"வெள்ளியங்கிரி, சிவனே வந்து அமர்ந்தருளிய மலை. பல மகத்தான யோகிகள், சித்தர்கள், அனைவருக்கும் மேல் எனது தெய்வீக குரு, தங்களது புனிதமிக்க ஞானத்தை இச்சிகரங்களில் பொதிந்தனர். இந்த அருளின் அருவி தன்மீது இறங்க அனுமதிக்கும் ஒருவர், எப்படியும் அனைத்தையும் கடந்த மறு கரைக்கு சேர்க்கப்படுவார். "
வெள்ளியங்கிரி மலைகளின் ஏழாவது மலை உச்சியில் உள்ள சிவன் கோயிலுக்கான பாதை ஒரு காலத்தில் இயற்கை எழில் சூழ்ந்ததாக இருந்தது. எனினும், சமீப ஆண்டுகளில் அது, பக்தர்கள் விட்டுச்சென்ற கழிவுகள் நிறைந்த தடமாக மாறியுள்ளது.
ஒவ்வொரு வருடமும், கோயிலுக்கு வருகை தரும் லட்சக்கணக்கான பக்தர்கள், கோயில் வளாகம் மற்றும் காட்டுப் பாதைகளில் விட்டுச் செல்லும் குப்பைகள்,சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. மலைகளின் தூய்மையான சுற்றுச்சூழலையும் அவற்றின் புனிதத்தன்மையையும் பாதுகாக்கத் தூய்மைப் பணிகள் அவசியமாகின்றன.
"கொடுப்பதற்காக உங்கள் இதயத்தை மனமுவந்து திறக்கும்போது, தெய்வீகத்தின் பேரருள் உங்களுக்குள் ஊடுருவும்."
அருள் மிகுந்த வெள்ளியங்கிரி மலைகளின் தூய்மையைப் பராமரிக்கவும் அதன் இயற்கை சூழல் மற்றும் புனித தன்மையைப் பேணிக் காக்கவும் உங்களின் நன்கொடைகள் மூலம் உதவுங்கள்.