"கொடுப்பதற்காக உங்கள் இதயத்தை மனமுவந்து திறக்கும்போது, தெய்வீகத்தின் பேரருள் உங்களுக்குள் ஊடுருவும்."
வெள்ளியங்கிரி மலைகளை தூய்மையாக வைத்திருக்கவும், இயற்கை சூழலைப் பாதுகாக்கவும், அவற்றின் புனிதத்தன்மையை நிலைநிறுத்தவும், மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தென்கைலாய பக்தி பேரவை வருடாந்திர தூய்மைப்படுத்துதல் இயக்கத்தை நடத்துகிறது.
கோடைக் காலத்தில், சிவாங்கா தன்னார்வலர்கள் கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் அனைவர்க்கும் இலவச மோர் வழங்குகின்றனர். இது வெப்பத்தை சமாளிக்கவும், உடலில் நீர்ச்சத்தைப் பராமரிக்கவும் மேலும் சக்தியுடன் இருக்கவும் உதவுகிறது.
சிவாங்கா செயல்பாடுகள் மற்றும் அர்ப்பணங்களில் ஈடுபடும் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு அன்னதானம் வழங்கி, அவர்களின் ஆன்மீகப் பயணத்தில் உங்களின் பங்களிப்பைச் செய்திடுங்கள்.
பக்தர்கள் அருள் பெற உதவும் வகையில், சிவாங்கா சாதனா, சிவாங்கா தெம்பு, கைலாய வாத்யம் மற்றும் சிவ யாத்திரை ஆகிய பல்வேறு ஆன்மீக அர்ப்பணங்கள் சிவாங்கா குழுவினரால் வழங்கப்படுகின்றன.