பிற மொழிகளில் வாசிக்க:
‍English | Hindi

வெறும் கூடு

வெறுமையான ஒரு கூடாக அமருங்கள்
உள்மூச்சை அனுமதிக்கும்
வெற்றுக் கூடாக அமருங்கள்
உள்நுழையும் சுவாசம் அது
படைப்பின் உயிராக்கும் மணம் கொண்டு
உள்ளகங்களை சுத்திகரிக்கும்
உம் கழிவுகளை களிக்கும் வேற்றுயிரை
ஊக்கி வளர்க்கும் உள்ளிருப்புகள் மறைய
உள்ளகங்களை துடைத்தெடுக்கும்

இந்த வெறுமையில்தான்
உமக்கான சாத்தியங்கள்
எல்லாம் உள்ளன
‍
மீட்டப்படாத இசையின்
மாயத்தில் அதிரட்டும்
இந்த வெற்றுக் கூடு.

Share This