யோகா & ஞானம்

சடங்குகள் குறித்த மறுபார்வை: இன்றைய உலகில் சடங்குகள் ஆற்றும் பங்கினை சத்குரு ஆராய்கிறார்

இந்திய நிலப்பரப்பின் துடிப்புமிகுந்த வண்ணச் சாயல்களுக்கு மத்தியில், சடங்குகளுக்கும், ஆன்மீக செயல்முறையின் மையத்துக்கும் இடையிலான சமநிலை என்பது ஒரு நுட்பமான வேறுபாட்டுப் பொருளாக உள்ளது. சமகால சமூகத்தில், இவையிரண்டு நடைமுறைகளின் முக்கியத்துவத்தை வெளிச்சமிட்டுக் காட்டும் சத்குரு, இந்த இருதிசைப்பயன் விளைவினைத் தெளிவுபடுத்துகிறார்.

கேள்வியாளர்: இந்திய சமூகத்தில், சடங்குகளின் தாக்கம் அதிகரித்துள்ளதாகத் தோன்றுகையில், ஆன்மீக செயல்முறை பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. அது குறித்த உங்கள் கருத்து என்ன?

சத்குரு: ஆன்மீக செயல்முறையில் ஒரு வீழ்ச்சியையும், கண்மூடித்தனமான சடங்கியலின் அதிகரிப்பையும் குறிக்கும் அளவிடத்தக்க புள்ளிவிவரம் இல்லை. முதலில், ஒரு சடங்கு என்பது என்ன என்பதை நான் விளக்குகிறேன்.

காலையில் உங்கள் பற்களைத் தேய்ப்பது ஒருவிதமான சடங்கு. ஒரு குழந்தையாக, உங்கள் பற்களைத் தேய்க்கும் விருப்பம் உங்களுக்கு இல்லாமல் இருந்திருக்கலாம், ஆனால் உங்கள் தாய் அதனை வலியுறுத்தினார். காலப்போக்கில், அதை நீங்கள் ஏற்றுக்கொண்டு, உங்கள் தினசரி வழக்கத்தின் ஒரு பகுதியாக்கிக்கொண்டீர்கள். அது ஒரு நல்ல தினசரி சடங்கு. அதைப்போலவே, நாம் அவைகளைச் செய்யவில்லை என்றால், நமது பற்கள் விழுந்துவிடக்கூடும் அல்லது சில விஷயங்களை நாம் கவனிக்கவில்லை என்றால், வேறொரு விதத்தில் நாம் சிதைந்துபோகக்கூடும் என்பதை அறிந்துகொண்டு நாம் சடங்குகளை விழிப்புணர்வுடன் உருவாக்கி, அவற்றை வழக்கமாக்கிக் கொண்டோம்.

உங்கள் பற்களைத் தேய்ப்பது உங்களுக்கு உபயோகமானது என்று அறிந்துகொண்டு விழிப்புணர்வுடன் செய்யலாம் அல்லது உங்களிடம் உங்கள் தாய் கூறினார் என்பதால் மட்டும் அதைச் செய்யலாம் என்ற தேர்வு உங்களுக்கு உள்ளது. ஒரே விஷயத்தைச் செய்வதற்கு இரண்டு வெவ்வேறு அணுகுமுறைகள் உள்ளன, ஆனால் பலன் ஒன்றுதான். சடங்குகள் அதைப் போன்றவையே.

மாறாக, பெருந்திரளான குழுக்களுக்கு மிக நீண்ட நேரங்கள் நீடிக்கும் நடைமுறைக்கு ஒத்துவராத தியானத்தன்மையான செயல்முறைகள், அதிகமும் உள்தன்மை கொண்டவை என்பதுடன் அவைகளை தனிப்பட்ட முறையில் கற்றுக்கொடுக்க வேண்டியுள்ளது. ஆனால் ஒரு சடங்கில், அதைப்பற்றி எதுவும் அறிந்துகொள்ளாமல் அதிக எண்ணிக்கையிலான மக்களும் பங்கேற்கமுடிவதுடன், அது நேர்மையாக நடத்தப்பட்டால் அனைவரும் அதிலிருந்து பலனடைவார்கள். சடங்குகளுடன் பிரச்சனை என்னவென்றால், காலப்போக்கில், எப்போதும் அவைகளை நடத்தியவர், மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கான ஒரு வழியாக அவற்றைப் பார்த்து, அதனால் சடங்குகளை துஷ்பிரயோகம் செய்து, அவதூராக்கி, வர்த்தரீதியாக்கிவிட்டனர்.

சடங்குகள் திறன் மிகுந்த செயல்முறைகளாக இருப்பது ஏனென்றால், அவைகளை பெருந்திரளான மக்களுக்கு வழங்க முடிகிறது.

சடங்குகளால் மக்களுக்கு பயன் இல்லை என்பது கிடையாது. நேர்மையில்லாமைதான் பிரச்சனையாக இருக்கிறது. ஈஷாவில், முதல் 24 வருடங்களுக்கு, நாம் எந்த சடங்குகளையும் வழங்கவில்லை. ஒரு குறிப்பிட்ட நிலையில் இருக்கும் நேர்மையான மக்களை நாம் உருவாக்க விரும்பிய காரணத்தால், நாம் சடங்குகளை விலக்கினோம். நேர்மை உணர்வுடனும், எந்த சூழலிலும் எதையும் தவறாகப் பயன்படுத்தாத மக்களையும் நாம் கண்டுவிட்டதும், மக்கள் மீது ஒரு அளப்பரிய தாக்கத்தை ஏற்படுத்தும் சடங்குகளை, அறிவியல்பூர்வமான செயல்முறைகளாக நாம் அறிமுகப்படுத்தினோம்.

ஒரு சடங்குக்கு, அதன் பங்கேற்பாளர்கள் அதைப்பற்றி எதையும் புரிந்துகொள்ள வேண்டிய தேவையில்லை; அவர்கள் பங்கேற்பது மட்டுமே போதுமானது. ஆனால் ஒருவரை தியானத்தன்மை அடையச் செய்வதற்கு, அவர்கள் அதைப்பற்றி சிறிது புரிந்துகொள்ளத் தேவைப்படுவதுடன், அந்த செயல்முறைக்குள் செல்வதற்கு அவர்கள் போதிய விருப்பத்துடன் இருக்கவேண்டியுள்ளது. தியானத்தைப் போன்ற அதே தன்னிலை மாற்றத்தின் தாக்கம் இல்லாமல் போகலாம் என்றாலும், சடங்குகள் திறன் மிகுந்த செயல்முறைகளாக இருப்பது ஏனென்றால், அவைகளை பெருந்திரளான மக்களுக்கு வழங்க முடிகிறது.

நமது தற்போதைய, சுமார் 140 கோடி மக்கள்தொகையில், 40 கோடி மக்களுக்கு சிறந்த உணவை நாம் வழங்கிவிட்டு, மீதமிருக்கும் 100 கோடி மக்களை பசியோடிருக்க விடலாமா? அல்லது குறைந்தபட்ச அடிப்படை உணவாவது எல்லா 140 கோடி மக்களையும் சென்றடைவதை உறுதிசெய்வது மேலானதா? எது மேலானது என்று நீங்கள் எண்ணுகிறீர்கள்?

சடங்கானது ஒரு குறைந்தபட்சமான அளவிலேனும், அனைவரையும் சென்றடைந்து, தொடுகிறது. அவர்கள் அனைவரையும் தியானத்தன்மை அடையச் செய்யவேண்டும் என்றால், அனைவரும் கண்ணின் கருவிழிகள் மேலே உருள உட்காருகின்றனர். இதைத்தான் நான் 25 வயதாக இருந்தபோது செய்துவிடலாம் என்று நினைத்தேன். அப்போதிருந்து, நான் விவேகமாகியுள்ளேன். ஆன்மீக செயல்முறைகள் பின்னுக்குத் தள்ளப்படவில்லை. அநேகமாக மனிதகுல வரலாற்றில் இந்த பூமி மீது இவ்வளவு எண்ணிக்கையிலான மக்கள் இன்றைக்கு யோகப் பயிற்சி செய்வதைப்போல், இதற்கு முன்னர் ஒருபோதும் செய்ததில்லை.

உலகம் அனைத்திலும், எண்ணிலடங்கா மக்கள் குறைந்தபட்சம் தங்களது கண்களை மூடி, ஏதோ ஒருவிதமான யோகா செய்வதற்கு முயற்சிக்கின்றனர். இதன் ஒரு பகுதியாக, இந்த வருட இறுதிவாக்கில், நாம் “மனதின் அற்புதம்” என்ற ஒன்றை ஆரம்பிக்கப் போகிறோம். குறைந்தபட்சம் 30 கோடி மக்கள் தினமும், தங்கள் கண்களை மூடி ஒரு எளிமையான யோக செயல்முறையை செய்வதற்கு நாம் விரும்புகிறோம். தினமும் 30 கோடி மக்கள், 15 நிமிடங்களுக்கு தங்கள் கண்களை மூடினால், ஒரு வித்தியாசமான மனிதகுலத்தை நீங்கள் பார்ப்பீர்கள்.