ஈஷா சமையல்

சிவப்பு அரிசி சாதத்துடன் காய்கறி அவியல்

தேவையான பொருட்கள்

அவியலுக்கு:

2 முருங்கைக்காய்

1 வாழைக்காய்

1 கைப்பிடி பீன்ஸ்

2 கேரட்

1 சின்ன மாங்காய்

1 உருளைக்கிழங்கு

100 கிராம் சேனைக்கிழங்கு

1 கப் தேங்காய் துருவல்

1 ஸ்பூன் மிளகாய் தூள்

1 ஸ்பூன் மஞ்சள் தூள்

1 ஸ்பூன் சீரகம்

உப்பு தேவையான அளவு

1 மேஜைக்கரண்டி புளித்த தயிர்

சிறிதளவு கறிவேப்பிலை

1 மேஜைக்கரண்டி தேங்காய் எண்ணெய்

1 தேக்கரண்டி கடுகு

2 காய்ந்த சிவப்பு மிளகாய்

சாதத்திற்கு

1 கப் சிவப்பு அரிசி

1 மேஜைக்கரண்டி நெய்

1 தேக்கரண்டி உப்பு


செய்முறை

  1. சாதத்திற்கு:
  2. 1. கெட்டியான பாத்திரத்தில் 2½ கப் தண்ணீரை கொதிக்க விடவும்.
  1. 2. அரிசியை தண்ணீரில் கழுவிக்கொள்ளவும்.
  2. 3. தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன், அரிசி, நெய் மற்றும் உப்பினை சேர்க்கவும். அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, பாத்திரத்தை மூடி வைக்கவும், சாதம் வேகும் வரை தோராயமாக 30-40 நிமிடத்திற்கு வேக விடவும்.
  3. 4. இறக்கி வைத்து மூடியை திறந்து, சாதத்தை நன்றாக கிளறிய பிறகு திரும்பவும் மூடவும். ஒரு 5 நிமிடத்திற்கு அப்படியே விடவும். திரும்பவும் சாதத்தை நன்றாக கிளறிய பிறகு பரிமாறவும்.
  4. அவியலுக்கு:
  5. 1. தேங்காய் துருவல், சீரகம், சிறிதளவு மிளகாய் தூள் ஆகியவற்றை மிக்சியில் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக மைய அரைத்து வைத்துக்கொள்ளவும்.
  6. 2. காய்கறிகள் அனைத்தையும் அலசி நீளவாக்கில் நீண்ட துண்டுகள் போல வெட்டி கொள்ளவும். வெட்டிய வாழைக்காய் துண்டுகளின் நிறம் மாறிவிடாமல் இருக்க ஒரு பாத்திரத்தில் தண்ணீரில் போடவும்.
  7. 3. ஒரு வாணலியில், 1 கப் தண்ணீரை கொதிக்க விடவும். அதில் முருங்கைக்காய், உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து தேவையான அளவு உப்பு மஞ்சளை சேர்க்கவும். மிதமான சூட்டில் 12-15 நிமிடங்கள் வைத்து காய்கள் பாதி வேகும் வரை கொதிக்க விடவும்.
  8. 4. பிறகு மீதியுள்ள அனைத்து காய்கறிகளையும் அதில் சேர்த்து மூடிவிடவும்; மிதமான சூட்டில் காய்கறிகள் ஓரளவுக்கு வேகும் வரை, இடையிடையே கிளறிவிட்ட படி வேகவிடவும்.
  9. 5. தேங்காய் மசியலை சேர்க்கவும்.
  10. 6. மேலும் ஒரு 5-7 நிமிடத்திற்கு அல்லது காய்கறிகள் நன்றாக அதே சமயம் குழைந்துவிடாத வரை வேகவிடவும். இது உலர்ந்தது போல தெரிந்தால் சிறிது வெந்நீரை சேர்க்கலாம். அடுப்பை அணைத்து விடவும்.
  11. 7. புளித்த தயிரை மிருதுவாக வரும் வரை அடிக்கவும். அதை காய்கறிகளுடன் சேர்த்து மென்மையாக அதே சமயம் நன்றாக கிளறவும். மிதமான தீயில் ஒரு நிமிடம் வைக்கவும்.
  12. 8.  இதில் ஒரு மேஜைக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்த பிறகு அடுப்பை அணைத்து விடவும்.
  13. 9. தாளிதத்திற்கு, ஒரு சின்ன வாணலி அல்லது தாளிதக் கரண்டியில் 1 மேஜைக்கரண்டி தேங்காய் எண்ணெய்யை சூடு செய்யவும். அதில் கடுகு, கறிவேப்பிலை மற்றும் காய்ந்த மிளகாயை சேர்த்து தாளித்துக்கவும்.
  14. 10. இந்த தாளிதத்தை அவியலில் ஊற்றி நன்றாக கலந்துவிட்ட பிறகு பரிமாறவும்.