வாழ்வின் புதிர்கள்

உங்களது கர்மவினை எங்கே தொடங்கியது?

நமது கர்மவினையின் சிக்கலான அமைப்பை தெளிவுபடுத்தும் சத்குருவுடன், எண்ணத்தைத் தூண்டும் பயணத்தைத் தொடங்குங்கள். நாம் சுமக்கும் கர்மவினையெனும் பைக்குள், அந்த முதல் கல்லை யார் போட்டது? நமது விதியை வடிவமைக்கும் உண்மைகளை வெளிப்படுத்துவதற்கு, கர்மவினையின் திரைச்சீலை அடுக்குகளை மீண்டும் களைவோம் வாருங்கள்.

கேள்வியாளர்: நமஸ்காரம், சத்குரு. என்னுடைய எல்லா கர்மவினைகளையும், கற்கள் நிரம்பிய ஒரு பை என்று நான் கருதினால், அது காலியாக இருந்தபோது, முதல் கல்லை அந்தப் பைக்குள் போட்டது யார்?

சத்குரு: ஓ, அத்தனை கற்களை நீங்கள் சுமக்கிறீர்களா? கற்களின் பை போல உங்களது கர்மவினை உணரப்பட்டால், என்னை மன்னியுங்கள். நீங்கள் பூக்களின் பையைச் சுமந்துகொண்டு, நறுமணத்தை அனுபவிக்க முடியும், ஆனால் கற்கள் உபயோகமானவை – பல விஷயங்களை நீங்கள் கட்டமைக்க முடியும். அடையாளப்பூர்வமாக பேசுகையில், எதைக் கட்டமைப்பது என்று உங்களுக்குத் தெரியவில்லை என்றால், குறைந்தபட்சம் உங்கள் கர்மவினைக் கற்களை நீங்கள் யார்மீதாவது வீசமுடியும்.

முதல் நாளிலிருந்து, நீங்கள்தான் பொறுப்பு என்று நான் கூறிவந்துள்ளேன். ஆனால், யார் முதல் கல்லைப் போட்டது என்று நீங்கள் என்னைக் கேட்கிறீர்கள். “எது முதலில் வந்தது, கோழியா அல்லது முட்டையா?” என்று கேட்பதை மிகவும் காரணஅறிவுரீதியான கேள்வி என்று பலபேர் நினைப்பதற்கு ஒப்பானது இது. சங்கரன்பிள்ளை என்ன செய்தார் என்று நான் உங்களிடம் கூறியிருக்கிறேனா?

ஒருமுறை இது நிகழ்ந்தது: சங்கரன்பிள்ளையும், அவரது கல்லூரி நண்பர்களும் ஒரு பார்ட்டிக்காக உணவகத்துக்குச் சென்றனர். இளைஞர்கள் மது அருந்தத் தொடங்கியதும், அவர்கள் நீளமான கதைகளையும், தாங்கள் ஒருபோதும் செய்திராத எல்லா பிரமாதமான விஷயங்களையும் அவர்கள் செய்ததாக கூறத் தொடங்குகின்றனர். மேலும் ஒவ்வொரு கூடுதல் கோப்பை மதுவுடனும், கதைகள் நீண்டுகொண்டே செல்கின்றன. ஒரு மனிதன் போதுமான வல்லமை இல்லாத காரணத்தால், ஒரு சூப்பர்மேனாக இருப்பதற்கு முயற்சி செய்வதாக தன்னை வெளிக்காட்டிக்கொள்கிறான். நீங்கள் போதிய வல்லமையாளனாக இருந்தால், நீங்கள் மிகவும் சாதாரணமாக இருந்துகொண்டு, அற்புதமாக இருக்கமுடியும்.

ஆரம்பத்தில் எங்களது வகுப்பு கையேட்டு பிரசுரத்தில், “சாதாரணத்திலிருந்து அசாதாரணத்துக்கு” என்று கூறுவது வழக்கமாக இருந்தது. அப்போது மக்கள் என்னிடத்தில், “சத்குரு, நான் எப்படி அசாதாரணமாக மாறுவது? நான் ஏதாவது முன்னேற்றம் காண்பேனா?” என்று கேட்பது வழக்கம். அது அப்படி அல்ல, நீங்கள் அ – சாதாரணமாவீர்கள், மற்றவர்களைவிட மேலதிகம் சாதாரணமாக; வெறுமனே ஒரு உயிர் உருவாக்கப்பட்டதைப்போல. நான் தனிச்சிறப்பு என்று கூறவில்லை – நான் அசாதாரணம் என்று கூறினேன்.

மற்ற படைப்பிலிருந்து நீங்கள் தனிப்பட்டவர் என்று எண்ணுவது புத்திசாலித்தனம் அல்ல; அது மனநோய்.

ஆகவே, மது அருந்துவது அதிகமாகும்போது, மக்கள் சாதாரணமானவர்களாக இல்லாமல், மேலதிகம் சிறப்புடையவர்களாக விரும்புகின்றனர். அவர்கள் பெரிதாகி, பெரிதாகி, மிகவும் பெரிதாகி, சில நேரங்களில் மது அவர்களின் தலைக்கேறிவிட்டால், தலைகள்கூட மோதிக்கொள்ளும். மனிதர்கள் மதுபோதையில் இருக்கும்போது, அதிகமான வன்முறைகள் நிகழ்கின்றன: வார்த்தை வன்முறை, ஏச்சுக்கள், உடலளவில் வன்முறை – மதுவின் விளைவால் அனைத்தும் நிகழ்கின்றன. ஏனென்றால் அவர்கள் சூப்பர்மேனாகிவிட்டதாக தாங்களாகவே நினைத்துவிடுகின்றனர். அவர்கள் வெறுமனே மேன் அல்ல – அவர்கள் சூப்பர் மேன்கள். இவர்கள் இயல்பாகவே சூப்பர்மேன் போல தங்களது உள் உடுப்புகளை வெளிப்புறமாக அணிகின்றனர். அப்படிப்பட்ட அடிப்படையான விஷயங்கள் உங்களுக்குத் தெரியாதபோது, நீங்கள் பிரச்சனையில் இருக்கிறீர்கள்.

அன்றைக்கு சங்கரன்பிள்ளை பசியுடன் இருந்தார்; அவர் மது அருந்துவதற்கு அல்ல, சாப்பிடுவதற்கு விரும்பினார். ஆகவே, அவர் அங்கே வெறுமனே அமர்ந்திருந்தார். மற்றவர்கள் அனைவரும் மது அருந்திக்கொண்டும், அவர்களால் செய்யமுடிந்த எல்லா பெரிய, பெரிய விஷயங்களைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தனர். நீங்கள் உடலளவிலான பெரிய விஷயங்களை முடித்துவிட்டால், அறிவுரீதியான மகத்தான ஏதோவொன்றைச் செய்வதற்கு விரும்புகிறீர்கள். ஆகவே, அங்கிருந்த யாரோ ஒருவர் கேள்வி எழுப்பினார், “கோழி முதலில் வந்ததா அல்லது முட்டை முதலில் வந்ததா? முட்டையா அல்லது கோழியா?” அதற்கு, அங்கே ஒரு பெரிய விவாதமே நிகழ்ந்தது. ஆனால், சங்கரன்பிள்ளை உணவு வருவதற்காகவே காத்திருந்தார். அப்போது ஒருவர் சங்கரன்பிள்ளையைப் பார்த்து கேட்டார், “ஏய், உனக்கு என்ன பிரச்சனை? உனக்கு எந்தக் கருத்தும் இல்லையா? கோழி முதலிலா அல்லது முட்டை முதலிலா?” வேறொரு நண்பர் கேட்டார், “எனக்குக் கூறுங்கள், முதலில் கோழியா அல்லது முட்டையா?” சங்கரன்பிள்ளை, “எதை நீங்கள் முதலில் ஆர்டர் செய்தீர்களோ, அது முதலில் வரும்.”

ஆகவே, முதலில் துன்பமா அல்லது முதலில் பரவசமா? எதை நீங்கள் முதலில் ஆர்டர் செய்தீர்களோ அது. முதல் கல்லை யார் போட்டது? உங்கள் சுமையின் அடித்தளமாக இருப்பது யார்? அப்படிப்பட்ட ஒரு விஷயம் இல்லை. நீங்கள் என்பது எது மற்றும் நீங்கள் அல்லாதது எது என்ற தவறான கருத்தாக்கம் உங்களது உருவாக்கமாக இருக்கிறது. ஒரு மரம், தான் மண்ணுடன் ஒன்று என்பதைப் புரிந்துகொள்கிறது. இதனைப் புரிந்துகொள்ளாத மனிதர்கள்தான் பூமி மீது மிக புத்திசாலியான முட்டாள்கள். மண் முதலிலா அல்லது மரணம் முதலிலா? மண் என்று நீங்கள் பார்ப்பது என்னவோ அது, மனிதர்கள் உள்ளிட்ட கோடிக்கணக்கான நுண்ணுயிரிகள் மரணமடைந்ததால் உருவானது.

முதல் கூழாங்கல்லை யார் போட்டது? உங்கள் பெற்றோர் மீது நாம் அந்தக் குற்றத்தை சுமத்தமுடியும், ஏனென்றால் உங்கள் வாழ்வுக்கு அவர்கள் பங்களிப்பு செய்தனர். ஆனால் அவர்கள் ஒரு உடலையும், சிறிது ஞாபகப்பதிவையும் மட்டுமே வழங்கினர். அதிலிருந்து நீங்கள் என்ன உருவாக்குகிறீர்கள் என்பது முழுக்க முழுக்க உங்கள் பொறுப்பு. உங்கள் தாய் அல்லது தந்தை உங்களை தவறாக நடத்தியிருந்தால், அவர்கள் எதை சிறப்பானது என்று அறிந்திருந்தனரோ, அதன் அடிப்படையில் அவர்கள் அவ்வாறு செய்தனர். சிறப்பானது என்று நீங்கள் அறிந்திருப்பது என்னவோ, அதன் அடிப்படையில் இப்போது நீங்கள் செயல்படுகிறீர்கள். நீங்கள் அறிந்திருப்பது ஒரு வித்தியாசமான சாத்தியமாக வளரவேண்டும்; அப்போதுதான் நீங்கள் மேம்பாடு அடைவீர்கள். இப்போது உங்கள் தந்தையை மாற்றுவதற்கு காலதாமதம் ஆகிவிட்டது. உங்கள் தந்தையைப் பற்றி நீங்கள் அவ்வளவு அதிகமாக அறிந்திருந்து, அவரிடத்தில் என்ன தவறு இருந்தது என்றும் அறிந்தால், நீங்கள் அதைக் கடந்து இருக்கவேண்டும்.

நீங்கள் விழிப்புணர்வானவர் என்றால், உங்களுக்கு யார் எந்த விஷயத்தைச் செய்தாலும் அல்லது செய்யாமல் போனாலும், அது உங்கள் வாழ்க்கையை வளப்படுத்த முடியும்.

முதல் கல்லைத் தேடுவதிலும், இப்போது நீங்கள் துன்பப்படுமளவுக்கு அதில் என்ன தவறாகிப்போனது என்று தேடுவதிலும் பயனில்லை. முதல் கல் அல்லது கடைசி கல் என்பது இல்லை. அது என்னவென்றால் நீங்கள் வாழ்க்கையைத் தவறாக புரிந்துகொண்டுள்ளீர்கள். தனித்தன்மை என்ற அறியாமையில் நீங்கள் நனைந்திருக்கிறீர்கள். நீங்கள் தனிப்பட்டவர் என்று நீங்கள் எண்ணுகிறீர்கள் – அதுதான் துன்பம். அதுதான் முதல் கல் என்றும் கூறமுடியும். நீங்கள் விழிப்புணர்வாக சுவாசிக்கவில்லை, அருந்தவில்லை, சாப்பிடவில்லை. தற்போது ‘நீங்கள்” என்று கருதும் அனைத்தையும், உங்கள் உடலின் ஒவ்வொரு அணுவையும், நீங்கள் வெளியிலிருந்து சேகரித்துள்ளீர்கள்.

உங்கள் மனதில் இருக்கும் ஒவ்வொரு எண்ணமும், சொல்லும், எழுத்தும் வெளியிலிருந்து உங்களால் சேகரிக்கப்பட்டுள்ளது. மற்ற படைப்பிலிருந்து நீங்கள் தனிப்பட்டவர் என்று எண்ணுவது புத்திசாலித்தனம் அல்ல; அது மனநோய். மனநோயில் காரணம் கண்டுபிடிக்க முயற்சிக்காதீர்கள். மனநோயில் நீங்கள் காரணம் கண்டுபிடித்தால், நீங்கள் ஒரு கைவிடப்பட்ட சாத்தியம். மனநோய் என்றால், நீங்கள் காரணத்தை விட்டுவிட்டீர்கள்.

தற்போது, நீங்கள் பிரச்சனைக்குப் பொறுப்பேற்காமல், உங்களது வசதிக்கேற்றவாறு காரணத்தை வளைப்பதன் வாயிலாக வாழ்வதற்கு முயற்சிக்கிறீர்கள். நீங்கள் காரணத்தை மீட்டெடுத்து, அதை வளைப்பதை நிறுத்தும்போது, விஷயங்களை அவைகளின் உண்மையான தன்மையில் பார்ப்பதற்கு நீங்கள் தொடங்குகிறீர்கள். அது உங்களுக்கு சாத்தியமில்லை என்றால், குறைந்தபட்சம் தற்போது நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ, அவை எல்லாமே உங்கள் உருவாக்கம் என்று அங்கீகரிக்கும் பொறுப்புணர்வையாவது உங்களுக்குள் கொண்டுவாருங்கள்.

மக்கள் உங்களிடம் நேர்த்தியான விஷயங்களையே செய்வதற்கு நீங்கள் எதிர்பார்த்தால், நீங்கள் ஏமார்ந்துபோவீர்கள். அதைக் கூறுவதற்கேற்ற போதுமான நீண்டகாலம் நான் வாழ்ந்துள்ளேன். என்னுடைய எல்லா நண்பர்களும் இறந்துகொண்டிருக்கின்றனர். ஒரு 104 வயது முதியவரை உள்ளூர் ஊடகம் நேர்காணல் செய்துகொண்டிருந்தது, “104 வயதில் வாழ்ந்திருப்பதைக் குறித்த சிறப்பான விஷயம் என்ன?” அவர் கூறினார், “நெருங்கிய வட்டத்தின் அழுத்தம் இல்லை.”

யார், என்ன செய்தாலும் பரவாயில்லை, தற்போது நீங்கள் இருக்கும் விதத்துக்கு 100 சதவிகிதம் நீங்கள் பொறுப்பேற்க வேண்டும். இந்த ஒரு விஷயத்தை நீங்கள் வளர்த்துக்கொண்டால், நீங்கள் சரியான திசையில் நடக்கத் தொடங்குவீர்கள். இல்லையென்றால், இது யாருடைய தவறு, அல்லது உங்களுக்கு யார் இதைச் செய்தது என்று தேடிக்கொண்டிருப்பதில், உங்கள் எஞ்சிய வாழ்நாள் சுழற்சியிலேயே சென்றுகொண்டிருக்கும். யாரோ ஒருவர் என்ன செய்திருந்தாலும், நீங்கள் நல்லது, கெட்டது, அவலக்ஷணமானது என்று எதை நினைத்தாலும் – நீங்கள் விவேகமானவர் என்றால், உண்மையில் அது உங்கள் வாழ்க்கையில் கூடுதலாக சேர்க்கப்பட்டது மட்டும்தான். மக்கள் உங்களுக்கு இனிமையான அல்லது இனிமையில்லாத விஷயங்களைச் செய்தாலும், நீங்கள் உங்கள் ஞாபகத்தில் தொலைந்துபோகாமல் இருந்தால்,

நீங்கள் விழிப்புணர்வானவர் என்றால், உங்களுக்கு யார் எந்த விஷயத்தைச் செய்தாலும் அல்லது செய்யாமல் போனாலும், அது உங்கள் வாழ்க்கையை வளப்படுத்த முடியும்.