தேவையான பொருட்கள்
[6 பேருக்கு]
½ கப் முந்திரி
2 மேஜைக்கரண்டி நெய்
¼ கப் பாதாம், பிஸ்தா (விருப்பத்திற்கு ஏற்றாற்போல்)
2 மேஜைக்கரண்டி உலர்திராட்சை
2 கப் மெல்லியதாக துருவிய கேரட்
½ டீஸ்பூன் ஏலக்காய் தூள்
1 கப் பேரீட்சை அல்லது ½ கப் கரும்பு சர்க்கரை
1 கைப்பிடி பொடியாக நறுக்கிய பாதாம், முந்திரி, பிஸ்தா (அலங்கரிப்பதற்கு)
செய்முறை
- முந்திரியை குறைந்தது ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். ஊறிய முந்திரியை மிக்சியில் போட்டு வைப்பரில் சிறிது அரைத்து, அதில் 3 கப் தண்ணீர் சேர்த்து நன்கு மிருதுவான, கொஞ்சம் கெட்டியான பால் போல் வரும் வரை அரைக்கவும்.
- பேரீட்சையை இனிப்பிற்காக பயன்படுத்த போகிறீர்கள் என்றால், அதன் விதைகளை நீக்கிவிட்டு சுடுநீரில் 30 நிமிடம் ஊறவைக்கவும், அதில் ½ கப் முந்திரி பால் சேர்த்து மிருதுவாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
- பாதாம், பிஸ்தா மற்றும் உங்களுக்கு விருப்பமான பிற நட்ஸ்களை சிறிதாக உடைத்துக்கொள்ளவும். ஒரு வாணலியில் 1 மேஜைக்கரண்டி நெய் விட்டு சூடுபடுத்தவும். மிதமான தீயில் வைத்து உடைத்த நட்ஸ்களை அதில் சேர்த்து அவை நிறம்மாற துவங்கும் வரை வறுக்கவும். பிறகு உலர்திராட்சையை சேர்க்கவும்; அவை உப்பி பெரிதாகும் வரை வறுக்கவும். அதில் கேரட் துருவல் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து 2 நிமிடத்திற்கு வதக்கவும், பிறகு முந்திரி பாலை சேர்க்கவும்.
- மிதமான சூட்டில் வைத்து அவ்வப்போது கிளறிவிட்டு, அதில் உள்ள நீர் வற்றும் வரை, தோராயமாக 15-20 நிமிடத்திற்கு வேகவிடவும். அடி பிடிக்காத அளவில் கிளறிவிடவும்.
- இதில் அரைத்த பேரீட்சை-முந்திரிபால் கலவையை சேர்க்கவும். இல்லையென்றால் கரும்பு சர்க்கரையை சேர்க்கவும். பிறகு மீதமுள்ள நெய்யினை சேர்க்கவும். அனைத்தும் நன்றாக சேரும் வரை கிளறவும்.
- உங்களுக்கு புட்டிங் போன்ற மிகவும் மென்மையான பதத்தில் வேண்டும் என்றால், அல்வாவை இப்போது இறக்கிவிடவும். கெட்டியான பதத்தில் வேண்டும் என்றால், இந்த கலவை வாணலியின் ஓரத்திலிருந்து பிரிந்து வரும்வரை, ஈரப்பதம் நன்கு வற்றும் வரை வேகவைக்கவும்.
- அல்வா விரும்பிய பதத்திற்கு வந்தவுடன், இறக்கி வைக்கவும்.
- நறுக்கிய பாதாம், முந்திரி, பிஸ்தாவினை மேலே தூவி அலங்கரிக்கவும்.
- இந்த அல்வாவை சூடாகவோ, ஆறிய நிலையிலோ அல்லது குளிர்ச்சியாகவோ எப்படி வேண்டுமானாலும் பரிமாறலாம்.