சிவாங்கா சாதனா

ஆண்கள் மற்றும் பெண்கள், இருபாலருக்கும் வழங்கப்படுகிறது*

*வெள்ளியங்கிரி யாத்திரை ஆண்களுக்கு மட்டுமே

"நீங்கள் இந்த சாதனாவை புனிதமாகப் பேணி உங்களையே அதற்கு முழுமையாக வழங்கினால், அது உங்களுக்கு அற்புதங்களை நிகழ்த்தும்."

சிவாங்கா சாதனா என்றால் என்ன?

divider

சத்குருவால் வடிவமைக்கப்பட்டுள்ள சிவாங்கா சாதனா என்பது, நம் உள்ளத்தின் பக்தியை வெளிப்படுத்தும் விதமாகவும், ஆதியோகியாம் சிவனின் அருளை கிரகிக்கக்கூடிய நமது திறனை மேம்படுத்தும் விதமாகவும் வழங்கப்படும் ஒரு சக்திவாய்ந்த சாதனா.

42 நாட்கள், 21 நாட்கள், 14 நாட்கள் அல்லது 7 நாட்களுக்கு சிவாங்கா சாதனாவை நீங்கள் மேற்கொள்ள முடியும்.

தீட்சை ஆன்லைனிலும் நேரிலும் வழங்கப்படும்

நீங்கள் தேர்ந்தெடுக்கும் நாட்களுக்கு, வீட்டில் இருந்தபடியே சாதனாவை மேற்கொண்டு, ஆன்லைனில் நிறைவு செய்யலாம் அல்லது ஈஷா யோக மையத்திற்கு நேரில் வந்து நிறைவு செய்ய முடியும்.

சிவாங்கா சாதனாவின் பலன்கள்

divider
தன்னை உணர்தலுக்கான உடல்நிலை, மனநிலை மற்றும் சக்திநிலையில் உறுதியான அடித்தளத்தை உருவாக்குகிறது.
உங்கள் வாழ்க்கையில் ஆதியோகி-சிவனின் அருளை ஒரு வழிகாட்டியாகவும், நிலையான ஒரு துணையாகவும் ஆக்குகிறது.
குறிப்பிட்ட நெறிமுறைகளைப் பின்பற்றி சாதனா மேற்கொள்வதால், வாழ்க்கையில் நல்ல பழக்கங்களைக் கடைபிடிக்க வழிவகுக்கிறது.

Glimpses

divider

சிவாங்கா சாதனாவின் முக்கிய அம்சங்கள்:

divider
சக்திவாய்ந்த சிவ நமஸ்காரம் பயிற்சிக்கான தீட்சை.
தென்கைலாயம் எனப் போற்றப்படும் வெள்ளியங்கிரி மலைகளுக்கு புனித யாத்திரை (ஆண்களுக்கு மட்டும்)
உள்ளத்தில் பக்தியை ஊற்றெடுக்கச் செய்யும் சக்திவாய்ந்த மந்திர உச்சாடனம்

சாதனா விவரங்கள்

divider
தகுதி: ஆண்களுக்கும் பெண்களுக்கும் வழங்கப்படுகிறது (8 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு)

தீட்சை

  • ஜனவரி 13 முதல் மே 25 வரை தினமும்

  • பயிற்சிபெற்ற சிவாங்கா ஒருவர் சாதனாவிற்கான தீட்சை நிகழ்வை நடத்துவார்.

  • ஆன்லைனில் அல்லது நேரில் நீங்கள் பங்குபெறலாம்

சிவாங்கா சாதனா கிட்

தீட்சைக்குத் தேவையான பொருட்களின் பட்டியல் கீழே உள்ளது.அவற்றை நீங்களே ஏற்பாடு செய்யலாம் அல்லது இங்கே வாங்கலாம்:

  • ஒரு தியானலிங்க புகைப்படம் - இங்கே டவுண்லோட் செய்ய முடியும்.

  • கையில் கட்டுவதற்கான ஒரு கருப்பு துணி (தோராயமாக 18 x 3 இன்ச்)

  • சக்திவாய்ந்த தியானலிங்க லாடருடன் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட 21 மணிகள் கொண்ட சிவாங்கா ருத்ராட்ச மாலை, பஞ்சமுகி ருத்ராட்ச மாலை, ஆதியோகி ருத்ராட்ச மணி (ருத்ராட்ச தீட்சையின் ஒரு பகுதியாகப் பெறப்பட்டது), ஒற்றை மணி ருத்ராட்சம் அல்லது ஏதேனும் ஒரு ருத்ராட்ச மாலை

  • பிக்‌ஷா பாத்திரம்: (ஆண்களுக்கு)

  • விபூதி

ஆன்லைன் தீட்சைக்காக ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளதா? இங்கே இணையுங்கள்

சாதனா வழிகாட்டுதல்கள்

கால அளவு

42, 21, 14 அல்லது 7 நாட்களுக்கு சாதனாவை மேற்கொள்வதற்கு நீங்கள் தேர்வு செய்யலாம்.

பயிற்சி

  • தீட்சையின்போது கற்பிக்கப்படும் சிவ நமஸ்காரம் பயிற்சியை, ஒரு நாளைக்கு 12 அல்லது 21 முறை, சூரிய உதயத்திற்கு முன் அல்லது சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு, காலி வயிற்றில் பக்தியுடன் செய்ய வேண்டும்.

  • சாதனா காலத்தில், நீங்கள் மற்றவர்களை "ஷிவா" என்று அழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

  • ஆடை கட்டுப்பாடு: வெள்ளை அல்லது வெளிர்நிற ஆடைகள் (காவி). சால்வை அணிவது மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது, ஆனால் அது கட்டாயமில்லை.

  • குறைந்தபட்சம் 21 பேரிடம் பிக்‌ஷா பெற்று, சாதனா நிறைவின்போது தியானலிங்கத்திற்கு அர்ப்பணியுங்கள்.

  • ஆன்லைனில் நிறைவுசெய்யும் பங்கேற்பாளர்கள், தேவைப்படும் 3 பேருக்கு பணம் அல்லது உணவை வழங்கலாம் அல்லது அதே தொகையை மஹாசிவராத்திரி மஹாஅன்னதானத்திற்கு நன்கொடையாக வழங்கலாம்.

தயவுசெய்து கவனிக்கவும்:
குடலிறக்கம் (ஹெர்னியா) உள்ளவர்கள் ஒரு குஷன் அல்லது நாற்காலியை உதவியாகப் பயன்படுத்தி சிவ நமஸ்காரத்தின் மாறுபாடு நிலைகளில் பயிற்சி செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நிறைவு

நேரில்

  • சிவாங்கா சாதகர்கள் கோவையில் உள்ள தியானலிங்கத்திற்கு நேரில் வந்து நிறைவு செய்யலாம்.

  • அதைத் தொடர்ந்து வெள்ளியங்கிரி மலைக்கு யாத்திரை மேற்கொள்ள முடியும். உங்களால் யாத்திரை மேற்கொள்ள முடியாவிட்டால், அதற்குப் பதிலாக ஆதியோகி பிரதட்சணங்களைச் செய்யலாம்.

  • நிறைவு மற்றும் யாத்திரை தேதிகள்: பிப்ரவரி 20, 2025 முதல் மே 31 வரை ஒவ்வொரு நாளும்

  • தற்காலிக தங்குமிட வசதி வழங்கப்படும்.

  • பெங்களூரு சத்குரு சந்நிதியில் ஆதியோகி பிரதட்சணத்துடன் நிறைவு செய்யலாம்.

கட்டணம்

divider

நிறைவு செய்வதற்கான பிற வழிகள்

சிவாங்கா சாதனா கிட்:

ஈஷா லைஃப்-ல் வாங்க முடியும் அல்லது உங்கள் தீட்சைக்கு முன் பொருட்களை நீங்களே ஏற்பாடு செய்துகொள்ளலாம்.

சாதனாவின் அனைத்து கால அளவிற்கும் ஒரே விலையே உள்ளது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

divider

எங்களைத் தொடர்புகொள்ள

divider
உங்கள் சாதனாவின்போது ஏதேனும் கேள்விகள் இருந்தால், உங்கள் உள்ளூர் சிவாங்கா ஒருங்கிணைப்பாளரை அணுகவும்.

எங்களைத் தொடர்புகொள்ள:
shivanga.co/emailsupport | +9183000 83111

மேலும் விவரங்களுக்கு சிவாங்கா குறிப்பேட்டை டவுண்லோடு செய்யவும்.

Contact

Phone: +91 83000 83111

Email: info@shivanga.org

Location

Isha Yoga Center, Velliangiri Foothills,

Ishana Vihar Post, Coimbatore,

Tamil Nadu - 641114

Direction →

Social Media

  • Facebook
  • Instagram

Copyright © 2024 THENKAILAYA BAKTHI PERAVAI ALL RIGHTS RESERVED

Back to top