நடப்புகள்

சத்குருவைத் தொடருங்கள்

கடந்த சில வார நிகழ்வுகள் பற்றிய ஒரு குறுந்தொகுப்பு!

Saudis and Expats Converge to Hear Sadhguru Speak about Save Soil (12 May)

Sadhguru received a very warm welcome in Riyadh. He addressed an enthusiastic and highly engaged public gathering organized by the Embassy of India, Riyadh, answering questions of all kinds, and of course – talking about Soil.

மணீஷ் மல்ஹோத்ரா மற்றும் சத்குரு ஆடை வடிவமைப்பு பற்றி...

19 ஆகஸ்ட்

இந்திய ஆடை வடிவமைப்பாளரும் ஒப்பனையாளருமான மணீஷ் மல்ஹோத்ரா, புதுடெல்லியில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில் சத்குருவுடன் உரையாடினார். இயற்கை நூலிழைகள், இந்தியாவின் சிறப்புமிக்க நெசவுகள், காதல் மற்றும் திருமணம் போன்ற தலைப்புகளை உள்ளடக்கிய ஒரு சுவாரஸ்ய கலந்துரையாடலில் இருவரும் ஈடுபட்டனர். மணீஷ் சத்குருவிடம் கவர்ச்சி என்ற அம்சம் பற்றிக் கேட்டார், சத்குரு தனக்கே உரிய தனித்துவமான நுட்பமிக்க கண்ணோட்டத்தை வழங்கினார். ஒருவர் கவனத்துடன் இருந்தால், முழு பிரபஞ்சமும் கவர்ச்சியாகத்தான் இருக்கும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

அபேராஜ் பல்டோடா அறக்கட்டளையுடன் இணைந்து, டெல்லியில் கலாச்சார அமைச்சகம் மற்றும் தேசிய அருங்காட்சியகம் ஏற்பாடு செய்திருந்த  சூத்ரசந்ததி (நூலின் தொடர்ச்சி) என்ற கண்காட்சியை, சத்குருவும் மணீஷ் மல்ஹோத்ரா அவர்களும் பார்வையிட்டனர். இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில், இந்த கண்காட்சி நாட்டின் பல்வேறு நெசவு பாரம்பரியத்தை காட்சிப்படுத்துவதாக அமைந்தது.

Saudis and Expats Converge to Hear Sadhguru Speak about Save Soil (12 May)

Sadhguru received a very warm welcome in Riyadh. He addressed an enthusiastic and highly engaged public gathering organized by the Embassy of India, Riyadh, answering questions of all kinds, and of course – talking about Soil.

மண் காப்போம் இயக்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட கோவா

23 ஆகஸ்ட்

கோவாவின் முதலமைச்சர் ஸ்ரீ பிரமோத் சாவந்த், சத்குருவுடன் ஒரு மண் காப்போம் பொது நிகழ்ச்சியில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டார். நேர்மறையான சமூக மற்றும் சூழலியல் மாற்றத்திற்காக மக்கள் தங்கள் குரல்களைப் பதிவுசெய்ய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துமாறு அவர் ஊக்குவித்தார். இந்த பூமியில் நாம் தற்போது எதிர்கொள்ளும் சூழலியல் பிரச்சனைகளுக்கு அடிப்படைக் காரணம், விழிப்புணர்வின்றி கட்டாயத்தின் பேரில் செயல்படுவதுதான் என்று சத்குரு சுட்டிக்காட்டினார்.

தொழிலாளர் நல அமைச்சர்களின் தேசிய மாநாட்டில் சத்குருவின் உரை

25 ஆகஸ்ட்

ஆந்திரப் பிரதேசத்தில் இந்திய அரசு நடத்திய அனைத்து மாநிலங்கள் & யூனியன் பிரதேசங்களின் தொழிலாளர் நல அமைச்சர்களுக்கான இந்த முக்கிய மாநாட்டில், ஆன்லைனில் உரையாற்றுவதற்கு சத்குரு அழைக்கப்பட்டார். அவரது வழக்கமான தெளிவுடனும் துல்லியத்துடனும், இந்தியாவின் சமீபத்திய வளர்ச்சி மற்றும் எதிர்கால சாத்தியக்கூறுகள் பற்றி கலந்துரையாடினார். சூழலியல் என்பது, ஒரு ஆரோக்கியமான மற்றும் பலன் தரக்கூடிய பொருளாதாரத்திற்கான அடித்தளம் என்றும், பரவலான நல்வாழ்வை உறுதி செய்வதற்கு இதற்கான முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பருவநிலைக்கான தீர்வுகள் குறித்து சத்குருவிடம்
Business Insider-ன் நேர்காணல்

26 ஆகஸ்ட்

Business Insider என்ற ஆன்லைன் செய்தி ஊடகம் சத்குருவை அவர்களின் பருவநிலை நடவடிக்கைகளுக்கான 30 பேரின் பட்டியலில் சேர்த்துள்ளது. இது பருவநிலைக்கான தீர்வுகளை நோக்கிச் செயல்படும் உலகளாவிய தலைவர்களின் ஒரு பட்டியலாகும். சத்குருவை பேட்டி கண்டபோது, உலக மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் எப்படி விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பதைப் பற்றி சத்குரு பேசினார். மேலும், விவசாயத்தை மேம்படுத்தாமல் மனித நல்வாழ்வுக்கு தீர்வு காண முடியாது என்பதையும் மண்ணின் தரத்தை உயர்த்தாமல் அது சாத்தியமற்றது என்பதையும் அவர் விளக்கினார்.

சத்குருவிடம் இருந்து தலைமைப் பண்புக்கான குறிப்புகளைப் பெற்ற டொராண்டோவின் HBS கிளப்

26 ஆகஸ்ட்

சத்குரு மற்றும் "பூமிக்காக 1%" என்ற இயக்கத்தின் முதன்மை செயலாளர் திரு. கேட் வில்லியம்ஸ் ஆகியோருடன் விழிப்புணர்வுமிக்க தலைமை மற்றும் சூழலியல் பாதுகாப்பு குறித்த ஆன்லைன் உரையாடலை டொராண்டோவின் ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூல் (HBS) கிளப் நடத்தியது. தலைமைத்துவம் பற்றிய ஒரு சுவாரஸ்யமிக்க கலந்துரையாடல் நடந்தது. தனிப்பட்ட லட்சியத்தையும், அனைத்தையும் உள்ளடக்கிய குறிக்கோளையும் வேறுபடுத்தி, தனிப்பட்ட ஆசைகளைக் காட்டிலும் சமூக தாக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் ஈடுபடும்போது, மக்கள் அதிக ஈடுபாடும் உறுதியும் கொண்டவர்களாக மாறுகிறார்கள் என்பதை சத்குரு விளக்கினார்.

நேபாளத்தில் ஒரு சுவாரஸ்ய உரையாடல்

27 ஆகஸ்ட்

பிரபல நேபாள நடிகர் ராஜேஷ் ஹமால், சத்குருவின் சமீபத்திய நேபாள பயணத்தின் போது அவருடன் உரையாடினார். அவர்களின் சுவாரஸ்யமிக்க அந்த உரையாடலில், மனித விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கான இடங்களை உருவாக்குவது குறித்தும், நேபாளத்தின் பகுதிகள் மனித வளர்ச்சிக்கும் நல்வாழ்வுக்கும் துணைநிற்கும் விதமாக எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளன என்பது குறித்தும் கலந்துரையாடினர். ஒருவரின் வாழ்க்கைத் தரம், அவரது செயல்களால் அல்லாமல், விஷயங்களை எப்படி அனுபவப்பூர்வமாக உணர்கிறார் என்பதைப் பொறுத்து எப்படி நிர்ணயிக்கப்படுகிறது என்பதை சத்குரு விளக்கினார்.

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தில் உரை

27 ஆகஸ்ட்

மண் காப்போம் இயக்கம் மற்றும் சூழலியல் மேம்பாடு குறித்து இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்துடன் சத்குரு ஒரு ஆன்லைன் உரையாடலில் ஈடுபட்டார். அவரது பரந்த நுண்ணறிவு மற்றும் கருணை மிகுந்த தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றால் ஒரு ஆற்றல் மிக்க உரை அங்கே வெளிப்பட்டது. ஒவ்வொரு நாட்டின் பாரம்பரிய விவசாய முறைகளைக் கொண்டு அந்தந்த நாடுகளின் மண் வளத்தை மேம்படுத்துவது பற்றி சத்குரு பேசினார். இந்தியா கொண்டுள்ள வேளாண் அறிவினால், உலக நாடுகளுக்கெல்லாம் உணவு வழங்கும் ஒரு நாடாக மாறமுடியும் என்று அவர் தனது பார்வைப் பகிர்ந்து கொண்டார்.

நேபாளத்தில் மண் காப்போம் பற்றிய உரை

2 செப்டம்பர்

காத்மாண்டுவில் மண் காப்போம் இயக்கம் பற்றி உரையாற்ற சத்குரு வருகை தந்தபோது, நேபாள மக்கள் அவரை அன்புடன் வரவேற்றனர். ராதே மற்றும் புராஜெக்ட் சம்ஸ்கிருதி மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, சத்குரு உற்சாகமிகுந்த மக்கள் கூட்டத்தில் உரையாற்றினார். அனைத்தையும் அரவணைக்கும் விதமாக சிந்திக்கும் மனிதர்களாகிய நமது திறனைப் பற்றியும், நமது கலாச்சாரங்களை நாம் எவ்வாறு பகிர்ந்து கொள்ளலாம் என்பது பற்றியும் அவர் பேசினார். சத்குரு, பங்கேற்பாளர்களை ஒவ்வொரு நாளும் பத்து நிமிடம் மண்ணைப் பற்றி எடுத்துச்சொல்லுமாறு கேட்டுக்கொண்டார்.

Saudis and Expats Converge to Hear Sadhguru Speak about Save Soil (12 May)

Sadhguru received a very warm welcome in Riyadh. He addressed an enthusiastic and highly engaged public gathering organized by the Embassy of India, Riyadh, answering questions of all kinds, and of course – talking about Soil.

சத்குருவின் பிறந்தநாள்!

3 செப்டம்பர்

கோவை ஈஷா யோக மையம், சத்குருவின் பிறந்தநாளன்று உற்சாகத்தாலும் கொண்டாட்டத்தாலும் நிறைந்தது. தன்னார்வலர்கள் மையத்தை அழகிய மலர் அலங்காரங்களாலும் கோலங்களாலும் அலங்கரித்து, சத்குருவிற்கும், தொடர்ந்து உலகிற்கு அவர் வழங்கிவரும் அர்ப்பணிப்பிற்கும் மரியாதை செய்தனர். காத்மாண்டுவில், உள்ளூர் தன்னார்வத் தொண்டர்கள் சத்குருவுக்கு தங்கள் அன்பையும் நன்றியையும் தெரிவிக்கும் விதமாக அந்நாளைக் கொண்டாடினர்.

கைலாஷ் மானசரோவர் தரிசனம்

செப்டம்பரின் முதல் பாதியில், சத்குரு நேபாளம் வழியாக பயணம் செய்து, புனிதமிக்க "கைலாஷ் மானசரோவர்" தரிசனத்திற்கு அன்பர்களை வழிநடத்தினார். சராசரி கடல் மட்டத்திலிருந்து 16,410 அடி உயரத்தில் அமைந்துள்ள நேபாளத்தின் லாப்சா லா கணவாயில், மானசரோவர் ஏரிக்கரையில் இருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் இந்த தரிசனம் நடந்தது.