சத்குரு எக்ஸ்குளூசிவ்

ஆகச்சிறந்த ஒலி என்று ஒன்று இருக்கிறதா?

பாடப்புத்தக அறிவியல் கடந்து, வாழ்வின் ஆழமான புரிந்துணர்வில் இருந்து எழும் மகத்தான யோக அறிவியல் ஒன்று உள்ளது. யோகக் கண்ணோட்டத்தில் இருந்து வாழ்வின் ஒரு அடிப்படையான அம்சமாகிய ஒலியைப் பற்றி, இங்கே சத்குரு விவரிக்கிறார்.

சத்குரு: வெற்றுவெளி வழியாகப் பயணிக்கும் ஒரு குறிப்பிட்ட ஒலி உள்ளது என்றும், அந்த ஒலியை நீங்கள் கேட்டால் தவிர, உங்கள் வாழ்க்கை நிறைவடைவதில்லை என்றும், சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு யோகி அறிவித்தார். சில வருடங்களுக்கு முன்பு, விஞ்ஞானிகள் இதை எடுத்துக்கொண்டு சிரித்தவர்களாக, “இந்த யோகிக்கு சிறிது அடிப்படையான உயர்நிலைப்பள்ளி அறிவியல் பாடங்கள் தேவைப்படுகிறது, ஏனெனில் ஒலியால் வெற்றுவெளி வழியாகப் பயணிக்கமுடியாது. ஒலி பயணிப்பதற்கு ஒரு ஊடகம் தேவை”, என்று கூறினர்.

அது குறித்த அவர்களது கருத்தை இப்போது பௌதீகவியலாளர்கள் முற்றிலுமாக மாற்றிக்கொண்டுள்ளனர். வெற்றுவெளி வழியாக ஒலி பயணிப்பதைப் பற்றி இந்த யோகி பேசியபொழுது, அறியாமையிலிருந்து அவர் இதைக் கூறவில்லை. யோக அறிவியலில், நாம் நான்கு விதமான ஒலிகளைப் பற்றி பேசுகிறோம்.

ஒலியின் நான்கு பரிமாணங்கள்

முதல் விதமான ஒலி, வைகரி என்று அழைக்கப்படுகிறது. நான் பேசுவதும், நீங்கள் கேட்பதும் இந்த ஒலிதான் – அதாவது பௌதீகரீதியான ஒலி. இரண்டாவது விதமான ஒலி, மத்யமா என்றழைக்கப்படுகிறது. இது “இடைப்பட்ட ஒன்று” என்று பொருள்படுகிறது. நான் உங்களிடம், “சாக்லேட்” என்று கூறினாலோ அல்லது சாக்லேட் போல் தோன்றும் எதையாவது காண்பித்தாலோ, உங்கள் மனம், “ஓ, சாக்லேட்” என்று நினைக்கிறது. அது வெறுமனே, ஒரு எண்ணமல்ல – அது உங்கள் மனதின் ஒரு பரிமாணத்திலிருந்து வருகின்ற ஒரு ஒலி. அது அனுபவப்பூர்வமில்லாத வெறும் கருத்தல்ல – அது ஒரு எண்ணத்தின் அதிர்வாக, நீங்கள் கேட்கும் குரல்.

ஒலியின் நான்காவது பரிமாணம், பர வாக்கு என்று குறிப்பிடப்படுகிறது. வாக்கு என்பது குரல், பர என்பது தெய்வீகம் அல்லது படைப்பின் மூலம். அது படைத்தவனின் குரலைக் கேட்பதைப் போன்றது.

ஒலியின் மூன்றாவது பரிமாணம் பஸ்யந்தி என்று குறிப்பிடப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட ஒலியை சிந்தனை செய்யக்கூடிய உங்கள் மனதின் திறன், பஸ்யந்தி எனப்படுகிறது. நான் எதையும் உங்களுக்கு காண்பிக்கவில்லை; நான் “சாக்லேட்” என்று கூறவில்லை; வெளியிலிருந்து எந்த உள்ளீடும் இல்லாமல், உங்கள் மனதின் ஆழமான ஏதோ ஒரு இடத்திலிருந்து, “சாக்லேட்” மேலெழுகிறது. இது நான் கூறியதிலிருந்து மீண்டும் எழுந்ததோ அல்லது ஒரு பிரதிபலிப்போ அல்ல. அதை உள்ளிருந்து உங்கள் மனதால் உருவாக்க முடிகிறது.

ஒலியின் நான்காவது பரிமாணம், பர வாக்கு என்று குறிப்பிடப்படுகிறது. வாக்கு என்பது குரல், பர என்பது தெய்வீகம் அல்லது படைப்பின் மூலம். அது படைத்தவனின் குரலைக் கேட்பதைப் போன்றது. இது ஏதோ மனச்சிதறல் உடைவர்கள், கடவுள் பேசுவது காதில் கேட்கிறது என்று அவர்கள் வசதிக்கேற்ப கற்பனை செய்துகொள்பவர்களைப் பற்றி நான் பேசிக்கொண்டிருக்கவில்லை. படைப்பு மற்றும் படைத்தவனின் அடிநாதமாக இருக்கும் அதிர்வைப்பற்றி நான் பேசிக்கொண்டிருக்கிறேன்.

சொல் என்பது என்ன?

தெய்வீகத்தின் பெயரில், ஆன்மீக செயல்முறையின் பெயரில், குரல்களை கேட்பதின் பெயரில் மிக அதிக அளவுக்கு முட்டாள்தனங்கள் நடத்தப்பட்டுள்ளன. ஆனால் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விஷயம் என்னவென்றால், “ஆதியில் ஒரு சொல் இருந்தது, அந்த சொல் கடவுளுடன் இருந்தது, மற்றும் அந்த சொல், கடவுளாக இருந்தது.” ஒரு சொல் என்பது, ஒலியின் மனித மொழியாக்கம்.

நான் பேசும்பொழுது, நான் சொற்களை வெளியில் வீசுகிறேனா அல்லது ஒலிகளை உருவாக்குகிறேனா? நான் ஒலிகளை மட்டும்தான் உருவாக்குகிறேன் – அந்த ஒலிகளை நீங்கள் சொற்களாக மொழியாக்கம் செய்கிறீர்கள். பிரபஞ்சத்தில் எங்குமே சொல் இல்லை; ஒலிகள் மட்டும்தான் உள்ளன. வெவ்வேறு விஷயங்களை அடையாளப்படுத்துவதற்கு, வெவ்வேறு ஒலிகளைப் பயன்படுத்த நாம் விரும்புவதால், நாம் அவற்றை சொற்கள் என்று அழைக்கிறோம். இல்லையென்றால், அவை ஒலிகள் மட்டுமே. ஆகவே, “சொல்” என்று அவர்கள் கூறியபொழுது, நீங்கள் கற்பனை செய்துள்ள கடவுளின் வடிவங்கள் அனைத்தையும்விட அதிகப்படியான ஒலியை அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். ஒருவர் அந்த ஒலியைக் கேட்டிருந்தால், அவருடைய வாழ்க்கை முற்றிலும் நிறைவடைந்துவிடுகிறது என்று யோகி கூறியபொழுது, அந்த ஒலியைத்தான் அவர் குறிப்பிட்டார்.

விழிப்புணர்வின் ஒலி

ஒலியற்றதின் மையமாக, முழுமையான அசைவற்ற விழிப்புணர்வாக இருந்த அந்த ஒலி, பர வாக்கு என்று அறியப்படுகிறது. வாழ்வில் பல்வேறு பரிமாணங்களையும், படைப்பு, பிரபஞ்சம், ஆழ்ந்த உணர்திறன், உணர்தல் மற்றும் வெளிப்படுதலின் வெவ்வேறு பரிமாணங்கள் குறித்து நாம் உங்களுக்கு கற்பித்துக்கொண்டே இருந்தால், அது ஒரு முடிவில்லாத கதையாக இருக்கும், ஏனெனில் இது ஒரு முடிவில்லாத பிரபஞ்சம். ஆனால், தொடக்கமற்ற அல்லது அனாதியான இந்த ஒரு ஒலியை நீங்கள் கேட்டால், பிறகு அனைத்தும் இங்கே இருக்கிறது.

அனாதியானது கேட்கப்படும்பொழுது, அதன்பிறகு முடிவற்ற பரப்புக்குள் மேற்கொண்டு நீட்டித்தலும், மேற்கொண்டு கதையும் இருப்பதில்லை. ஒரே ஒலியில் அனைத்தும் இங்கேயே இருக்கிறது.