கைலாய வாத்யம் தமிழ்நாட்டிற்கு வந்ததன் முக்கிய காரணம் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான அப்பர் (தமிழ் சைவ சமயக்குரவர்கள்) தான்.
திருநாவுக்கரசர் என்றும் அழைக்கப்பட்ட அப்பர், பல சிவன் கோயில்களுக்கும் பயணித்து சிவனைப் பற்றி பக்தியாழமிக்க பாடல்களைப் பாடினார். சுமார் 80 வயதில், அவருக்கு கைலாய மலையைத் தரிசிக்க வேண்டும் என்ற வலுவான ஆசை ஏற்பட்டது. அவரின் உடல் பலவீனமாக இருந்தபோதிலும், களைத்து விழும் வரை உள்ள உறுதியோடு அவர் நடந்தும், தவழ்ந்தும், உருண்டும் கூடச் சென்றார்
சிவபெருமான் ஓர் முதிய துறவி உருவில் அப்பர் முன் தோன்றி, கைலாயத்தில் சிவனைக் காண முடியாது என்று கூறி திரும்பிச் செல்லுமாறு அறிவுறுத்தினார். ஆனால் அப்பரோ உறுதியாக, "நான் சிவனின் தரிசனத்தைப் பெறுவேன், அல்லது இங்கேயே உயிர் விடுவேன்!" என்றார். சிவபெருமான் அப்பரை அருகிலுள்ள குளத்தில் மூழ்கி எழுந்து புத்துணர்வு பெறும்படி சமாதானம் செய்தார். குளத்தில் மூழ்கிய அப்பர் ஆச்சரியம் பொங்க திருவையாற்றில் மீண்டெழுந்து, தான் ஏங்கிய தரிசனத்தையும் பெற்றார். விலங்குகள், பறவைகள், மரங்கள் என யாவற்றிலும் சிவசக்தியின் இருப்பை உணர்ந்தார் - இதுவே கைலாய வாத்யத்தின் தோற்றத்திற்கு வழிவகுத்தது.
கைலாய வாத்யம் இன்று தமிழகத்தின் பல சிவன் கோயில்களிலும் இசைக்கப்படுகிறது.
ஒலிகளின் முக்கியத்துவம்யோக கலாச்சாரத்தில், ஒலிக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு, இது விழிப்புணர்வை மேம்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது. எப்போதும் மென்மையானதாக இல்லாவிட்டாலும், சில ஒலிகள் ஒருவரின் உடல் மற்றும் மன அமைப்பில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். உதாரணமாக, ஒரு எளிய மத்தள அடி கூட ஒருவருக்குள் பேரானந்தத்தைத் தூண்டக்கூடும். கைலாய வாத்யம் என்பது, ஒருவர் தன் சிவத் தன்மையை உணர உதவும் பழமையான, சக்திமிக்க இசைக்கருவி ஒலிகளின் அர்ப்பணிப்பாகும்.
இப் பழமைமிகு செய்முறையை மீண்டும் உயிர்ப்பிக்க, சிவாங்கா குழுவினர் தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு சிவன் கோயில்களில் கைலாய வாத்யம் நிகழ்த்துகின்றனர். மேலும் விவரங்களுக்கு, தயவுசெய்து எங்களுக்கு info@shivanga.org என்ற முகவரிக்கு எழுதுங்கள். தலைப்பு வரியில் "கைலாய வாத்யம்" என்று குறிப்பிடவும்.