மண் காப்போம்

சத்குருவின் மண் காப்போம் பயணத்திலிருந்து அவருடனான 18 தன்னியல்பான கணங்கள்

ஐரோப்பா, மத்திய ஆசியா, மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் வழியாகத் தொடர்ந்த சத்குருவின் பயணத்திலிருந்து, மண் காப்போம் இயக்கத்தின் சமீபத்திய தகவல்கள், பாதையில் கண்ணுற்ற இரம்மியமான இடங்கள், மற்றும் இதயத்தை வருடும் தனிப்பட்ட சந்திப்புகள் உள்ளிட்ட சிறுசிறு, இயல்பான படத்தொகுப்புகளைக் கண்டுகளிக்கலாம்.

குட்டி மண் நண்பன், அவனது மண் காப்போம் செயல்பாடு பற்றி சத்குருவிடம் கூறுகிறான்

View this post on Instagram

Shared post on

Santeqniki

பிரிட்டனைச் சார்ந்த சிறுவன் அர்ஜூன், மண் காப்போம் குறித்து எழுதிய தனது கடிதங்களுக்கு யுகே அரசியல்வாதிகளிடமிருந்து வந்த நம்பிக்கையூட்டும் பதில்களைப்பற்றி சத்குருவிடம் கூறுகிறான். உரையாடலின் முடிவில் அர்ஜூன் அவனது இசைத்திறனை வெளிப்படுத்த, இருவரும் இணைந்து பாடுகின்றனர்.

வியன்னாவில் பூங்கா ஒன்றில் ஒருவர் அமர்ந்திருந்தார். அப்போதுதான் இது நிகழ்ந்தது....

Santeqniki

தன்னிச்சையாக, ஒரு மனிதர் அன்றைய நாளை எங்காவது வெளியில் கழிக்க முடிவு செய்தார். எதிர்பாராத விதமாக யாரை சந்திக்க இருக்கிறார் என்பதை அப்போது அவர் அறிந்திருக்கவில்லை.

பல தொப்பிகளை அணியும் ஒரு யோகி

பிரான்ஸின் பாரம்பரியமான தொப்பியை அணிந்தவாறு, சத்குரு வாழ்வின் அடிப்படையான ஒரு கேள்வி குறித்து பேசுவதுடன், அவரை ஒரு யோகியாக இருக்கச்செய்வது எது என்பதையும் வெளிப்படுத்துகிறார்.

டெய்சி மலர்களின் மடியில் சத்குரு

சத்குரு மேற்கொண்டிருக்கும் கடினமான மோட்டார் சைக்கிள் பயணத்திற்கு இடையில் ஆசுவாசம் கொள்ளும் ஒரு அரிய தருணத்திலும்கூட, எல்லா படைப்புகளுடனும் ஒத்திசைந்து வாழ்வதன் முக்கியத்துவம் குறித்து பேசுகிறார்.

மொசார்ட் பிறந்த நகரத்தில் சத்குரு ஒரு தனித்துவமான அன்பளிப்பைப் பெறுகிறார்

சால்ஸ்பர்க் நகரின் வீதிகளில் நடந்து செல்கையில், சத்குரு தனிச்சிறப்பு வாய்ந்த ஒரு அன்பளிப்பை பெறுகிறார். பரிசினைத் திறந்து பார்த்தவாறு, தருவதும், பெறுவதுமான செயல்முறை குறித்துப் பேசுகிறார். உங்களுக்கு யாரேனும் ஒரு அன்பளிப்பு வழங்கினால், அது சிறப்பாக உள்ளதா, இல்லையா என்று மதிப்பிடக்கூடாது என்றும் கூறுகிறார்.

ஸ்விட்சர்லாந்தின் வரலாற்றுப் புகழ் வாய்ந்த ஒரு திராட்சைத் தோட்டத்தில், சத்குருவிற்காக பிரபலமான இசைக்கலைஞர் பாடுகிறார்

ஸ்விட்சர்லாந்து பாடகரும், பாடலாசிரியருமான பாஸ்டியன் பேக்கர் சத்குருவிற்காக பாடுவதுடன், மண்ணின் நிலை ஒரு சீரிய உலகளாவிய தாக்கத்தை எவ்வாறு ஏற்படுத்தமுடியும் என்பது குறித்து உரையாடுகின்றார்.

ரோமிய விவசாய சந்தை ஒன்றில் சத்குரு உள்ளூர் விவசாயிகளிடம் அளவளாவுகிறார்

சத்குரு ரோம் நகரில் இருந்தபொழுது, ரோமியர்களைப் போலவே, சந்தையை நோக்கிச் செல்கிறார். உள்ளூர் மக்களிடம் பேசிக்கொண்டே இத்தாலிய விளைச்சலின் பெருமையைப் புகழ்ந்தவாறு, விவசாயிகளின் குறைகளைப்பற்றி கேட்டறிகிறார்.

பூஜ்ஜியத்துக்கும் கீழான வெப்ப நிலையிலும் நில்லாத சத்குருவின் பயணம்

புக்காரெஸ்ட் செல்லும் வழியில், உறைய வைக்கும் குளிரையும், அபாயகரமான சாலை நிலைமையையும் சத்குரு சந்திக்கிறார். தனது அடுத்த நிகழ்ச்சிக்குக் குறித்த நேரத்திற்குச் சென்றடையும் ஒரே நோக்கத்துடன், சற்றும் தளராமல், அவர் முன்னேறிச் செல்கிறார்,

சத்குருவிற்காக குழலூதும் பெரும்புகழ் பெற்ற ரோமானியர்

ரோமானிய மற்றும் இந்திய சங்கீத பாரம்பரியங்கள் நெருக்கமான தொடர்புடையவை என்பதால், ரோமானிய இசைக்கலைஞர் ஜார்ஜ் ஜம்ஃபிர், இந்தியக் கலாச்சாரத்தின் மீதான தன் காதலையும், இந்தியாவில் இசை நிகழ்த்தும் தன் ஆசையையும் வெளிப்படுத்துகிறார்.

வண்ணமயமான மக்கள் திரளாக நின்று சத்குருவுக்கு பிரியமுடன், பிரியாவிடை வழங்குகின்றனர்

மஞ்சள் வண்ண ஆடையும், வெடிக்கும் தீவிரமுமாக, அசர்பெய்ஜானின் இளைஞர்கள் சத்குருவுக்கு துடிப்பான பிரியாவிடை அளிக்கின்றனர்.

இஸ்தான்புல் சூஃபி சுழல் நடனத்தில் சத்குரு பங்கேற்கிறார்

பனி வெண்ணுடையில் சுழன்றாடும் சூஃபி நடனக்கலைஞர்கள் அவர்களது மென்மை ததும்பும் அசைவுகளால் சத்குருவின் இதயம் தொடுகின்றனர்.

நெடும்பயணத்திற்கு இடையில் மாம்பழங்களை ருசிக்கின்றார்

காப்15 பொருட்டு அபிட்ஜான், ஐவரி கடற்கரையில் ஒரு இடைநிறுத்தத்தின்போது, சத்குரு ஆப்பிரிக்க மாம்பழங்களையும், இந்திய மாம்பழங்களையும் ஒப்பிட்டுப் பேசுகிறார்.

யுஎன்சிசிடி மாநாடு (காப்15), அபிட்ஜானிலிருந்து

ஐவரி கடற்கரை, அபிட்ஜானில் நிகழும் ஐநாவின் பாலைவனமாக்கலுக்கு எதிரான அமைப்பின் (யுஎன்சிசிடி) மாநாடு-காப்15 நிகழ்வுகள் குறித்து விவரிக்கும் சத்குரு, உலகெங்கும் மண்ணை மீட்டெடுப்பதற்கான நடைமுறைக்கு ஏற்ற, சாத்தியப்படும் தீர்வுகளைக் கொண்டுவர வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார்.

பழமையும் வசீகரமும் பெற்ற ஜஃபா நகரில் சத்குரு

இஸ்ரேலில் இருக்கும் ஜஃபா நகரம் மற்றும் அதன் 4000 வருட வரலாறு குறித்து சத்குரு பேசுகிறார்.

மோட்டார் சைக்கிளிலிருந்து ஒட்டகத்துக்கு

ஜோர்டானின் அனல் கொப்பளிக்கும் பாலைவன வழிப்பயணத்துக்கு பொருத்தமான வாகனத்தை சத்குரு தேர்வு செய்கிறார்!

மண் காப்போம் பயணத்தை சாலையிலிருந்து பாலைவன மணலுக்கு சத்குரு எடுத்துச் செல்கிறார்

தார்ச்சாலையிலிருந்து மணல் மேடுகளுக்கு! சவாலைத் திரும்பப் பெறாதவராக, சத்குரு பாலைவழிப் பயண சாகசத்துக்கேற்றவாறு தன் மோட்டார்சைக்கிளில் வேண்டிய மாற்றங்கள் செய்கிறார்.

மணற்புயல்களிலும் ஓயாத பயணம்

பஹ்ரைனை நோக்கிய நீண்ட பயணத்தில் மணற்புயல்கள் சாலையை மூழ்கடிக்கின்றன.

ஈஷா காட்டுப்பூவின் ஆகஸ்டு மாத இதழில், இந்தியாவில் சத்குருவின் மண் காப்போம் பயணத்தில் நிகழ்ந்த சில சிறந்த இயல்பான படக்காட்சிகளின் தொகுப்புகளை உங்களுக்கு வழங்குவோம்.