நடப்புகள்

சத்குருவை தொடருங்கள்

கடந்த சில வாரங்களின் நிகழ்வுகள் குறித்த ஒரு கண்ணோட்டம்

லண்டனில் உள்ள இந்திய உலகளாவிய மன்றத்தில் (India Global Forum) சத்குரு உரையாற்றினார்

30
ஜூன்

இந்திய உலகளாவிய மன்றத்தின் 2021-ஆம் பதிப்பின் இணையவழி நிகழ்வில் சத்குருவுடன் பிபிசி-யின் தொகுப்பாளர் பென் தாம்ஸன் உரையாடினார். வளம் பேணுதல், சூழலியல் மற்றும் எல்லையற்று நுகரும் தன்மை ஆகியவற்றை பற்றிய பென்னின் கேள்விகளோடு இந்த உரையாடல் துவங்கியது. அத்தனைக்கும் ஆசைப்படுவது நலமே என்ற தன்னுடைய தனித்துவமான கண்ணோட்டத்தை சத்குரு பகிர்ந்து கொண்டார். இது இன்றைய வணிக நடைமுறைகளின் கட்டுப்பாடுகள் மற்றும் இருமுனை கத்தியாக இருக்கும் தொழில்நுட்பம் ஆகியவற்றை ஆராயும் விதமாக உரையாடலை இன்னும் ஆழமாக கொண்டு சென்றது.

அமெரிக்காவில் உள்ள ஈஷா யோக மையத்தில் "குருவின் மடியில்" நிகழ்வு

3
ஜூலை

அமெரிக்காவின் டென்னசியில் உள்ள ஈஷா யோக மையத்தில் தியான அன்பர்களுக்காக நடைபெற்ற ஒரு நாள் நிகழ்வில் சத்குரு, "குருவின் மடியில்" என்பதன் உண்மையான அர்த்தம் பற்றி பேசுகையில் - இந்த அம்சத்தை வாழ்வில் தொடாமல் இருப்பின் ஒருவர் வெற்றி தோல்வி இரண்டாலும் துன்புறுபவராக இருப்பார் என விளக்கினார். கேள்வி-பதில் அமர்வாக நிகழ்ந்த இந்த நிகழ்வு சத்குருவின் இயல்பான நகைச்சுவை மற்றும் ஞானத்தோடு கூடிய சுவாரசியமான கதைகள் பல நிறைந்ததாக இருந்தது. சச்சரவுகள் நிறைந்த சமூகங்களில் ஆன்மீகத்தின் முக்கியத்துவம், வரவிருக்கும் காலபைரவ பிரதிஷ்டை மற்றும் தெய்வீகத்தின் தலையீடு என்ற கருத்து போன்றவற்றை குறித்த கேள்விகளுக்கு சத்குரு பதிலளித்தார்.

சத்குரு - "தி ஸ்கூல் ஆப் கிரேட்னஸ்" என்ற வலையொலியில்

8
ஜூலை

லூயிஸ் ஹவ்ஸ் ஒரு பிரபலமான எழுத்தாளர், தொழில்முனைவோர் மற்றும் முன்னாள் கால்பந்தாட்ட வீரர். தங்குதடையற்று நிகழ்ந்த இந்த உரையாடலில் அவர் சத்குருவிடம் கர்மா, அகங்காரம் மற்றும் குறிக்கோள் பற்றிய உண்மையைக் குறித்து கேள்விகள் கேட்டார். மிக ஆழமாக சென்ற இந்த உரையாடலின் கடைசி கேள்வியாக இருந்தது, "சத்குரு, இந்த உலகில் நீங்கள் விட்டுச்செல்ல விரும்பும் மூன்று உண்மைகள் யாவை?" ஒரு கணமும் தாமதியாமல் சத்குரு சட்டென்று, "அனைவரும் வாயை மூடுங்கள், பாருங்கள், கவனம் கொள்ளுங்கள்! இதை நீங்கள் செய்தால் நான் என்னவெல்லாம் அறிந்திருக்கிறேனோ, அதை நீங்களும் அறிய முடியும்" என பதிலுரைத்தார்.

சத்குரு - ப்ளூம்பெர்க் தொலைக்காட்சியின் "ஆபீஸ் ஹவர்ஸ் வித் டேவிட் மெல்ட்ஸர்" என்ற நிகழ்ச்சியில்

13
ஜூலை

லீ ஸ்டீன்பெர்க் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் ஸ்போர்ட்ஸ் 1 மார்க்கெட்டிங்கின் இணை நிறுவனர் டேவிட் மெல்ட்ஸர் இந்த உரையாடலில் ஈடுபட்டார். தனக்கே உரிய பாணியில் சத்குரு லட்சியம் என்பதை குறித்து விளக்குகையில், "லட்சியம் என்பது மனித விழிப்புணர்வின் தடைபட்ட வெளிப்பாடு என்றே நான் நினைக்கிறன்" என்றார். அதைப்போலவே மகிழ்ச்சி மீதான நாட்டம் குறித்த கேள்விக்கும் அவர் இவ்வாறு பதிலுரைத்தார், "நாட்டம் என்பது நமக்கு வெளியே உள்ளவற்றைப் பற்றியது. ஆனால் நீங்கள் எங்காவது காற்றில் மகிழ்ச்சி மிதந்து கொண்டிருப்பதை கண்டிருக்கிறீர்களா? இல்லை, மகிழ்ச்சி உங்களுக்குள் தான் நிகழ்கிறது."

காதல், உறவுகள்... மற்றும் ஈஷா யோகா

21
ஜூலை

யூடியூபர் அலெக்ஸாண்டர் கோர்மாண்ட் உடனான உரையாடல் முழுவதும் சத்குருவின் ஆணித்தரமான தர்க்க அறிவு மற்றும் தெள்ளத்தெளிவான சிந்தனை ஓட்டத்தால் நிரம்பியிருந்தது. இந்த உரையாடலின் தலைப்பு - காதல் மற்றும் உறவுகள். "காதல் என்பது நீங்கள் என்ன விரும்புகிறீர்களோ அதைப் பெறுவது அல்ல. உங்களை நீங்களே இழப்பதற்கு அது ஒரு வாய்ப்பு. இது ஆதாயம் பெறுவது குறித்த திட்டம் அல்ல. இது இழப்பை சந்திப்பதற்கு விருப்பத்தோடு செல்வது" என்றார் சத்குரு. சத்குருவின் அறிவு எங்கிருந்து வருகிறது என்று அலெக்ஸாண்டர் வினவியபோது, "என் தலையில் எந்த அறிவையும் நான் சேகரித்து வைக்கவில்லை, என் உணர்வை நான் கூர்மையாக வைத்திருக்கிறேன், அவ்வளவு தான்!" என்றார் சத்குரு.

குரு பௌர்ணமி மற்றும் "முழு நிலவில் அருள் மடியில்" சத்சங்கம்

23
ஜூலை

ஈஷா சமஸ்கிருதி மாணவர்களின் திறன் மிகுந்த பாரம்பரிய நடனம், பாடல் மற்றும் களரிப்பயட்டு படைப்போடு அன்றைய மாலை நிகழ்வு துவங்கியது. சத்குரு பாரம்பரிய கலைகளை மக்களின் வாழ்வில் கொண்டுவருவதன் முக்கியத்துவத்தைப் பற்றி பேசி புராஜெக்ட் சமஸ்கிருதியை துவக்கி வைத்தார் இணையவழியில் இந்தக் கலைகளை அனைவரும் பயில்வதற்கு புராஜெக்ட் சமஸ்கிருதி ஒரு வாய்ப்பாக அமையும். பின்னர், சத்குரு அனைவரையும் சக்தி வாய்ந்த தியானத்தில் வழிநடத்த, அன்றைய நிகழ்வு நிறைவுபெற்றது.

சத்குருவுடன் யந்த்ரா வைபவம்

24
ஜூலை

பைரவி யந்த்ரா மற்றும் அவிக்ன யந்த்ரா வடிவில் தேவியை மக்கள் தங்கள் இல்லத்துக்கு எடுத்து செல்வதன் மூலம் பிரதிஷ்டை செய்யப்பட்ட சூழலில் வாழ்வதற்கான ஒரு அரிய வாய்ப்பு இது. இந்த யந்திரங்கள் லிங்கபைரவியின் வாழும் வடிவமாக, அவளின் சக்தி வாய்ந்த சந்நிதானத்துக்கான ஒரு நுழைவாயிலாக அமைந்துள்ளன. சக்தி வாய்ந்த செயல்முறையை பங்கேற்றவர்களுக்கு வழங்கிய சத்குரு, "நீங்கள் பைரவி தேவியை உங்களுக்கும் மேலாக பாவித்தால், அவள் இந்த வாழ்விலும் அதற்கு பின்னரும் உங்களை சிரமமின்றி வழி நடத்துவாள்" என்றார்.

"ஓபன் ஹவுஸ் வித் சத்குரு" உலகின் #1 கிளப்ஹவுஸ் ரூம் ஆனது!

29
ஜூலை

புதிதாக அறிமுகமாகி மிக விரைவாக பிரபலமடைந்துள்ள ஆடியோ ஆப் ஆன கிளப்ஹவுஸில் நிகழ்ந்த சத்குருவின் உரையாடல் நிகழ்ச்சியை கேட்க உலகெங்கிலும் உள்ள 72 நாடுகளில் இருந்து 30,000க்கும் மேற்பட்ட மக்கள் ஆன்லைனில் இணைந்தனர். கர்நாடகாவை சேர்ந்த விஷ்வவாணி கிளப் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வை விஷ்வவாணி டெய்லி பத்திரிக்கையின் நிர்வாக ஆசிரியர் விஷ்வேஸ்வர் பட் முன்னிருந்து நடத்தி வைத்தார். இந்த உரையாடல் பயம், கோபம், ஆயுர்வேதம், சமூக ஊடக துன்புறுத்தல் மற்றும் சூழலியல் போன்ற பலதரப்பட்ட தலைப்புகளை குறித்தும் இருந்தது.

சத்குருவுடன் உரையாடினார்
மைக்கேல் மோ

2
ஆகஸ்ட்

மைக்கேல் மோ 'க்ளோபல் சிலிக்கான் வேலி' என்ற பிரபலமான முதலீட்டு நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, மேலும் 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' என்ற பத்திரிகை வழங்கிய நிதி ஆய்வாளருக்கான "பெஸ்ட் ஆன் தி ஸ்ட்ரீட்" என்ற விருதைப் பெற்றவர். இதற்கு முன்பு 'திங்க் இக்விட்டி' என்ற நிறுவனத்தை நிறுவி அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தவர் மைக்கேல். மெரில் லிஞ்ச்-சின் உலகளாவிய வளர்ச்சி ஆராய்ச்சியின் தலைவராகவும் அவர் பதவி வகித்து இருக்கிறார். அவர்கள் நிகழ்த்திய உரையாடலின் சாராம்சம் தொழில்முனைவு பற்றி அமைந்திருந்தது. ஒருவரை எது யோகியாக்குகிறது, தொழில்முனைவோர் பயத்தை எவ்வாறு கடந்து செல்வது, மேலும் மக்களால் நேசிக்கப்படுவதன் இரகசியம் ஆகியவற்றை குறித்து மைக்கேல் சத்குருவிடம் கேள்விகள் எழுப்பினார்.