Saudis and Expats Converge to Hear Sadhguru Speak about Save Soil (12 May)
Sadhguru received a very warm welcome in Riyadh. He addressed an enthusiastic and highly engaged public gathering organized by the Embassy of India, Riyadh, answering questions of all kinds, and of course – talking about Soil.
நாள் 1: சாரநாத் - புத்தர் தனது முதல் போதனையை வழங்கிய இடம்
பௌத்த மதத்தின் நான்கு முக்கியமான புனித யாத்திரை ஸ்தலங்களில் ஒன்றான சாரநாத்திலிருந்து காசி யாத்திரை தொடங்கியது. சாரநாத்தில் உள்ள தாமேக் ஸ்தூபி கௌதம புத்தர் தனது முதல் ஐந்து சீடர்களுக்கு முதல் பிரசங்கத்தை வழங்கிய இடம் என்று கூறப்படுகிறது. புத்தர் மற்றும் பிற புத்த மத யோகிகளின் நேர்த்தியான சிற்பங்கள் நிறைந்த சாரநாத் அருங்காட்சியகத்தை குழுவினர் பார்வையிட்டனர். பங்கேற்பாளர்கள் பௌத்த கலாச்சாரத்தில் மூழ்கித் திளைக்கும் வாய்ப்பை சாரநாத் வழங்கியது மட்டுமல்லாமல், அமைதியும் தியானத் தன்மையும் நிறைந்ததாக அது இருந்தது.
Saudis and Expats Converge to Hear Sadhguru Speak about Save Soil (12 May)
Sadhguru received a very warm welcome in Riyadh. He addressed an enthusiastic and highly engaged public gathering organized by the Embassy of India, Riyadh, answering questions of all kinds, and of course – talking about Soil.
நாள் 2: காசி விஸ்வநாதர் தொடங்கி மார்க்கண்டேய மகாதேவர் வரை
சாரநாத்தின் தனித்துவமான சூழல், அடுத்து வரவிருக்கும் அரிய நிகழ்வுக்காக பக்தர்களைத் தயார்படுத்தியது: ஆதியோகி சிவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகக் கூறப்படும் பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான காசி விஸ்வநாதர் கோவிலில், மங்கள ஆரத்தியை அனுபவித்து உணரும் அரிய வாய்ப்பு. மங்கள ஆரத்தி என்பது, புனிதமிக்க பிரம்ம முகூர்த்தத்தின் போது, தினமும் அதிகாலை 3 மணி முதல் 4 மணி வரை கோவிலில் அர்ப்பணிக்கப்படும் முதல் ஆரத்தி.
Saudis and Expats Converge to Hear Sadhguru Speak about Save Soil (12 May)
Sadhguru received a very warm welcome in Riyadh. He addressed an enthusiastic and highly engaged public gathering organized by the Embassy of India, Riyadh, answering questions of all kinds, and of course – talking about Soil.
ஆரத்தியுடன் தொடங்கிய அன்றைய நாளில், வாரணாசியில் உள்ள இரண்டு புகழ்பெற்ற தேவி கோவில்களுக்கு குழுவினர் நடைபயணம் மேற்கொண்டனர். மீர் படித்துறையில் அமைந்துள்ள சக்தி ஸ்தலங்களான விசாலாக்ஷி கோவில் மற்றும் உண்ணும் உணவிற்கான தெய்வமான அன்னபூரணி கோவில் ஆகிய இரண்டு தேவி கோவில்களை நோக்கி அவர்கள் சென்றனர்.

பக்தர்கள் பின்னர், சிவனின் பயங்கரமும் கோரமுமிக்க வடிவமான காலபைரவரின் வரலாற்று சிறப்புமிக்க கோவிலுக்கு சென்றனர். அங்கு அவர்கள் காலபைரவ ஆரத்தியின் அற்புத சக்தியையும் அருளையும் அனுபவித்து உணர்ந்தனர். அதைத் தொடர்ந்து, மரணத்தை வென்றவராக சிவனை வழிபடக்கூடிய மஹாமிருத்யுஞ்சய மகாதேவ் கோவிலில் லிங்க தரிசனம் செய்தனர்.

சுற்றுலாப் பயணிகளாக இருந்தாலும் சரி, யாத்ரீகராக இருந்தாலும் சரி, புனித கங்கையில் படகு சவாரி செய்வதென்பது அனைவருக்குமே பிடித்தமான ஒன்று. படகுகளில் ஏறி கங்கையும் கோமதி நதியும் சங்கமிக்கும் பகுதிக்குச் சென்ற பக்தர்கள், பெரும் மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைந்தனர். படகு சவாரிக்குப் பிறகு, மார்கண்டேய மகாதேவ் கோவிலில் தியானம் செய்யும் பாக்கியம் குழுவினருக்கு கிடைத்தது. ஒருவர் இந்த லிங்கத்தைச் சுற்றி இருந்தால், மரணம் அவர்களைத் தொடாது என்று புராணங்கள் கூறுகின்றன.
Saudis and Expats Converge to Hear Sadhguru Speak about Save Soil (12 May)
Sadhguru received a very warm welcome in Riyadh. He addressed an enthusiastic and highly engaged public gathering organized by the Embassy of India, Riyadh, answering questions of all kinds, and of course – talking about Soil.
நாள் 3: சத்குருவுடன் சத்சங்கம் மற்றும் மணிகர்ணிகா படித்துறை
சத்குரு ஞானோதயம் அடைந்த நாளில், மிகவும் சிறப்புமிக்க அந்த தருணத்தில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட சத்குருவுடன் சத்சங்கம் இறுதியாக நிகழ்ந்தது. செப்டம்பர் 23 அன்று காலை, சத்குரு காசி விஸ்வநாதர் கோவிலில் அபிஷேகம் அர்ப்பணம் செய்தார். அதன் பிறகு, காசியில் புதிதாக கட்டப்பட்டுள்ள, காசி விஸ்வநாதர் கோவிலை மூன்று முக்கிய படித்துறைகளுடன் இணைக்கக்கூடிய, விசாலமான காசி நடைபாதையில் பக்தர்கள் சத்குருவின் முதல் தரிசனம் பெற்றனர்.
Saudis and Expats Converge to Hear Sadhguru Speak about Save Soil (12 May)
Sadhguru received a very warm welcome in Riyadh. He addressed an enthusiastic and highly engaged public gathering organized by the Embassy of India, Riyadh, answering questions of all kinds, and of course – talking about Soil.
ஞானோதயமடைந்த நாளின் சத்சங்கம் பிற்பகல் வேளையில் தொடங்கவிருந்தது. சத்குரு மண்டபத்திற்குள் நுழைவதற்கு முன், காசி விஸ்வநாதரின் உபாசகர்கள் உயிரோட்டமிக்க ஓர் ஆரத்தியுடன் சத்குருவை வரவேற்றனர். அவர்கள் கடந்த சில ஆண்டுகளாக, அகஸ்திய ஜெயந்தி அன்று சப்தரிஷி ஆரத்தியை நிகழ்த்துவதற்காக கோவை ஈஷா யோக மையத்திற்கு வருகை தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த சத்சங்கத்தில், பெண்மையின் உண்மையான அர்த்தம், அன்பிற்குரிய தாயின் மரணத்தை எவ்வாறு எதிர்கொள்வது மற்றும் காசியின் வளர்ச்சிக்கு தனிநபர்கள் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பன போன்ற பல்வேறு தலைப்புகளில் சத்குரு உரையாற்றினார்.

மணிகர்ணிகா படித்துறையில் நேரம் செலவிடாமல் காசி யாத்திரை எப்படி முழுமையடையும்?! நமது இருப்பின் அடிப்படை உண்மையான மரணத்தை நித்தமும் நினைவூட்டும் ஒரு புனிதமிக்க தகன மையமாக மணிகர்ணிகா படித்துறை விளங்குகிறது. எனவே, சத்சங்கத்திற்குப் பிறகு, பக்தர்கள் மணிகர்ணிகா படித்துறை நோக்கிச் சென்றனர். அங்கு சத்குருவின் முன்னிலையில் இன்னும் சிறிது நேரம் இருக்க வாய்ப்பு கிடைத்தது. தகனம் செய்யும் அவ்விடத்தின் தீவிரமான சூழ்நிலையில், மனிதர்களாகிய நாம் இங்கு சிறிது காலம் மட்டுமே வாழ்கிறோம் என்ற உண்மையை பங்கேற்பாளர்கள் உள்ளுணர்வில் உணர்ந்தனர்.

நாள் 4: மஹாதேவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இன்னும் சில கோவில்கள்
கோவில்களும் புனிதத் தலங்களும் நிறைந்த இந்த அழகான நகரத்தில், இறுதி நாளிலும் கோவில் தரிசனம் இல்லாமல் இல்லை. காலையில், மல்லிகார்ஜுனா மஹாதேவ் கோவில் மற்றும் பைத்யநாத் மஹாதேவ் கோவிலுக்கு பக்தர்கள் குவிந்தனர். சக்திநிலையில் இவை இரண்டும் முறையே ஆந்திராவிலுள்ள மல்லிகார்ஜுன ஜோதிர்லிங்கம் மற்றும் ஜார்கண்டிலுள்ள பைத்யநாத் ஜோதிர்லிங்கத்தின் பிரதிகள் என்று கூறப்படுகிறது.
குருபூஜையுடன் காசி யாத்திரை நிறைவடைந்தது.