஆதரவை உறுதி செய்தார்.
பஹ்ரைனின் தலைவர்கள் மற்றும் செல்வாக்கு பெற்றவர்கள் கூடிய ஒரு சிறப்பு மாலைக்கு சத்குரு விருந்தினராக அழைக்கப்பட்டார். பஹ்ரைனின் தொழிலாளர் மற்றும் சமூக விவகாரங்களின் முன்னாள் அமைச்சர் மேதகு அப்துல்நபி அல்ஷோலா, சத்குருவின் ஞானமானது மதம் மற்றும் கலாச்சாரத்தின் அனைத்து பிரிவுகளையும் கடந்து இருப்பதைக் குறித்து பேசினார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் மேதகு மரியம் பின்த் முகமது சயீத் ஹரேப் அல்மெய்ரி, சத்குருவை சந்தித்து மண் காப்போம் இயக்கத்திற்கான தனது ஆதரவை உறுதியளித்தார். அவர் சத்குருவை ஒரு சதுப்புநில தோட்டத்திற்கு அழைத்துச் சென்று, பாலைவன நிலத்தை மீட்டு அதை வளமாக்குவதற்கு மேற்கொள்ளப்படும் பல்வேறு முயற்சிகளையும் சுற்றிக்காட்டினார். இருவரும் சதுப்புநில மரக்கன்றுகளை நட்டனர்.
சத்குரு துபாய் உலக வர்த்தக மையத்தில் (DWTC) நடைபெற்ற பெரிய அளவிலான பொது நிகழ்வோடு ஐக்கிய அரபு அமீரக பகுதியிலான தனது மண் காப்போம் பயணத்தை முடித்தார். கௌரவ விருந்தினரான, சகிப்புத்தன்மை மற்றும் சகவாழ்வு அமைச்சர் மேதகு ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யான் அவர்களின் துவக்கவுரையுடன் நிகழ்வு ஆரம்பமானது.
சத்குருவைக் காண துபாயின் எதிர்கால அருங்காட்சியகத்தில் கூடிய ஐக்கிய அரபு அமீரகத்தின் மக்கள், சத்குருவைச் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி அடைந்தனர். அவர்களில் பெரும்பாலோர் முதல் முறையாக சத்குருவை சந்திப்பவர்கள். மண் காப்போம் இயக்கத்திற்கு முழு மனதாக தங்கள் ஆதரவை அவர்கள் வழங்கினர்.
எமிரேட்ஸ் பயோ ஃபார்ம், கரிமப் பொருட்களைச் சேர்ப்பதன் மூலம் மணலை வளமான மண்ணாக மாற்றி ஐக்கிய அரபு அமீரகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகின்றது. அவர்கள் அங்கு நடைமுறையில் உருவாக்கிவருவது, கரிமவளத்தின் முக்கியத்துவம் பற்றிய சத்குருவின் ஆழமான புரிதலுடன் மிகச்சரியாக ஒத்துப்போகிறது என்று அதன் நிறுவனர் மற்றும் மேலாளர் கூறினார். மேலும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வளமான வெகுமதிகளுடன் உணவுப் பாதுகாப்பினையும் எவ்வாறு இது தருகின்றது என்றும் கூறினார்.
சத்குருவுடன் மகிழ்ச்சிகரமான மாலைப் பொழுதைக் கழிக்க ஓமன் முழுவதிலுமிருந்து மக்கள் மஸ்கட்டில் கூடினர். ஓமனுக்கான இந்தியத் தூதர் அமித் நரங் தனது தொடக்க உரையில், மனிதகுலத்தை ஒன்றிணைக்கும் உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த மண் காப்போம் இயக்கத்தை குறித்த சத்குருவின் தனிச்சிறப்பு வாய்ந்த தலைமைத்துவம் மற்றும் மனவுறுதிக்காக அவரைப் பாராட்டினார். தனது 100 நாள் பயணத்தின், மத்திய கிழக்குப் பகுதியின் கடைசி நாடாக ஓமனில் இருப்பது பெரும் பாக்கியம் என்று சத்குரு கூறினார்.
70 நாட்கள் சாலைப் பயணத்திற்குப் பிறகு, இந்தியாவில் மண் காப்போம் பயணத்தின் இறுதிக் கட்டத்திற்காக சத்குரு குஜராத்தின் ஜாம்நகருக்கு வந்தடைந்தார். புது பேடி துறைமுகத்தில், இந்தியக் கடற்படையின் முதன்மை தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனமான ஐஎன்எஸ் வல்சுரா சத்குருவை வரவேற்றது. ஐஎன்எஸ் வல்சுராவின் படைத்தலைவர், விசிஷ்ட சேவா பதக்கம் பெற்ற காமடோர் கௌதம் மர்வாஹா அவர்கள் சத்குருவை வாழ்த்தி வரவேற்றார்.
குஜராத்தின் மாண்புமிகு முதலமைச்சர் பூபேந்திர படேல் அவர்கள் கலந்து கொண்ட பொது நிகழ்வில் மண் காப்போம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட முதல் இந்திய மாநிலமாக குஜராத் ஆனது.
மகாராஜ் குமார் லட்சியராஜ் சிங் ஜி மேவார் அவர்கள் சத்குருவுடன் ராஜஸ்தானின் உதய்பூரில் உள்ள அரண்மையில் உரையாடினார். சத்குரு தனது மோட்டார் சைக்கிளில் வந்தபோது, தெருக்கள் முழுவதும் பச்சை நிற மண் காப்போம் டி-சர்ட் அணிந்து வரிசையாக நின்றிருந்த மக்கள் அவரை மலர் தூவி வரவேற்றனர்.
மாண்புமிகு ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் அவர்களை சத்குரு சந்தித்து, மண் புத்துயிராக்க கையேட்டை வழங்கினார். மண் காப்போம் இயக்கத்துடன் ராஜஸ்தான் அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
ஜெய்ப்பூர் கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் மண் காப்போம் தன்னார்வத் தொண்டர்கள், ஆதரவாளர்கள் மற்றும் அக்கறையுள்ள குடிமக்கள் ஆகியோர் மண் காப்போம் இயக்கத்தைப் பற்றி சத்குரு பேசுவதைக் கேட்க வந்திருந்தனர்.
புதுடெல்லி இந்திரா காந்தி ஸ்டேடிய வளாகத்தில் 15,000க்கும் மேற்பட்ட மக்கள் சத்குருவிற்கு உற்சாக வரவேற்பை அளித்தனர். இந்திய அரசின் முதன்மைப் பொருளாதார ஆலோசகர் சஞ்சீவ் சன்யால் அவர்கள் மண்ணைப் பாதுகாப்பதற்கும், வருங்கால சந்ததியினர் வாழத் தகுந்ததாக நம் பூமி இருப்பதை உறுதி செய்வதற்கும் இந்த மிகப்பெரிய உலகளாவிய முன்னெடுப்பின் அவசியத்தை வலியுறுத்தி, மண் காப்போம் இயக்கத்திற்கு தனது ஆதரவை வழங்கினார். மக்களுக்கான அதிகாரம் வாக்களிப்பதால் மட்டுமல்ல, தாங்கள் எழுப்பும் குரலாலும் கிடைக்குமென்று கூறிய சத்குரு, இந்த நாட்டிலும் உலகெங்கிலும் உள்ள மண் பிரச்சினையை தீர்க்கும் வரை மக்கள் குரல் கொடுக்க வேண்டுமென்று வலியுறுத்தினார்.
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் உலக சுற்றுச்சூழல் தினத்தன்று புதுதில்லியில் சத்குருவை சந்தித்தார். மண் காப்போம் இயக்கம் மற்றும் சுற்றுச்சூழல் துறையில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து இருவரும் பேசினர். தலைமுறைக்குமான இந்த இயக்கத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் மகத்தான முயற்சியை வெகுவாகப் பாராட்டியதுடன், பிரதமர் தன் முழு மனதான ஆதரவையும் நல்கினார்.
மாண்புமிகு முதலமைச்சரின் தலைமையில் உத்தரப்பிரதேசம் அடைந்துள்ள அபரிமிதமான முன்னேற்றத்திற்காக சத்குரு அவர்களைப் பாராட்டினார். இந்திய வேளாண்மையின் உயிர்நாடியாக விளங்கும் கங்கைப்படுகையை கொண்டுள்ள இந்த மாநிலம் மண் காப்போம் இயக்கத்தின் வெற்றிக்கு முக்கியமானது என்றும் அவர் எடுத்துரைத்தார். மேலும் ஸ்ரீ யோகி ஆதித்யநாத், மாநிலம் முழுவதுக்கும் பயனளிக்கக்கூடிய மண் கொள்கையை செயல்படுத்த மண் காப்போம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
மற்றுமொரு “இளைஞரும் உண்மையும் சந்தித்தால்” நிகழ்ச்சிக்காக சத்குரு சென்றது, ஐஐடி கான்பூர் மாணவர்களுக்கு பெரும் பரிசாக அமைந்தது. மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த சத்குரு, மண் காப்போம் இயக்கம் குறித்து பேசினார்.
ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட ஒரு பொது நிகழ்வில், மத்தியப் பிரதேசத்தின் மாண்புமிகு முதலமைச்சர் ஸ்ரீ சிவராஜ் சிங் சௌஹான் அவர்கள் மண் காப்போம் இயக்கத்துக்கு அரசு தன் முழு ஆதரவை அளிப்பதாகவும், மாநிலத்தில் விரிவான மண் கொள்கையை அமல்படுத்துவதாகவும் உறுதியளித்தார். சத்குரு மத்தியப்பிரதேசத்தின் ஆற்றல்மிக்க தலைமையைப் பாராட்டி, இந்த நடவடிக்கை எடுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். மத்தியப்பிரதேசம் மற்றும் மண் காப்போம் இயக்கத்திற்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது.
மத்தியப்பிரதேசத்தின் மோவ் நகரில் உள்ள புகழ்பெற்ற காலாட்படைப் பள்ளியில் பயிற்சிபெறும் இளம் போர்வீரர்களின் சக்திவாய்ந்த குழு ஒன்று சத்குருவை வரவேற்றது. மண் காப்போம் இயக்கம் பற்றி அந்த குழுவிடம் பேசிய சத்குரு, மோவ் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இந்திய ராணுவம் மேற்கொண்ட பல்லுயிர் பாதுகாப்பு முயற்சிகளையும் பாராட்டினார்.
மண் காப்போம் இயக்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஐந்தாவது இந்திய மாநிலமாக மகாராஷ்டிரம் ஆனது. சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சரான திரு. ஆதித்யா தாக்கரே, சத்குருவுடன் பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, மண் காப்போம் இயக்கத்துக்கு தன் முழு ஆதரவை நல்கினார். முன்னதாக, மகாராஷ்டிராவின் மாண்புமிகு முதலமைச்சர் திரு உத்தவ் தாக்கரேயும் சத்குருவைச் சந்தித்து, இந்த மாபெரும் இயக்கத்திற்கு மகாராஷ்டிராவின் ஆதரவை உறுதியளித்தார்.
இந்தியாவின் மிகப்பெரிய சேரிகளில் ஒன்றான மும்பையின் தாராவியை சேர்ந்த குழந்தைகள், தாராவி கனவுத் திட்டத்தின் சார்பாக சத்குருவையும் மண் காப்போம் இயக்கத்தையும் ராப் இசை, பீட்பாக்ஸிங் மற்றும் அருமையான நடனத்திறன்கள் மூலம் வரவேற்றனர். தாராவி கனவுத் திட்டம் பாடல் மற்றும் நடனம் மூலம் இளைஞர்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தியாவில் அதிகம் வாசிக்கப்படும் பிராந்திய செய்தித்தாளான லோக்மத், விஜய் தர்தா , காமியா ஜனி, தேவேந்திர தர்தா ஆகியோருடன் சத்குருவின் பல தலைப்பிலான உரையாடல் நிகழ்வை புனேவில் ஏற்பாடு செய்தனர். ஒரு உற்சாகமான கூட்டம் இந்த ஆழ்ந்த சொற்பொழிவினைக் கண்டனர். பிற தலைப்புகளுடன் சேர்த்து, சத்குரு மண் காப்போம் இயக்கத்தின் முக்கியத்துவம் மற்றும் குறிப்பிட்ட காலத்தில் இதை செயல்படுத்த வேண்டியதின் அவசியத்தையும் பற்றி விளக்கினார்.
தெலங்கானாவின் மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சரான ஸ்ரீ கே.டி.ராமராவ் அவர்களின் தொடக்க உரைக்குப் பிறகு, பிரபல நடிகை சமந்தா, சத்குருவுடன் உரையாடலில் இணைந்தார். அகங்காரம், கர்மா, மண் காப்போம் இயக்கத்திற்கான அவரது பயணம் மற்றும் பலவற்றைப் பற்றி உரையாடினார். பார்வையாளர்களில் பலர் கேள்விகளைக் கேட்கும் வாய்ப்பைப் பெற்றனர், அதை அவர்கள் முழுமையாகப் பயன்படுத்தினர்.
கர்னூலில் சத்குருவுடன் மண் காப்போம் பொது நிகழ்ச்சி (ஜூன் 17)
ஆந்திரப் பிரதேசத்தின் வேளாண்மைத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு கக்கனி கோவர்தன் ரெட்டி அவர்கள், கர்னூல் நகரில் மேடையில் சத்குருவுடன் உரையாடினார். அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் சத்குருவைப் பார்ப்பதற்காகவும் மண் காப்போம் இயக்கத்திற்கு ஆதரவளிக்கவும் வந்திருந்தனர். அனைவரின் அன்பினையும் பெற்ற நடிகரும் நிகழ்ச்சி தொகுப்பாளருமான அதிவி சேஷின் ராணுவ வீரர்களின் பங்கைப் பற்றிய கேள்விக்கு, தேசத்தைக் காக்க தங்கள் உயிரைக் கொடுக்கத் தயாராக இருக்கும் வீரர்கள் எல்லையில் இருப்பதால் மட்டுமே மக்களால் அனைத்தும் செய்யமுடிகிறது என்று சத்குரு உணர்ச்சிப்பூர்வமாக பதிலளித்தார்.
பொது நிகழ்ச்சிக்கான பிரமாண்டமான திறந்தவெளி அரங்கம் சத்குருவை வரவேற்க காத்திருந்த மக்களால் நிரம்பி வழிந்தது. தனது சொந்த ஊருக்கு வந்தடைந்த சத்குருவை அவர்கள் பெரும் ஆரவாரத்துடனும் பாசத்துடனும் வரவேற்றனர். லண்டனில் தொடங்கிய தனது மோட்டார் சைக்கிள் பயணத்தின் மூலம் மண் காப்போம் இயக்கம் ஏற்கனவே 320 கோடிக்கும் அதிகமான மக்களைத் சென்றடைந்துள்ளது என்பதை முதன்முதலாக சத்குரு இங்கு வெளிப்படுத்தினார். சுத்தூர் மடத்தின் ஜகத்குரு ஸ்ரீ சிவராத்திரி தேஷிகேந்திரா சுவாமிஜி சமீபத்தில் நடந்த உலகப் பொருளாதார மன்றத்தில் சத்குரு ஆற்றிய உரையை நினைவு கூர்ந்து, உலகளாவிய மன்றம் செயல்படுத்தக்கூடிய திட்டங்களோடு வர வேண்டும் என்று சத்குரு வலியுறுத்தியதை சுட்டிக்காட்டினார். அவர் மேலும் கூறுகையில், “ஒரு துறவிக்கு மட்டுமே இதுபோன்ற விஷயத்தை உலகளாவிய மன்றத்தில் சொல்ல தைரியம் இருக்க முடியும். இந்த விஷயத்தில் அனைத்து இந்தியர்களும் பெருமிதம் கொள்ள வேண்டும்" என்றார்.
மண் காப்போம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட எட்டாவது மாநிலமாக கர்நாடகம் ஆனது மற்றொரு முக்கிய தருணம். கர்நாடகாவின் மாண்புமிகு முதலமைச்சர் பசவராஜு பொம்மை அவர்களுடன் ஒரு நிகழ்ச்சிக்காக வந்த சத்குருவை அரண்மனை மைதானத்தில் நிரம்பி வழிந்த பெங்களூரு மக்கள் வரவேற்றனர். புத்திசாலித்தனத்தை நிர்ப்பந்தமாக நடத்துவதை விட விழிப்புணர்வோடு நடத்துவதன் முக்கியத்துவத்தைப் பற்றி பேசிய சத்குரு, அழிக்கும் மற்றும் உருவாக்கும் திறனின் அடிப்படையில், மற்ற எல்லா உயிரினங்களுக்கும் மேலாக மனிதர்கள் நிற்கிறார்கள் என்று விளக்கினார்.
மண் காப்போம் பயணத்தின் கடைசி நாளில், சத்குரு தமிழ்நாட்டின் சூலூர் விமானப்படை நிலையத்தில் இந்திய விமானப்படை அதிகாரிகளிடம் தன் நேரத்தை செலவிட்டார். இணையதளம் வாயிலாக இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஸ்ரீ ராஜ்நாத் சிங்கும் அவருடன் கலந்து கொண்டார். அவர் மண் காப்போம் இயக்கத்தைப் பாராட்டினார். மேலும், சத்குரு கடந்த 100 நாட்களில் செய்த சாதனைக்காக உண்மையான பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
உலகளவில் மண் காப்போம் இயக்கத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றிக்குப் பிறகு, சத்குரு தனிநபராக மேற்கொண்ட மோட்டார் சைக்கிள் பயணம், சர்வதேச யோகா தினத்தன்று ஆதியோகி முன்னிலையில் ஈஷா யோகா மையத்தில் நிறைவு பெற்றது. ஈஷா யோகா மையத்தின் முழுநேர தன்னார்வலர்கள் மற்றும் பிரம்மச்சாரிகள் சத்குருவிற்கு பிரமாண்டமான வரவேற்பு நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர். அந்த நிகழ்வில் சத்குருவுடன் பயணித்த தன்னார்வலர்களின் அனுபவ பகிர்வுகளும் இடம் பெற்றது. கடந்த 100 நாட்களில் சாதிக்கப்பட்டவைகளின் முக்கியத்துவத்தை சத்குரு எடுத்துரைத்ததோடு அந்த நிகழ்வு நிறைவுற்றது.
சத்குரு கூறியவற்றை பற்றி இங்கே வாசியுங்கள்.