நடப்புகள்

சத்குருவைத் தொடருங்கள்

கடந்த சில வாரங்களின் சத்குரு நிகழ்வுகள் பற்றிய ஒரு தொகுப்பு!

Saudis and Expats Converge to Hear Sadhguru Speak about Save Soil (12 May)

Sadhguru received a very warm welcome in Riyadh. He addressed an enthusiastic and highly engaged public gathering organized by the Embassy of India, Riyadh, answering questions of all kinds, and of course – talking about Soil.

சத்குருவை வரவேற்று, மண் காப்போம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் அசாம் முதலமைச்சர்

24 செப்டம்பர்

அசாமில் உள்ள காசிரங்கா போர்கோஸ் ரிசார்ட்டில் மண் காப்போம் இயக்கம் பற்றி சத்குரு ஆழமிக்க ஓர் உரையை நிகழ்த்தினார். இந்நிகழ்வில் மாண்புமிகு அசாம் முதலமைச்சர் டாக்டர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, இயக்கத்திற்கு ஆதரவாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். உலகத்தின் நல்வாழ்வுக்கான மூலமாக இந்தியா உருவாவதற்கான மகத்தான சாத்தியம் இருப்பதைப் பற்றி சத்குரு பேசினார். அசாம் மாநிலத்தின் பொருளாதார நிலைமைகளை மேம்படுத்தக்கூடிய, சுற்றுச்சூழலுக்கு இணக்கமான ஒரு நீடித்த நிலையான சுற்றுலா கட்டமைப்புக்கான சாத்தியம் குறித்து அவர் கலந்துரையாடினார். மேலும் அவர், கலாச்சாரத்தில் கவனம் செலுத்துதல் மூலம் உள்நிலை வளர்ச்சியை அடைவது, ஆராய்ந்து அறிதல் மற்றும் தனிமனித மேம்பாடு ஆகியவற்றைப் பற்றி உரையாடினார்.

Saudis and Expats Converge to Hear Sadhguru Speak about Save Soil (12 May)

Sadhguru received a very warm welcome in Riyadh. He addressed an enthusiastic and highly engaged public gathering organized by the Embassy of India, Riyadh, answering questions of all kinds, and of course – talking about Soil.

பெங்களூரு ஈஷா யோக மையத்தில் கர்நாடக முதல்வர் நாகாவை திறந்து வைத்தார்

8 அக்டோபர்

பெங்களூரு நாகப் பிரதிஷ்டைக்கு ஒரு நாள் முன்னதாக, மாண்புமிகு கர்நாடக முதல்வர் திரு.பசவராஜ் பொம்மை அவர்கள், நாகாவை பொதுமக்களுக்குத் திறந்து வைத்தார். கர்நாடகாவின் மருத்துவக் கல்வி மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் திரு.கே.சுதாகரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிகழ்வின் போது நாகாவின் முக்கியத்துவத்தைப் பற்றி சத்குரு விளக்கினார். உணர்தல் மற்றும் அறிதலின் அறிகுறியாக நாகம் இருப்பதாக எடுத்துரைத்தார். பிழைப்பை சிரமமின்றி கையாளவும், பிழைப்பைத் தாண்டிய அம்சங்களை உணர்ந்திடவும் ஒரு சாத்தியமாக நாகா இருப்பதை அவர் விளக்கினார்.

பருவநிலை மாற்றத்திற்கான உலகளாவிய தலைவர்கள் குழுவில் சத்குரு

பருவநிலை மாற்றத்திற்கான தீர்வுகளை நோக்கிச் செயல்படும் 30 சிறந்த உலகளாவிய தலைவர்கள் இடம்பெற்றுள்ள Business Insider எனும் குழுவில், சத்குருவும் இடம்பெற்றுள்ளார். "விவசாயத்திற்கான மண்ணின் கரிம வளத்தை குறைந்தபட்சம் 3% முதல் 6% வரை அதிகரிக்க, ஒரு வலுவான செயல்திறமிக்க கொள்கை அவசியம் தேவை." மண் காப்போம் இயக்கத்தை முன்னிலைப்படுத்தி, சத்குருவின் இந்த வார்த்தைகளை அவர்கள் மேற்கோள் காட்டியுள்ளனர்.

Saudis and Expats Converge to Hear Sadhguru Speak about Save Soil (12 May)

Sadhguru received a very warm welcome in Riyadh. He addressed an enthusiastic and highly engaged public gathering organized by the Embassy of India, Riyadh, answering questions of all kinds, and of course – talking about Soil.

ஈஷாவிற்கு வருகை தந்த மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர்

14 அக்டோபர்

மாண்புமிகு மத்திய வேளாண் & விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு.நரேந்திர சிங் தோமர் அவர்கள் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தின் (FPO) தலைவர்கள், இயக்குநர்கள் மற்றும் தன்னார்வலர்களை சந்தித்தார். அவர்கள் அமைச்சருக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர். FPOக்களை ஆதரிக்கும் விதமாக அரசாங்கம் மேற்கொண்டுள்ள பல்வேறு நடவடிக்கைகளுக்கு விவசாயிகள் தங்கள் நன்றிகளைத் தெரிவித்தனர். மேலும், மகத்தான மாற்றம் ஏற்படுத்தக்கூடிய இந்த முன்னெடுப்பிற்கு தொடர்ந்து ஆதரவளிக்குமாறு அமைச்சரிடம் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

திரு.நரேந்திர சிங் தோமர் அவர்கள் லிங்கபைரவி, தியானலிங்கம் மற்றும் ஆதியோகியையும் தரிசனம் செய்தார்.