மண், நமது தாய்
இதனை ஒரு நபரால், ஒரு அரசாங்கத்தால் அல்லது ஒரு அமைச்சகத்தால் செய்யமுடியாது. இது மனிதகுலத்தின் நோக்கமாகவே ஆகவேண்டும், ஏனென்றால் நாம் நமது இருப்பின் அடித்தளங்களை அழித்துக்கொண்டிருக்கிறோம். நமது கலாச்சாரத்தில், நாம் எப்போதும் மண்ணை நம்முடைய தாயாகத்தான் குறிப்பிட்டு வந்துள்ளோம். நாம் தாய் என்று கூறும்போது, நமது வாழ்வின் ஆதாரத்தைப் பற்றி பேசுகிறோம். ஆனால் துரதிருஷ்டவசமாக, கடந்த சில பத்தாண்டுகளில், மண்ணை ஒரு நிதிஆதாரமாக பாவிக்கத் தொடங்கியுள்ளோம். மண் நமது உயிரின் ஆதாரம், வசதிக்காக நாம் பயன்படுத்தும் ஒரு சாதனம் அல்ல.
மகிழ்ச்சித் தேடுதலில், நம்முடைய வாழ்வின் அடித்தளங்களையே அச்சுறுத்தும்படியான பின்விளைவுகளை நாம் ஏற்படுத்தியுள்ளோம்.
இதனை ஒரு நபரால், ஒரு அரசாங்கத்தால் அல்லது ஒரு அமைச்சகத்தால் செய்யமுடியாது. இது மனிதகுலத்தின் நோக்கமாகவே ஆகவேண்டும், ஏனென்றால் நாம் நமது இருப்பின் அடித்தளங்களை அழித்துக்கொண்டிருக்கிறோம். நமது கலாச்சாரத்தில், நாம் எப்போதும் மண்ணை நம்முடைய தாயாகத்தான் குறிப்பிட்டு வந்துள்ளோம். நாம் தாய் என்று கூறும்போது, நமது வாழ்வின் ஆதாரத்தைப் பற்றி பேசுகிறோம். ஆனால் துரதிருஷ்டவசமாக, கடந்த சில பத்தாண்டுகளில், மண்ணை ஒரு நிதிஆதாரமாக பாவிக்கத் தொடங்கியுள்ளோம். மண் நமது உயிரின் ஆதாரம், வசதிக்காக நாம் பயன்படுத்தும் ஒரு சாதனம் அல்ல.
ஆனால், இதை மட்டும்தான் நாம் செய்துள்ளோம். உள்ளுக்குள் இருப்பதை நீங்கள் வெளியில் தேடும்பொழுது, நீங்கள் எல்லாவற்றையும் அழித்துவிடுவீர்கள். மகிழ்ச்சித் தேடுதலில், நம்முடைய வாழ்வின் அடித்தளங்களையே அச்சுறுத்தும்படியான பின்விளைவுகளை நாம் ஏற்படுத்தியுள்ளோம். உங்களுக்கு குழந்தைகள் இருந்தால், உங்களைவிட அவர்கள் சிறப்பாக வாழவேண்டும் என்பது உங்களுக்குள் எழும் உண்மையான ஒரு உணர்வு. ஆனால் அவ்வளவு அற்புதமான நோக்கத்துடன், நாம் உருவாக்கிவரும் உலகத்தைச் சற்றுப் பாருங்கள்.
உணவும், நீரும் பற்றாக்குறையாகும்போது
2045 ம் ஆண்டுகளில், 40 சதவிகிதம் உணவு குறைந்துவிடும் என்று கூறுகின்றனர். உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் செல்வம், கல்வி அல்லது வேறு எதைக்கொடுத்து வந்திருந்தாலும், உணவுப் பற்றாக்குறைகள் வந்துவிட்டால், நமது குழந்தைகளால் நன்றாக வாழமுடியாது. இந்த அபாயகரமான நிலைமைகள் மிக வேகமாக வளர்ந்துக் கொண்டிருக்கின்றன. 2032ம் ஆண்டுக்குள், 350 கோடி மக்கள் நீர் அழுத்தத்தில் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது – அதாவது தினசரி குடிநீர் ஒரு சவாலாக இருக்கும். இது வெறும் எச்சரிக்கை தத்துவமல்ல – மிகவும் பொறுப்புணர்வான அறிவியலாளர்களால் இது பேசப்படுகிறது.
Saudis and Expats Converge to Hear Sadhguru Speak about Save Soil (12 May)
Sadhguru received a very warm welcome in Riyadh. He addressed an enthusiastic and highly engaged public gathering organized by the Embassy of India, Riyadh, answering questions of all kinds, and of course – talking about Soil.
சரியான திசையில் முதல் படிகள்
அதிர்ஷ்டவசமாக, கடந்த சில மாதங்களாக, இலட்சக்கணக்கானவர்களின் உரையாடலில் மண் ஒரு இடம்பெற்றுள்ளது. பல தேசங்களும் அவர்களுக்கே உரித்தான விதத்தில், மண் கொள்கைகளை வெளியிடத் தொடங்கியுள்ளனர். மண் மறுசீரமைப்புக்காக, அமெரிக்கா 850 கோடி டாலர்களை முதலீடு செய்துள்ளதுடன், உழுது பயிரிடுதலைக் கைவிடும் மகத்தான படிகளை எடுத்துள்ளது. பிரிட்டன் நாடுகள் மூடு பயிர் மானியங்களுக்காக 130 கோடி டாலர்களை மூலதனம் செய்துள்ளது. இதேவிதமான மண் மறுசீரமைப்புக்காக, ஜெர்மனி 450 கோடி டாலர்களை உள்ளீடு செய்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம், மண் கொள்கையை வரையமைப்பதற்காக ஒரு ஆலோசனை செயல்முறையை தொடங்கியுள்ளது, ஏனென்றால் கொள்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டிய பல தேசங்கள் அங்கே இருக்கின்றன. மேலும் கரீபியன் நாடுகள் மிகுந்த செயலூக்கத்துடன் நம்முடன் இருக்கின்றனர். கயானா தேசம், நம்மிடம் 100 சதுர கிலோமீட்டர் நிலம் கொடுத்து, இது எவ்வாறு செயல்படுத்தப்பட வேண்டும் என்பதை நம்மைச் செய்துகாட்டுமாறு விருப்பம் தெரிவித்துள்ளது. இந்தியா நாடெங்கிலும் பரவியிருக்கும் 13 நதிப்படுகைகளில் இருக்கும் மண்ணை மறுசீரமைப்பதற்காக 19,000 கோடி ரூபாய்களை ஒதுக்கியுள்ளது. இந்த மண்பரப்பு இந்தியாவின் 67% வேளாண் நிலமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. அது ஒரு மாபெரும் படி. சீனா, அதன் மண் கொள்கையை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளது.
வேறு யாரோ ஒருவர் அதைச் செய்யப்போகிறார் என்று நீங்கள் நினைக்காமல் இருப்பது முக்கியமானது.
ஆகவே, உலகம் பதில்கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் ஒரு ஜனநாயக தேசத்தில் நீங்கள்தான் தலைவர்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். வேறு யாரோ ஒருவர் அதைச் செய்யப்போகிறார் என்று நீங்கள் நினைக்காமல் இருப்பது முக்கியமானது. ஒரு தேசத்தை வழிநடத்திச் செல்வது சிக்கலான ஒரு சூழ்நிலை. உலகத்தின் பெரும்பாலான அரசாங்கங்கள், 5 வருடங்களுக்குள் பலன் அளிக்கும் விஷயங்களைத்தான் செய்ய முயற்சிக்கின்றன. ஏனென்றால் ஒரே ஒரு தேசத்தில்கூட, 60% ஜனத்தொகையினர் எழுந்து நின்று, “இந்த தேசத்தின் நீண்ட கால நல்வாழ்வைக் குறித்து நாங்கள் அக்கறைகொள்கிறோம். எங்களது குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி நாங்கள் முனைப்பாக இருக்கிறோம்”, என்று எப்போதுமே கூறியதில்லை.
Saudis and Expats Converge to Hear Sadhguru Speak about Save Soil (12 May)
Sadhguru received a very warm welcome in Riyadh. He addressed an enthusiastic and highly engaged public gathering organized by the Embassy of India, Riyadh, answering questions of all kinds, and of course – talking about Soil.
நமது சிந்தனை எங்கே மாறவேண்டியுள்ளது
அப்படிப்பட்ட ஒரு விஷயம் ஒருபோதும் வெளிப்படுத்தப்படவில்லை. அவர்கள் கேட்பதெல்லாம் இதுதான், “எரிவாயு விலையில் 5 ரூபாய் குறையுங்கள். என்னுடைய வருமான வரியில் 1% எனக்கு தள்ளுபடி வழங்குங்கள்.” ஆனால் ஒருவரும் தேசத்தின் நீண்ட கால நல்வாழ்வுக்காக கேட்பதில்லை. அனைத்து வளர்ந்த தேசத்தின் குடிமக்களும் எழுந்து நின்று, உங்கள் நாட்டின் நீண்ட கால நல்வாழ்வுக்காக கோரிக்கை வைக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது. இது மிக, மிக முக்கியமானது.
அதை நீங்கள் செய்யவில்லையென்றால், இது நிகழப்போவதில்லை. தேசத்தின் நீண்ட கால நலனில் அரசாங்கங்கள் முதலீடு செய்வதற்கு, நீங்கள் குரலெழுப்ப வேண்டும். வாக்களிப்பது மட்டும் உங்கள் பொறுப்பல்ல – குரலெழுப்புவதும் உங்கள் பொறுப்புதான். மேலும் இன்றைக்கு, அதிர்ஷ்டவசமாக தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத் தளங்களின் காரணத்தால், நீங்கள் வீட்டிலிருந்தபடியே, குரலெழுப்ப முடியும். அதைச் செய்வதற்கு நீங்கள் வெளியில் சென்று வீதியில் நிற்க வேண்டியதில்லை.
Saudis and Expats Converge to Hear Sadhguru Speak about Save Soil (12 May)
Sadhguru received a very warm welcome in Riyadh. He addressed an enthusiastic and highly engaged public gathering organized by the Embassy of India, Riyadh, answering questions of all kinds, and of course – talking about Soil.
நீங்கள் என்ன செய்யமுடியும்
உங்கள் இதயத்தில் ஏதேனும் அன்பும், பொறுப்புணர்வும் இருக்குமேயானால், உங்கள் கைப்பேசியே ஒரு வலிமைமிக்க மையம் தான். நீங்கள் உண்மையாகவே உறுதியாக எழுந்து நின்றால், ஒட்டுமொத்த உலகையும் நீங்கள் சென்றடைய முடியும். நீங்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்தால், உங்களை ஒருவரும் நிறுத்தமுடியாது.
தேசத்தின் நீண்ட கால நலனில் அரசாங்கங்கள் முதலீடு செய்வதற்கு, நீங்கள் குரலெழுப்ப வேண்டும். வாக்களிப்பது மட்டும் உங்கள் பொறுப்பல்ல – குரலெழுப்புவதும் உங்கள் பொறுப்புதான்.
இது ஒரு போராட்டம் அல்ல, இது ஒரு கிளர்ச்சியும் அல்ல, இது நமது கோபம் மற்றும் ஆத்திரத்தை வெளிப்படுத்துவதோ அல்லது யாரையும் குற்றம் சாட்டுவதோ அல்ல. நாம் அனைவரும் தெரிந்தோ, தெரியாமலோ இதைச் செய்துள்ளோம். 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், நாம் 160 கோடி மக்களாகத்தான் இருந்தோம்; இன்றைக்கு, நாம் 800 கோடியை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறோம். இரசாயனங்கள் மற்றும் உரங்களின் காரணமாகத்தான், இவ்வளவு திரளான மக்கள்கூட்டத்துக்கும் நாம் உணவளிக்க முடிந்துள்ளது. ஆனால் அதே நேரத்தில், நாம் குறிப்பிடத்தக்க அளவுக்கு மண்ணை சேதப்படுத்திவிட்டோம். ஒரு தலைமுறையாக நாம் சரிசெய்ய வேண்டிய நேரம் வந்திருக்கிறது.
சரிசெய்வது என்றால், உரங்கள் மற்றும் இரசாயனங்களைத் தடைசெய்யும் அதீத ஆர்வக்கோளாறான கருத்துகள் அல்ல. மண்ணின் கரிமவளத்தை அதிகரித்தால், உரமிடுவதற்கான தேவை இயற்கையாகவே குறையத் தொடங்கும். அதைச் செய்வதற்கு நமக்கு போதிய பொறுமை இருக்கவேண்டும். நீங்கள் அனைவரும் மண்ணைப்பற்றி உங்களுக்கே அறிவு புகட்டிக்கொள்ள வேண்டும். நீங்கள் எங்கு சென்றாலும், குறைந்தது 2-5 நிமிடங்களுக்காவது, மண்ணைப் பற்றி ஏதேனும் ஆக்கப்பூர்வமாக பேசவேண்டும்.
நீங்கள் என்ன செய்யமுடியும்
உங்கள் இதயத்தில் ஏதேனும் அன்பும், பொறுப்புணர்வும் இருக்குமேயானால், உங்கள் கைப்பேசியே ஒரு வலிமைமிக்க மையம் தான். நீங்கள் உண்மையாகவே உறுதியாக எழுந்து நின்றால், ஒட்டுமொத்த உலகையும் நீங்கள் சென்றடைய முடியும். நீங்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்தால், உங்களை ஒருவரும் நிறுத்தமுடியாது.
நீங்கள் மனிதராக வந்துவிட்டால், உங்களுக்கான எதையும் விழிப்புணர்வுடன் உங்களால் செய்துகொள்ள முடியும் என்பது உங்களது சிறப்புரிமையாக இருக்கிறது. இதனால்தான் மண் காப்போம் இயக்கம், விழிப்புணர்வான உலகை உருவாக்குவோம் என்கிற முயற்சியின் கீழ் வருகிறது..
நீங்கள்கூட மண்தான் – நடமாடும் மண். இது ஒரு குறுகிய வாழ்க்கை. இதில் எவ்வளவு குழப்பம் – நம்முடைய இருப்பின் தன்மையை நாம் மறந்துகொண்டிருப்பதே இதற்கான காரணம். எல்லாவற்றுக்கும் முதலில், நம்மில் ஒருவர்கூட என்றென்றைக்கும் இங்கே இருக்கப்போவதில்லை என்பதை பெரும்பாலான மனிதர்கள் உணர்ந்திருக்கவில்லை. ஒருநாள் இந்த உடல் மண்ணின் ஒரு பாகமாகிவிடும். நீங்கள் மனிதராக வந்துவிட்டால், உங்களுக்கான எதையும் விழிப்புணர்வுடன் உங்களால் செய்துகொள்ள முடியும் என்பது உங்களது சிறப்புரிமையாக இருக்கிறது. இதனால்தான் மண் காப்போம் இயக்கம், விழிப்புணர்வான உலகை உருவாக்குவோம் என்கிற முயற்சியின் கீழ் வருகிறது.
நாம் எவ்வளவு விழிப்புணர்வாக இருக்கிறோம்?
தற்போது, மனிதர்கள் தங்களுக்கே உரிய புத்திசாலித்தனத்தினாலேயே துன்பப்படுகின்றனர். புத்திசாலித்தனம்தான் நம்மிடம் இருக்கும் ஒரே தீர்வு, ஆனால் அதை நாம் ஒரு பிரச்சனையாக மாற்றிவிட்டோம், ஏனெனில் நாம் விழிப்புணர்வுடன் இல்லை. உங்கள் கையில் மிகவும் கூர்மையான ஏதோ ஒன்றை நீங்கள் பிடித்திருந்தால், அதனை எப்படிப் பிடித்திருப்பது என்பது உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். நீங்கள் விழிப்புடன் இல்லையென்றால், அது மிகவும் ஆபத்தாகிவிடுகிறது.
விழிப்புணர்வான மனிதர்களை உருவாக்காமல், விழிப்புணர்வான உலகம் இல்லை. விழிப்புணர்வான ஒரு உலகை உருவாக்காமல், எதற்குமே தீர்வு இல்லை, ஏனென்றால் நாம் எல்லாவற்றையுமே பிரச்சனையாக்கும் திறன் கொண்டிருக்கிறோம். ஆகவே, ஒரு விழிப்புணர்வான உலகை உருவாக்குவோம்.
நமது சவால், நமது சிறப்புரிமை
ஒரு தலைமுறையாக, மண் அழிவு என்ற இந்த சவால் நமக்கு முன்னால் இருக்கிறது, அதே சமயம் ஒரு அழிவின் விளிம்பிலிருந்து திரும்ப மீட்டெடுக்கும் சிறப்புரிமை பெற்றுள்ள தலைமுறையாகவும் நாம் இருக்கமுடியும். நெருங்கிவரும் அழிவுக்குள் நடந்துசென்று, அது குறித்து அழுதுபுலம்பும் தலைமுறையாக இருப்பதற்கு நாம் விரும்பவில்லை. நாம் எழுந்து நின்று, இந்தச் சூழலை மாற்றுவதற்கான நேரம் இது. மேலும் இது ராக்கெட் அறிவியலும் அல்ல, அளவில்லா நிதி முதலீடும் இதற்குத் தேவையில்லை. இதற்குத் தேவையானது, சரியான வழிகாட்டலும், தளர்வறியா உறுதியும் மட்டும்தான். அவ்வளவுதான் இதற்கு வேண்டியது. நாம் இதனை நிகழச்செய்வோம்.