
கைகள்மடித்து, தலையைப் பணிவுடன் குனிந்து
மனம் மந்திரம் ஓத, உயிர் மட்டும் ஆழ்ந்த அசைவின்மையில்
குருவே, உன் அருள் நோக்கி,
இடையறாது ஈர்க்கப்படுகிறது
உன்னுடன் இயைந்திருக்கிறது,
உன் உச்சபட்ச தெய்வீக விருப்பம்!
கடந்தகாலத்தின் வடுக்கள் வருங்காலத்தை மிரட்ட
தவிர்க்கமுடியாத இந்தக்கணங்களை கொன்றுவிட
நீரே ஒளியானீர், தேனாகி ஊட்டமானீர்
கடல்போன்ற அன்புடன் எங்களுக்குள் மலர்ந்தீர்!
ஓ குருவே, சிகரத்தில், பேரானந்தமாய்
உள்ளத்துள் ஆசிபெற்றவராய்
இருந்தும், எங்கள் குழப்பத்தின் பள்ளத்தாக்கினுள் நடந்தீர்
பகிர்ந்தீர், அக்கறைகாட்டி புன்னகையுடன் வென்றீர்
எம் மனங்களை, இதயத்தை, உயிர்களை, ஆம்,
எதையும் விடவில்லை!
ஓ சத்குரு, ஆனந்தக் கண்ணீர் இடைவிடாது ஓடுகிறது
உம் வார்த்தைகள் ஞானம்தர,
மௌனம் பிரகாசமாய் ஜொலிக்க
சாதனா உள் நெருப்பிற்கு சக்தியூட்ட,
பக்தி எமைக் கரைத்து இல்லாமலாக்க
உன் அருளில் யுகங்கள் வாழ ஆசிபெற்றோரானோம்!
—டாக்டர் சுஜீத் குமார், முல்லபல்லி, மருத்துவ புற்றுநோயியல் நிபுணர், சென்னை