நடப்புகள்

சத்குருவைத் தொடருங்கள்

உயர்பதவியில் உள்ள அரசாங்க அதிகாரிகளுக்கான
யோகா நிகழ்ச்சி

பிப்ரவரி 2

கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெற்ற இன்னர் இஞ்சினியரிங் ரெட்ரீட் நிகழ்ச்சியில் உயர் பதவியில் உள்ள அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் மனித விழிப்புணர்வு, சமூக நல்வாழ்வு மற்றும் கல்வி பற்றிய உரையாடலை சத்குரு நடத்தினார். அளப்பற்ற பொருளாதாரம் இருக்கும்போதிலும், மனநலப் பிரச்சனைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நவீன சமுதாயத்தின் முரண்பாட்டை அவர் சுட்டிக்காட்டினார்.

வாழ்க்கையின் அழுத்தங்களைச் சமாளிப்பதற்கு தனிமனிதர்கள் போதை வஸ்துகளை நாடுவது என்பது மிகுந்த அபாயமான விஷயம் என்று எச்சரித்த சத்குரு, மனித விழிப்புணர்வை உயர்த்துவதன் அவசியத்தை வலியுறுத்தினார். மனிதகுலத்தின் இணக்கமான எதிர்காலத்திற்கான முக்கிய அம்சமாக, இந்திய நாகரிகத்தால் முன்வைக்கப்பட்ட அனைத்தையும் அரவணைக்கும் தன்மையை சத்குரு அடிக்கோடிட்டுக் காட்டினார். இதன்மூலம், தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு இடையில் உள்நிலை வளர்ச்சி புறக்கணிக்கப்படுவது குறித்து கலந்துரையாடல் திரும்பியது.

சுற்றுச்சூழல் மற்றும் மண் பாதுகாப்பின் முக்கியத்துவம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த சத்குரு, மண் அழிவை சரிசெய்யும் நோக்கத்தில் உலகளாவிய அளவில் 'மண் காப்போம்' இயக்கம் செயல்படுவதைப் பற்றி குறிப்பிட்டார். தற்போதைய கல்விமுறையில் அனைவருக்கும் ஒரே அணுகுமுறை (one-size-fits-all approach) இருப்பது பற்றி விமர்சித்த சத்குரு, குழந்தைகளின் இயற்கையான வளர்ச்சியையும் நல்வாழ்வையும் மலரச் செய்யக்கூடிய, உகந்த ஒரு சூழலை ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

நிகழ்ச்சி முடியும் தருவாயில், குறிப்புகளுடன் கூடிய ஒரு தியானத்தை சத்குரு வழங்கினார். பங்கேற்பாளர்கள் தாங்கள் நிகழ்ச்சியின்போது பெற்ற ஆழமான கருத்துகளுக்காகவும் அனுபவங்களுக்காகவும் தங்கள் நன்றியை வெளிப்படுத்தினர்.

சத்குருவுடன் டேனிஷ் தூதர் எதிர்காலத்தின் பசுமைச்சூழல் குறித்து கலந்துரையாடல்

பிப்ரவரி 9

டெல்லியில் நடந்த நுண்ணறிவுமிக்கதொரு கலந்துரையாடலில், சத்குருவும் இந்தியாவுக்கான டேனிஷ் தூதர் ஃப்ரெடி ஸ்வனும், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, பொறுப்பான மக்கள்தொகை வளர்ச்சி மற்றும் தனிமனித மாற்றம் குறித்து கலந்துரையாடினர். மனிதனின் அதிகப்படியான நுகர்வின் காரணமாக ஏற்படும் கடுமையான பாதிப்பைக் கருத்தில்கொண்டு, தனிமனித விழிப்புணர்வின் மாற்றத்தின் மூலம் சுற்றுச்சூழல் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் அவசியத்தை சத்குரு வலியுறுத்தினார்.

நம் வாயை சுத்தப்படுத்தும்போது குறைந்தபட்ச நீரைப் பயன்படுத்துவது போன்ற செயல்களின் சிறிய அளவிலான தாக்கத்தை எடுத்துக்காட்டி, குடிமக்களின் பொறுப்புகள் ஆழமான சுற்றுச்சூழல் நெருக்கடிகளைச் சமாளிக்க எவ்வாறு துணைநிற்கும் என்பதை அவர் விளக்கினார். உயிர்கள் வாழ அவசியமான ஒளிச்சேர்க்கையின் பங்கை அடிக்கோடிட்டுக் காட்டிய சத்குரு, பருவநிலை மாற்றத்திற்கு எதிரான ஒரு முக்கியமான படியாக, பூமியின் பசுமைப்பரப்பை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

செயற்கை நுண்ணறிவு போன்ற மேம்பட்ட தொழில்நுட்பத்தின் நன்மைகளைப் பற்றி உயர்வாக பேசிய சத்குரு, உலகளாவிய பிரச்சனைகளின் மையமாக குன்றிய தனிமனித விழிப்புணர்வு இருப்பதை சுட்டிக்காட்டினார். நிலையான எதிர்காலத்திற்கு பிரதானமான "ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்" என்ற G20 மாநாட்டின் மையக்கருவை சத்குரு ஆதரித்து தனது உரையை நிறைவுசெய்தார்.

பொருள்வளத்தில் இருந்து உள்நிலை வரை: உலகளாவிய வணிகம் மற்றும் நல்வாழ்வு பற்றி சத்குரு

பிப்ரவரி 10

ET Nowன் 8வது குளோபல் வணிக உச்சி மாநாட்டில் சத்குரு சிறப்புரை ஆற்றினார். டெல்லியில் டைம்ஸ் குழுமத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, எதிர்காலத்திற்கான சிந்தனைகள் மற்றும் செயல்களைப் பற்றி விவாதிக்க உலகளாவிய தலைவர்களையும் வல்லுனர்களையும் ஒன்றிணைக்கும் ஆசியாவின் முதன்மையான சந்திப்புக் கூட்டங்களில் ஒன்றாகும்.

உலகளாவிய வணிகங்களில் தனிமனித லட்சியத்தால் இயக்கப்படுவதற்கும், ஒரு பெரிய தொலைநோக்குப் பார்வையால் வழிநடத்தப்படும் வணிகங்களுக்கும் இடையே உள்ள முக்கியமான வேறுபாட்டை சத்குரு விளக்கினார். கடந்தகால நிறுவனங்களின் அபரிமிதமான வளம், இன்றைய தலைசிறந்த நிறுவனங்களின் திறன்களை குன்றச் செய்ததாக அவர் கடந்தகால வரலாற்றைப் பற்றி பேசினார். போட்டி மனப்பான்மையில் இருந்து ஒத்துழைக்கும் தன்மைக்கு மாறாமல், வணிகங்கள் உலகளாவியது என்று கூறமுடியாது என்று அவர் எச்சரித்தார்.

நல்வாழ்வு பற்றி உரையாற்றிய சத்குரு, பொருளாதாரத்தில் முன்னேறியபோதிலும், மனிதகுலத்தின் உள்நிலை நல்வாழ்வு மேம்படவில்லை என்று கூறி, ஒன்றை தன்னுடைய உடைமை ஆக்கிக்கொள்வதில் சௌகரியம் இருந்தாலும், உண்மையான நல்வாழ்வு உள்நிலையில்தான் உருவாகிறது என்பதை அவர் எடுத்துரைத்தார். பொருள்நிலை வெற்றியைவிட உள்நிலை அமைதி, ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியின் முக்கியத்துவத்தை உணர்வதன் அவசியம் குறித்து அவர் வலியுறுத்தினார்.

அதன்பின்னர், மனிதகுலத்தின் மகிழ்ச்சிக்கான தேடலில் பூமியின் மீது அதிகப்படியான சுரண்டல் நடப்பதைப் பற்றி குறிப்பிட்ட சத்குரு, நல்வாழ்வுக்காக இரசாயனங்களை நம்பியிருக்கும் ஆபத்தான போக்கையும் சுட்டிக்காட்டினார். திறன்கள் குறைந்த வருங்கால சந்ததியினரை உருவாக்குவதைத் தவிர்க்க, வாழ்க்கையில் ஒரு விழிப்புணர்வான, உள்நிலையில் கவனம் செலுத்தும் அணுகுமுறையை அவர் வலியுறுத்தினார். மனித உடல் ஒரு சக்திவாய்ந்த இரசாயனத் தொழிற்சாலை என்பதை எடுத்துரைத்து, ஈஷா யோகா போன்ற பயிற்சிகள் மூலம் ஒருவர் தனது உள்நிலை இரசாயனத்தை தன் ஆளுமைக்கு கொண்டுவருவது, இயற்கையாகவே ஆனந்தமான நிலையை அனுபவிப்பதற்கு வழிவகுக்கும் என்று அவர் பரிந்துரைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, "இது இந்தியாவின் நேரம்" என்றும், "கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா எவ்வாறு மாறியுள்ளது என்பதை உலகின் பல்வேறு வளர்ச்சி சார்ந்த நிபுணர் குழு விவாதித்து வருகிறது" என்றும் கூறினார். மேலும், "உறுதி, நிலைத்தன்மை மற்றும் தொடர் செயல்பாடு ஆகியவை நமது ஒட்டுமொத்த கொள்கையிலும் முதன்மையாக கவனிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இராணுவத்திற்கு யோகா: தென்னகப் படை வீரர்கள் நல்வாழ்வுக்கான ஒரு முன்னெடுப்பு

பிப்ரவரி 16

ஆகஸ்ட் 15, 2023 அன்று இந்தியாவின் சுதந்திர தினத்தன்று தொடங்கப்பட்ட இந்த இராணுவ யோகா முன்னெடுப்பு, தென்னக இராணுவப் படை மற்றும் ஈஷாவின் ஒரு கூட்டு முயற்சியாகும். இது சுமார் 11,000 வீரர்களுக்கு அடிப்படை யோகப் பயிற்சியை வழங்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 58 சான்றளிக்கப்பட்ட பயிற்றுநர்களால் 23 இடங்களில் 125 நிகழ்ச்சிகள் மூலம் யோகா வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்தத் திட்டம் கடுமையான இராணுவ சேவையை கையாள்வதில் வீரர்களுக்கு ஆதரவளிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. HDFC பரிவர்தனின் CSR முன்னெடுப்பு இந்த திட்டத்திற்கு தனது ஆதரவை வழங்கியது.

மஹாராஷ்டிராவின் புனேவில் உள்ள தென்னகப் படையில், லெப்டினன்ட் ஜெனரல் அஜய் குமார் சிங் அவர்கள் நிகழ்வைத் தொடங்கிவைத்து, இந்த முன்னெடுப்பை பாராட்டினார். தென்னகப் படை வீரர்களுக்கு இந்த முன்னெடுப்பு கொண்டுவரும் நேர்மறையான மாற்றங்களைப் பற்றி அவர் எடுத்துரைத்தார்.

சத்குரு தனது உரையில், ராணுவ வீரர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களை எடுத்துரைத்ததோடு, அவற்றை எதிர்கொள்ளும்போது சமநிலையைப் பேணுவதற்கான வழிகாட்டுதலையும் வழங்கினார். சவால்கள் உலகளாவியவை என்பதால், எந்தவொரு குறிப்பிட்ட வாழ்க்கைச் சூழலையும் மிகவும் கடினமான ஒன்றாகப் பார்க்காமல் இருப்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். குடிமக்கள் வாழ்க்கைக்கு வீரர்கள் மாறுவதன் முக்கியத்துவத்தையும் சத்குரு விவாதித்தார். கட்டுப்பாடுகள் குறைந்த வெளியுலகத்திற்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்வதற்கு பயிற்சி பெறுவது பெரிதும் பயனளிக்கும் என்று அவர் பரிந்துரைத்தார்.

குழந்தை வளர்ப்பு பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், பெற்றோர்கள் நண்பர்களாக இருக்க வேண்டும், தங்கள் குழந்தைகளுக்கு முதலாளிகளாக நடந்துகொள்ளக் கூடாது, மனம் திறந்து பேசும் சூழலை வளர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். வருங்கால சந்ததிகளுக்கு அறிவுரை வழங்குவதைத் தவிர்த்த சத்குரு, வாழ்க்கைத் தரத்தின் முக்கியத்துவத்தையும், புத்திசாலித்தனமான தேர்வுகளைச் செய்வதையும் பற்றி வலியுறுத்தினார். இராணுவத்தின் மருத்துவப் படையின் வீரர்கள் போர் அனுபவத்தைப் பெறவேண்டிய அவசியமில்லை, அதற்கு பதிலாக பல்வேறு நன்மை பயக்கும் வழிகளில் சமுதாயத்திற்கு சேவை செய்யமுடியும் என்று நம்பிக்கையை வெளிப்படுத்தி நிறைவுசெய்தார்.

நிகழ்ச்சியின் நிறைவாக, லெப்டினன்ட் ஜெனரல். அஜய் குமார் சிங் அவர்கள் சத்குருவிற்கு ‘குக்ரி' எனும் பாரம்பரிய கத்தியை நினைவுச் சின்னமாக வழங்கினார்.

சத்குருவுடன் பெங்களூரு IIM மாணவர்கள் இணைந்த "Youth and Truth"

பிப்ரவரி 25

"Youth and Truth" முன்னெடுப்பின் புதியதொரு நிகழ்வுக்காக ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு பெங்களூரு IIM நிறுவனத்திற்கு சத்குரு மீண்டும் வந்தார். நிகழ்வின்போது, தனது ஆழ்ந்த ஞானத்தாலும், நகைச்சுவை உணர்வாலும் மாணவர்களை அவர் ஈர்த்தார்.

போட்டி நிறைந்த கல்விச் சூழலைப் பற்றிய அவர்களின் கவலைகளை நகைச்சுவையாக எடுத்துரைத்த சத்குரு, முதல் மாணவராக வரவேண்டும் எனப் பாடுபடுவது வாழ்க்கையில் நிறைவான ஒரு அணுகுமுறையாக இருக்காது என்பதை மாணவர்களுக்கு நினைவூட்டினார். ஒவ்வொரு தனிநபரின் தனித்துவத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிக்கூறி, ஒரே மாதிரியான செயல்பாட்டில் அனைவரும் சிக்கிக்கொள்வதை விடுத்து, ஒருவரின் சுய திறன்களை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். விரைவாக மாறும் காலத்தின் இயல்பு பற்றிய ஆழமான நுண்ணறிவுகளை மாணவர்களுடன் பகிர்ந்துகொண்ட அவர், வாழ்வாதாரத்தை உருவாக்குவதை மட்டும் கருத்தில் கொள்ளாமல், வாழ்க்கையை உருவாக்கவும், மனிதர்களாக தங்களின் முழுத்திறனையும் அறிந்துகொள்ளவும் வேண்டும் என்று புரியவைத்தார்.

ஒன்றை இழந்துவிடுவோமோ என்ற ஒருவித மனபயம்(FOMO) மற்றும் தொழிலைத் தேர்ந்தெடுப்பதில் உள்ள மனஅழுத்தத்தை சரிசெய்யும் விதமாக, மனஅழுத்தம் என்பது ஒரு மனநிலை என்றும், ஆனந்தம் என்பது வெளிசூழலில் இருந்து பெறமுடியாது என்றும் சத்குரு விளக்கினார். உளவியல் தன்மையை நம் கையில் எடுக்கும்படி வலியுறுத்திய சத்குரு, நமது மூளை, அசாதாரணமான விஷயங்களைச் செய்யும் திறன் கொண்ட குறிப்பிடத்தக்க ஒரு அங்கமாக இருக்கும்போதிலும், பெரும்பாலானவர்களுக்கு அது துன்பத்தின் ஆதாரமாக மாறிவிடுவதை அவர் எடுத்துரைத்தார். ஒருவரின் உளவியல் நிலையை நேர்மறையாக வைத்திருப்பது என்பது, தனிப்பட்ட நல்வாழ்வுக்கு முக்கியமானது என்று அவர் பரிந்துரைத்தார்.

தலைமைப் பண்பு குறித்து பேசும்போது, ஒரு தலைவரிடத்தில் மனஅழுத்தமும் பதற்றமும் அவரது திறமையின்மையை காட்டுவதாக அவர் கூறினார். மனஅழுத்தம் மற்றும் பயத்திற்கு பதிலாக மகிழ்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மையுடன் சூழ்நிலைகளை கையாள்வதில் தலைமை ஈடுபட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். நிறைவாக, ஒருவரின் செயல்திறனையும் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்த உள்நிலை அமைதி மற்றும் ஆனந்தத்தின் முக்கியத்துவத்தை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். தனக்கே உரிய நகைச்சுவை உணர்வும் ஆழமான பார்வைகளும் ஒன்றிணைந்தபடி, வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்வதற்கும், திறமையான தலைவர்களாக மாறுவதற்கும் உள்நிலை மாற்றமே முக்கியம் என்பதை உணர்த்தும் செய்தியை மாணவர்களுக்கு சத்குரு அளித்தார்.

அடுத்து வந்த கேள்வி-பதில் நிகழ்ச்சியில், தொழில்முனைவோர் ஆவதற்கும் பாதுகாப்பான ஒரு பணியில் இருப்பதற்கும் இடையே எதைத் தேர்ந்தெடுப்பது, பொருள் சம்பாதிப்பதை விட வாழ்க்கையை உருவாக்குவதன் முக்கியத்துவம் மற்றும் மகிழ்ச்சி, துன்பத்தை உருவாக்கும் உள்தன்மை உள்ளிட்ட, பல்வேறு கேள்விகளுக்கு சத்குரு பதிலளித்தார். அதிகப்படியான நுகர்வையும் அதன் சுற்றுச்சூழல் தாக்கத்தையும் சாடிய சத்குரு, மனநலம் மற்றும் உள்நிலை கொந்தளிப்பு பற்றி பேசும்போது, உணர்ச்சி சிக்கல்களைக் கடந்து வாழ்க்கையில் தீவிரமாக ஈடுபடுவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். மேலும், வேலை மற்றும் தனிப்பட்ட உறவுகளுக்கு இடையில் சமநிலையை நிறுவுவதன் அவசியத்தையும் அவர் அறிவுறுத்தினார். கல்வி சீர்திருத்தம், எதிர்காலத்தில் AIன் தாக்கம், முன்னரே தீர்மானிக்கப்பட்ட தலைவிதி மற்றும் முழுஈடுபாட்டுடன் முயற்சிகளில் ஈடுபடுவதன் முக்கியத்துவம் ஆகியவற்றைப் பற்றி அவர் பேசினார்.

சமீபத்திய பிற நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகள்:

கலை நிகழ்ச்சிகளுடன் ஈஷா அவுட்ரீச்சின் கல்வி உதவித்தொகை

பிப்ரவரி 25

கோவை ஈஷா யோக மையத்திற்கு அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த கிராமப்புற மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு, உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியை ஈஷா அவுட்ரீச் ஏற்பாடு செய்தது. நிகழ்வின்போது, பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம் மற்றும் களரி பயாட்டு ஆகியவற்றில் தங்கள் திறமையை மாணவர்கள் வெளிப்படுத்தினர். ஈஷாவின் அர்ப்பணிப்புள்ள கிராமப்புற மற்றும் பழங்குடியினர் நலக்குழு வழங்கிய தொடர் பயிற்சியின் மூலம், தாங்கள் வளர்த்துக்கொண்ட திறமைகளை அவர்கள் அங்கே அரங்கேற்றினர்.