கவிதை

தியானலிங்கமே

அந்திவேளையைப் போன்ற

கூரைக்கு நடுவில்

ஒரு இருண்ட வடிவம், கருங்கல்லில் ஜொலிக்கிறது.

அமைதியாக, அசைவின்றி, சிரிப்பின்றி இருப்பதால் – “வசீகரமற்றதோ”?

கடினமான கல்தரை

உட்காரமுடியவில்லை, அசௌகரியமாக உள்ளது

நான் தூங்க விரும்புகிறேன், தியானம் செய்ய அல்ல!

15 நிமிடங்கள் மிக நீண்டது,

என் கவனம் சிதறுகிறது – அவன் அங்கே குறட்டையிட,

இவள் இங்கே, தலை அசைக்க, குழந்தையின் அழுகுரல் காதைக் கிழிக்க

தானாக தியானமா? எனக்கு அது நிச்சயம் நடக்கவில்லை!

அந்திவேளையைப் போன்ற

கூரைக்கு நடுவில்

அவன் உதித்திருந்தான்!

அமைதியாக, அதிர்வுமிக்கதாக

உள்ளத்தைக் கொள்ளைகொள்வதாக

விட்டுக்கொடுக்காத அவன் அன்பில் நனைந்து

அசைவின்றி அவன் என்னை ஆழ்ந்த தியானத்தில் ஆட்கொள்ளும்போது

ஒரு மெல்லிய மூச்சு இந்த உடலிற்குள்ளே சென்று வெளியேறுகிறது,

இமயமலைத் தென்றலைப் போல நாசிகளை குளிரச்செய்கிறது.

இந்த இறவா அரவணைப்பில் என்னை ஏன் ஏந்தியிருக்கிறாய்?

என்னை ஏன் அழைக்கிறாய்?

எனக்கு இப்படி ஆசை காட்டாதே, என் தேவனே!

நான் உருக்குலைந்துவிட்டால்...

இந்த பிரிவாற்றாமை இன்னும் சற்று காலம் தொடரட்டுமே

காலத்தின் பரப்பில் இருந்து நான் உனை பார்த்திருக்கிறேன்

உன் எல்லையற்ற அன்பில் வெட்கித் திளைத்திருக்கிறேன்.

-சாகரிகா சட்டோபாத்யாய்,

ஈஷா தியான அன்பர்,

இந்தோர்