ஈஷா சமையல்

மாதுளை மற்றும் புதினாவுடன் புத்துணர்வூட்டும் தக்காளி சாலட்

தேவையான பொருட்கள்

சாலட்:
3 கப் அளவுக்கு, சிறிய அல்லது செர்ரி தக்காளிகள், பாதியாக அல்லது நான்காக வெட்டியது
1 முழு மாதுளையின் முத்துகள்
½ மஞ்சள் குடைமிளகாய், மெல்லிய கீற்றுகளாக வெட்டியது
½ கப் முட்டைக்கோஸ், பொடிகாக வெட்டியது
⅓ கப் துளசி இலைகள், மென்மையாக நறுக்கியது
⅓ கப் புதினா இலைகள், மென்மையாக நறுக்கியது
100 கிராம் பன்னீர், டோஃபு அல்லது ஃபெட்டா சீஸ், சிறிய துண்டுகளாக உதிர்த்தது

சாலட் டிரெஸ்ஸிங்:
¼ கப் மாதுளையின் பழச்சாறு
1 மேசைக்கரண்டி எலுமிச்சை சாறு
1 மேசைக்கரண்டி ஆரஞ்சு பழச்சாறு
2 மேசைக்கரண்டி எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெய்
1 டீஸ்பூன் தேன்
உப்பு சுவைக்கேற்ப
பொடியாக்கப்பட்ட மிளகு, சுவைக்கேற்ப

அழகுபடுத்த (விரும்பினால்):
½ டீஸ்பூன் எள், வறுத்தது
½ டீஸ்பூன் தைம், உலர்ந்தது பொடிசெய்யப்பட்டது

செய்முறை

  • தக்காளியை நறுக்குவதிலிருந்து செய்முறையை தொடங்குங்கள். அவற்றின் அளவைப் பொறுத்து, அவற்றைப் பாதியாகவோ அல்லது நான்கு துண்டாகவோ வெட்டுங்கள். அப்போதுதான் அவை ஒரே அளவில் இருக்கும். அவற்றை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
  • விருப்பத்தைப் பொறுத்து, பன்னீர், டோஃபு அல்லது ஃபெட்டா சீஸ் ஆகியவற்றை சிறிது எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து கிளறவும். அடுத்த படிகளைத் தொடரும்போது சுவைகூட்டும் விதமாக சேர்ப்பதற்காக, இதனை தனியாக எடுத்து வைக்கவும்.
  • மஞ்சள் குடைமிளகாயில் இருந்து விதைகளை நீக்கி மெல்லிய கீற்றுகளாக நறுக்கவும்.
  • முட்டைக்கோஸை பொடியாக நறுக்கி, எடுத்து வைக்கவும்.
  • உங்கள் கைகளால் துளசி இலைகளையும், புதினா இலைகளையும் மென்மையாகக் கிழித்து, தனியாக எடுத்துவைக்கவும்.
  • ஒரு சிறிய கிண்ணத்தில் மாதுளை சாறு, எலுமிச்சை சாறு, ஆரஞ்சு சாறு, எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெய் மற்றும் தேன் சேர்த்து சாலட் டிரஸ்ஸிங்கை உருவாக்கவும். இந்த கலவையை உப்பு மற்றும் மிளகு சேர்த்து, முழுமையாக கலக்கும் வரை ஒன்றாக கிளறவும்.
  • வெட்டப்பட்ட தக்காளி உள்ள கிண்ணத்தில் மாதுளை முத்துகள், மஞ்சள் குடைமிளகாய் மற்றும் முட்டைக்கோஸை சேர்க்கவும். இதனுடன் துளசி மற்றும் புதினா இலைகளை சேர்த்து கிளறவும்.
  • சாலட் மீது, தயாரிக்கப்பட்ட டிரஸ்ஸிங்கை ஊற்றவும். காய்கறிகள் மற்றும் இலைகளுடன் டிரஸ்ஸிங் நன்கு கலக்கப்படுவதை உறுதிசெய்ய எல்லாவற்றையும் சேர்த்து மெதுவாக கிளறவும்.
  • கலக்கப்பட்ட சாலட்டை பரிமாறும் தட்டு அல்லது கிண்ணத்திற்கு மாற்றவும். உதிர்த்துவிடப்பட்ட பன்னீர், டோஃபு அல்லது ஃபெட்டா சீஸ் ஆகியவற்றை சாலட்டின் மீது சமமாக பரப்பிவிடவும்.
  • அலங்காரம் செய்ய விருப்பப்பட்டால், பரிமாறும் முன்பாக சாலட் மீது வறுத்த எள் மற்றும் தைம் ஆகியவற்றை நறுமணத்திற்காக தூவலாம்.
  • சாலட்டை உடனடியாக பரிமாறவும், புதிய தக்காளி பழச்சாறு மற்றும் மாதுளையின் சுவையானது சீஸ் கிரீம் ஆகியவற்றுடன் சேர்ந்து, இது வண்ணமயமான, ருசியான அனுபவத்தைக் கொடுக்கும்.

இந்த புத்துணர்ச்சியூட்டும் சாலட்டை ஒரு சைட் டிஷ்ஷாக அல்லது லைட் மெயின் கோர்ஸாக அனுபவிக்கலாம், எந்தவொரு தருணத்திற்கும் இது ஏற்றதாக இருக்கும்.