ஈஷா சமையல்

ஆரோக்கியமான காய்கறி மற்றும் குயினோவா

தேவையான பொருட்கள்

(4 பேருக்கு)

காய்கறிகள்

1½ கப் கேரட் (தோல் நீக்கி, க்யூப் வடிவில் வெட்டியது)

1½ கப் சர்க்கரைவள்ளி கிழங்கு (தோல் நீக்கி, ½" க்யூப் வடிவில் வெட்டியது)

2 கப் ப்ரோக்கோலி (பச்சை பூக்கோசு) (தனித்தனி பூக்களாக வெட்டியது)

1 தேக்கரண்டி மேப்பிள் சிரப் அல்லது நாட்டுசர்க்கரை பாகு

2 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய்

1 சிட்டிகை கல் உப்பு

1 சிட்டிகை மிளகுத்தூள்

1 தேக்கரண்டி நறுக்கிய ரோஸ்மெரி (புதியதாக இருப்பது சிறந்தது)

குயினோவா

1 கப் குயினோவா (அலசி வடிகட்டியது)

1¾ கப் தண்ணீர்

1 சிட்டிகை உப்பு

சாஸ்

½ கப் தஹினி

3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு

2-3 தேக்கரண்டி மேப்பிள் சிரப் அல்லது நாட்டுசர்க்கரை பாகு

கூடுதலாக (விரும்பினால்)

புதியதான மூலிகைகள் (கொத்தமல்லி, பார்சிலி, புதினா, தைம் போன்றவை)

மாதுளை விதைகள்

செய்முறை

1. சாஸ் தயார் செய்ய, தாஹினி, எலுமிச்சை சாறு மற்றும் மேப்பிள் சிரப்பை ஒரு பெரிய கிண்ணத்தில் இட்டு, இவை ஒன்றாக சேருமாறு வேகமாக அடித்து கலக்கவும். 2 தேக்கரண்டி இளஞ்சூடான நீரினை சேர்த்து நன்றாக அடித்து கலக்கவும். சுவைத்து பார்த்து, தேவைக்கு ஏற்றது போல் சரிசெய்துக் கொள்ளவும்

2. குயினோவாவிற்கு, அடுப்பை மிதமான சூட்டில் (மீடியம் ஹீட்) வைத்து கடாயினை சூடு செய்யவும். சூடானவுடன், குயினோவாவை கொட்டி அதில் உள்ள ஈரப்பதம் போகவும் கொட்டை சுவை வருவதற்கும் லேசாக வறுக்கவும். நன்றாக வறுபட 2-3 நிமிடம் தொடர்ந்து கிளரவும். பிறகு நீர் மற்றும் ஒரு சிட்டிகை உப்பைச் சேர்க்கவும். மிதமான சூட்டில் குறைந்த கொதிநிலைக்கு கொண்டுவரவும்; பிறகு அடுப்பின் வெப்பத்தைக் குறைத்து, பாத்திரத்தை மூடியினைக் கொண்டு மூடவும். 18-22 நிமிடம் அல்லது நீர் வற்றி குயினோவா பஞ்சு போன்று வரும்வரை வேக விடவும். பிறகு மூடியினை திறந்து குயினோவாவை முட்கரண்டி கொண்டு பஞ்சு போல் ஆக்கவும். மூடியினை சாய்த்து, அடுப்பிலிருந்து எடுக்கவும். ஓரமாக வைக்கவும்

3.மிதமான சூட்டில் ஒரு பெரிய வாணலியில் ஆலிவ் எண்ணெயை சூடுபடுத்தவும். அதில் சர்க்கரைவள்ளி கிழங்கு, கேரட் மற்றும் மேப்பிள் சிரப், உப்பு, மிளகு தூளை சேர்க்கவும்; 4 நிமிடங்களுக்கு வதக்கவும். பின் ப்ரோக்கோலி பூக்களை சேர்க்கவும்; மேலும் 8 நிமிடங்களுக்கு வதக்கவும்; நறுக்கிய ரோஸ்மெரியை சேர்த்து, ஒன்றாக சேருமாறு கிளறவும். காய்கறிகள் நன்றாக ஆனால் அதே சமயம் மிகவும் மென்மையாக ஆகிவிடாத அளவுக்கு வெந்துவிட்டனவா என்று சரிபார்க்கவும், பின் எடுத்து வைக்கவும்.

4.பரிமாற, குயினோவா மற்றும் காய்கறிகளை பரிமாறும் கிண்ணங்களுக்கு இடையில் பிரிக்கவும், மேலும் தாஹினி சாஸை தாராளமாக அதன் மேல் சேர்க்கவும். அவற்றின் மேல் உங்கள் விருப்பத்திற்கேற்ப, மாதுளை விதை மற்றும் புதினா, கொத்தமல்லி, தைம் இலைகளைக் கொண்டு அலங்கரிக்கவும்.