நடப்புகள்

சத்குருவைத் தொடருங்கள்

AIIMS புதுடெல்லியில் சத்குரு

ஜூலை 30, 2025 அன்று புகழ்பெற்ற All India institute of Medical Sciences (AIIMS), புதுடெல்லியில், சத்குரு, மருத்துவம் படிக்கும் மாணவர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடினார். சிந்தனையைத் தூண்டும் விதத்தில் அமைந்த உற்சாகமான உரையாடலில் இளம் மருத்துவர்களுக்கு தேவையான பல அத்தியாவசியமான விஷயங்களைப் பேசினார்.


மனதின் அடிப்படை தன்மை என்ன, மனிதனுக்கு கவனம் எவ்வளவு தேவையானது, மொபைல் போனுக்கு அடிமைப்பட்டு இருப்பது, ஒரு நல்ல டாக்டராக வளர ஆன்மீகப் பயிற்சி உதவுமா? - என்பது போன்ற கேள்விகளை மாணவர்கள் முன்வைத்தனர். மேலும் மருத்துவத்தில் கருணை என்பதன் பங்கு என்ன என்றும் கலந்துரையாடினார்கள்.

சத்குரு தன் இளமை காலத்தில், மருத்துவ அவசர தேவை (emergency) பிரிவில், தன்னார்வலராக தொண்டு செய்த அனுபவத்தைப் பகிர்ந்தபோது, உரையாடல் ஒரு சுவாரசியமான திருப்பத்தை எடுத்தது.  மேலும் சத்குரு, மாற்று மருத்துவ முறைகளான - ஹோமியோபதி, அக்குபங்சர் பற்றிய துறைகளைக் குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். ஜாதகம், ஜோதிடம் பற்றியும் பேசினார்.

யோக விஞ்ஞான சாரத்தை தன் சொந்த அனுபவங்களைக் கொண்டு விளக்கி நடைமுறைக்கு பொருத்தமாக சத்குரு புரியவைத்தார் - இது அனைவருக்குள்ளும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஓர் அரிய நிகழ்வு - பாரதத்தின் ஞானம்

உலக பிரசித்தி பெற்ற Electronic இசை விழாவில், 24 ஜூலை 2025 அன்று பெல்ஜியம் நாட்டின் Brussels நகரத்தில் எதிர்பாராத அற்புத சந்திப்பு ஒன்று நிகழ்ந்தது - பிரேசில் நாட்டின் DJ Alok Achkar Peres Petrillo அவர்களும் சத்குருவும் சந்தித்தனர். இந்த சந்திப்பு பாரதத்தின் ஞானமும் நவீன இசை கொண்டாட்டங்களும் இணையும் விதத்தில் தனித்துவமாக அமைந்தது.

"Tomorrowland" என்பது பெல்ஜியத்தின், "ஆண்ட்வெர்ப்" ல் உள்ள "பூம்" என்ற இடத்தில் பெரிய அளவில் நடைபெறும் ஒரு வருடாந்திர Electronic இசை விழாவாகும்.

உரையாடலின் போது, சத்குரு, "Tomorrowland" ரசிகர்களுக்கு ஒரு அடிப்படையான கேள்வியை முன்வைத்தார்: "அதிசயம் இல்லாத ஏதாவது ஒரு விஷயத்தை இங்கு எனக்கு காண்பியுங்கள்," என்றார். அனைவரும் அதை தங்கள் கைதட்டல், சிரிப்பலை, ஆரவாரத்தின் மூலம் ஆமோதித்தனர். இதை தனது வழக்கமான நகைச்சுவையுடன் விளக்கவும் செய்தார்: "உங்கள் பெற்றோர் கஞ்சத்தனமானவர்கள்.... உங்களுக்கு, பல லட்சம் செல்கள் கொடுத்திருக்க முடியும், ஆனால், ஆளுக்கு ஒரே ஒரு செல் என்ற விகிதத்தில் மட்டுமே உங்களுக்காக கொடுத்தனர். அந்த ஒரே ஒரு செல்... உங்களைப் பாருங்கள் - எப்படி ஆகிவிட்டீர்கள் - இது மாபெரும் அதிசயம் இல்லையா??!"

"நீங்கள், நான், இங்கிருக்கும் அனைத்துமே அதிசயங்கள்தான், ஆனால், துரதிர்ஷ்டவசமாக யாரும் இந்த அதிசயத்தை உணர்ந்து அனுபவிக்கவில்லை." அங்கீகாரம் அளிக்காத இந்த தன்மையே நமது இன்றைய மனநிலைக்கு காரணமாக சுட்டிக்காட்டுகிறார், இதை விளக்கும் விதமாக, "நீங்கள் யோசனைகளை ஆட்கொள்வதில்லை, மாறாக, யோசனைகள்தாம் உங்களை ஆட்கொண்டிருக்கிறது" என்றார்.

அதிசயத்துக்கு புதிய பரிமாணத்தைக் காட்டினார், "அதிசயம் என்பது என்ன?" என்று கேட்டார். "ஒன்று நடக்கும்போது, அதை நம்மால் லாஜிக் மூலம் புரிந்துகொள்ள முடியாவிட்டால், அதுவே அதிசயமாகும், இல்லையா?! என்றார்."  விழாவில் இருந்தவர்களுக்கு, அண்டப் பெருவெளியின் நிதர்சனத்தை நினைவு படுத்தினார். "இந்த பூமி எனும் வட்டமான கிரகத்தில் நாம் இப்போது அமர்ந்திருக்கிறோம். இந்த நிமிடம் இந்த பூமி ஒரு மணி நேரத்தில் பல ஆயிரம் மைல் தூரம் சுற்றிக்கொண்டிருக்கிறது, நம்ப முடிகிறதா...? இது அதிசயம் இல்லையா?!!"

அவர்களின் சந்திப்பைத் தொடர்ந்து, DJ Alok, லட்சக்கணக்கான Followers கொண்ட தனது சோசியல் மீடியாவில் சத்குருவைப் பற்றி பகிர்ந்துகொண்டார். "கு" என்றால் இருள் - "ரு" என்றால் நீக்குதல் என்ற பொருள்படும். "குரு" என்பவர் நம்மில் இருக்கும் இருளை நீக்குபவர் ஆவார் என DJ Alok எழுதினார், "உங்களை சந்தித்தது எனக்கு பெரு மகிழ்ச்சி" என நிறைவு செய்தார்.

சத்குருவின் லண்டன் சத்சங்கம்: ஒளிரும் பெருவெள்ளமான வாழ்க்கை

06 ஜூலை 2025, லண்டனில் சில வருடங்களாக எதிர்பார்ப்பு வளர்ந்துகொண்டே இருந்தது. இறுதியாக, "லண்டனில் சத்குருவுடன் சத்சங்கம்" என அறிவித்தவுடன், UK மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நீண்ட காலமாக காத்திருந்த தியான அன்பர்கள், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, மறக்க முடியாத அருள் அனுபவம் அளித்த மாலை நேரத்தில் ஞானம், தியானம், ஆனந்தம் உணர்ந்தார்கள்.

நமக்கு நாமே போட்டிருக்கும் கட்டுக்களில் இருந்து விடுவித்து வெளிவருமாறு சத்குரு கேட்டுக்கொண்டார். அது, தேடுதலில் கூடியிருந்த பலதரப்பட்ட மக்களுக்குள் ஆழமாக எதிரொலித்தது.

இதுவரை நீங்கள் உள்வாங்கி சேகரித்து வைத்திருந்த அனைத்தும், உங்கள் புரிதல் அனைத்தும், உங்கள் உணர்தலின் வெளிப்பாடே. நீங்கள் உண்மை என்று எண்ணும் அனைத்தும், வாழ்க்கையின் குறிப்பிட்ட பரிமாணத்திற்குள் அடங்கும்.

இதை உடைத்து வெளி வந்தால், 'எல்லாமும் கொஞ்சம் தலைகீழாக', அல்லது, உங்கள் கற்பனையிலும் எட்டாத 'வேறுவிதமாக' இருக்கும். இது உங்கள் தர்க்க அறிவுக்குள் பொருந்தாது. அது பரவாயில்லையா?  உங்களைச் சுற்றி போட்டுள்ள வட்டத்திலிருந்து உங்களை விடுவிக்க நான் உதவுகிறேன். அப்போது வாழ்க்கை ஒளிமயமானதாக இருக்கும், சின்ன நிகழ்வாக இருக்காது, மகத்தான விஷயங்கள் வெள்ளமாக பெருகும்.

மாலை நிகழ்ச்சி உடனடியாக தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு பங்கேற்பாளர், "சத்குருவை நேரில் பார்த்தது எனது பாக்கியம்" என்றார். மற்றொருவர், "இங்கு நேரில் வந்திருப்பதும் அற்புத நிகழ்வாகும்" என்று பகிர்ந்தார், மேலும் ஒருவர், சத்குரு பற்றிய அவரது உணர்வை, "நீங்கள் நிச்சயமாக ஒரு பெரு வெளிச்சம்" என்பதாக சொன்னார்.

ஈஷாவில் நடைபெற்றவை - இன்னும் சில:

பழங்குடி மக்கள் மேம்பாட்டுத் துறையின் மத்திய அமைச்சர் ஈஷா யோக மையத்திற்கு வருகை தந்தார்.

ஜூலை 05 அன்று, திரு ஜூயல் ஓரம், பழங்குடி மக்கள் மேம்பாட்டுத் துறை அமைச்சரை ஈஷா யோக மையம் வரவேற்றது.

தியானலிங்கம், தேவி, ஆதியோகி ஆலயம் ஆகிய தலங்களை தரிசித்த பின் மத்திய அமைச்சர், அருகில் இருக்கும் "Isha Outreach" மூலம் ஈஷா துணை நிற்கும் பழங்குடியினர் கிராமத்திற்கு வருகை தந்தார். அங்கே, குறிப்பாக, பழங்குடி சமூக தொழில்முனைவோரின், அதிலும் முக்கியமாக, பெண்கள் - சாதாரண நிலையிலிருந்து செழிப்பான வளர்ச்சி பெற்ற தொழில்முனைவோராக உருவெடுத்த பயணத்தை நேரிலேயே கண்டார்.

ஆதியோகி அருகில் இருக்கும் கடைகளில் ₹200/- ல் ஆரம்பிக்கப்பட்டு, இன்று வருவாய் ₹1 கோடியை தாண்டி சாதித்த பழங்குடி பெண்களின் முனைப்பு அமைச்சரை வெகுவாக ஈர்த்தன. பழங்குடி சமூக மக்களுக்கு திறமை ஊட்டி, அவர்களை வருமான வரி கட்டும் தொழில்முனைவோராக சாதிக்க வைக்க ஈஷா எடுத்த முயற்சிகளை அவர் வெகுவாக பாராட்டினார்.

மேலும், இம்மாதிரியான முன்னெடுப்புகள், மத்திய அரசின் "முன்னேறிய பாரதம்" என்ற தொலைநோக்கு பார்வையுடன் சிறப்பாக ஒத்துப்போகும் ஒன்றாக உள்ளது என்றார். இதுபோன்ற முன்னெடுப்புகள் பாரதமெங்கும் பரவ வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.