நடப்புகள்

டொராண்டோவில் சத்குருவுடன் உள்நிலை மாற்றத்தை ஏற்படுத்தும் அனுபவம்

24 மே 2025

இந்நிகழ்ச்சியின் மூலம், முதன்முறையாக வட அமெரிக்காவிற்கு “Ecstasy of Enlightenment” நிகழ்ச்சியை சத்குரு அறிமுகப்படுத்தியுள்ளார். மெட்ரோ டொராண்டோ கன்வென்ஷன் சென்டர் உள்நிலை அறிவதலுக்கான ஓர் இடமாக மாறியது.

இது மற்றுமொரு தியான நிகழ்ச்சி மட்டுமல்ல, உயிருள்ள ஒரு குருவின் முன்னிலையில் வாழ்க்கையின் சாரத்தை அதன் முழு பிரம்மாண்டத்தில் வெளிப்படுத்தும் பரவசத்தின் நிலையை அறிந்திட ஓர் அரிய வாய்ப்பாகும்.

“துன்பத்திற்கும் பரவசத்திற்கும் இடையிலான வித்தியாசம் என்னவென்றால், நீங்கள் விருப்பமின்றி ஏதாவது செய்தால், அது ஒரு துயரமான செயல்முறையாக மாறும். நீங்கள் அதையே விருப்பத்துடன் செய்தால், அது ஒரு பரவச செயல்முறையாக மாறும்,” என்று சத்குரு தனது தனிச்சிறப்புடைய தெளிவுடன் மனித அனுபவத்தின் அடிப்படை பற்றி பேசத் தொடங்கினார்.

ஞானம் மற்றும் உள்நிலை அனுபவத்தின் ஒரு கலவையாக அந்த நாள் அமைந்தது. "உங்களுக்கும் பரவச நிலைக்கும் இடையிலான ஒரே தடை நீங்கள் தான்" என்பதை பங்கேற்பாளர்களுக்கு சத்குரு எடுத்துக்கூறினார்.

வாழ்க்கையில் விருப்பத்துடன் பங்கேற்பதன் மூலம் மாற்றம் எவ்வாறு தொடங்குகிறது என்பதை உணர்ந்திட, பங்கேற்பாளர்களை சக்திவாய்ந்த செயல்முறைகள் மூலம் சத்குரு வழிநடத்தினார். சுவாசம் போன்ற எளிமையான விஷயத்தை கூட உணர்வுபூர்வமாகச் செய்யும்போது "முழுமையான பேரின்பம்" ஆகிறது.

சத்குருவின் இருப்பு மற்றும் கருணை மூலம், நிகழ்வில் பங்கேற்ற ஆன்மீகச் சாதகர்கள் புதியதொரு நிலையிலான தீவிரத்திலும் பரவசத்திலும் திளைத்தனர்.

மனித அனுபவம் மற்றும் உள்நிலை மாற்றத்திற்கான பாதை பற்றிய அடிப்படை கேள்விகளுக்கு பதிலளித்த சத்குரு, புறநிலையிலான விஷயங்களை அடைவதற்கும், நாம் உண்மையில் விரும்பும் ஒன்றாக நாமே மாறுவதற்கும் உள்ள வேறுபாட்டைக் கூறினார். "நீங்கள் விரும்புவது போல் மாறினால், நீங்கள் என்ன பெறுகிறீர்கள் என்பது ஒரு பொருட்டாக இருக்காது," என்று அவர் வலியுறுத்தினார். உள்நிலை மாற்றம் எவ்வாறு பொருள் சார்ந்த தேடல்களுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது என்பதை அவர் எடுத்துக்காட்டினார்.

தொழில்நுட்பம் முன்னேறி வரும் இந்தக் காலகட்டத்தில், மனிதகுலத்தின் தனித்துவமான அனுபவத்திறன் என்பது மையக்கருவாக நிகழ்வில் பேசப்பட்டது. "நீங்கள் எந்த வகையான இயந்திரத்தை உருவாக்கினாலும், அவைகளால் எதையும் அனுபவிக்க முடியாது. அனுபவம் மனித இனத்திற்கு மட்டுமே உரித்தானது," என்று சத்குரு குறிப்பிட்டார். இயந்திரங்கள் மற்ற துறைகளில் நம்மை விட அதிகமாக சிறப்பாகச் செய்தாலும், மனிதனுக்கே உரிய தனிச்சிறப்பை அவர் சுட்டிக்காட்டினார்.

பங்கேற்பாளர்கள் ஒரு சக்திவாய்ந்த தியான செயல்முறையில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து பங்கேற்பாளர்கள் விருப்பப்படி நடனமாடும் ஒரு செயல்முறையை இந்த வழிகாட்டுதலுடன் சத்குரு வழங்கினார்: "இசை இல்லை, மது இல்லை, சத்குருவும் இல்லை, ஆனால் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் நடனமாட வேண்டும்."

மனநலப் பிரச்சனைகளைப் பற்றி பேசும்போது இளைஞர்களிடையே நிலவும் தங்களைத் தாங்களே தீங்குவிளைவித்தல் மற்றும் மனச்சோர்வு குறித்த புள்ளிவிவரங்களைப் பகிர்ந்துகொண்டார். நமது உளவியல் நல்வாழ்விற்குப் பொறுப்பேற்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். "நீங்கள் இந்த அளவு உறுதியெடுக்க வேண்டும்; நீங்கள் நலம்பெற்ற பிறகு, அதை நீங்கள் பத்து பேருக்கு கொடுக்க முடியுமா என்று பார்க்க வேண்டும்."

நிகழ்ச்சி கேள்வி பதில் பகுதியுடன் நிறைவடைந்தது, இதில் பங்கேற்பாளர்கள் ஆன்மீகப் பயிற்சி செய்யும்போது எதிர்கொள்ளும் சவால்கள், பிரதிஷ்டை செயல்முறை மற்றும் உள்நிலை மாற்றம் பற்றி கேள்விகளைக் கேட்டனர்.

நிகழ்ச்சியின் முடிவில், டொராண்டோவின் தியான அன்பர்கள், பரவசம் என்பது தொலைதூர இலக்கு அல்ல, விருப்பத்துடன் இருந்தால் ஒவ்வொரு தருணத்திலும் கிடைக்கும் நிதர்சனம் என்ற புதியதொரு அனுபவப் புரிதலுடன் வெளியேறினர்.

பங்கேற்பாளர்கள் பகிர்ந்துகொண்டவை இங்கே:

"நான் இன்னும்கூட பரவசத்தில் திளைத்துக்கொண்டிருக்கிறேன்; உண்மையைச் சொன்னால், இந்த நிகழ்ச்சியின் மூலம் நான் பெற்ற அனுபவித்தை விவரிக்க வார்த்தைகள் போதாது. ஆற்றல், அமைதி, உள்நிலை ஆனந்தத்தின் ஆழ்ந்த உணர்வு - நிகழ்ச்சி முடிந்த பல நாட்களுக்குப் பிறகும் அது எனக்குள் உயிருடன் இருக்கிறது."

"Ecstasy of Enlightenment ல் சத்குருவுடன் அமர்ந்திருப்பது, சில மணி நேரங்களிலேயே வாழ்நாள் முழுவதிற்குமான சிகிச்சையைப் பெற்றது போல இருந்தது. ஒருவர் திறந்த மனதுடன் தனக்குள் பார்த்து முழுமையாக ஈடுபட்டால், உள்நிலை மாற்றம் நிகழும்."

"ஒரு உண்மையான குரு உங்களுக்கு ஒளியைத் தருவதில்லை - அவர் உங்களுக்குள் சுய ஒளியைத் தூண்டிவிடுகிறார்."

"அது தூய பரவசம் - எந்தவிதமான வெளிப்புற மருந்தும் உட்கொள்ளாமல், தியானத்தில் பேரின்பம்!"

"இது மிகவும் தீவிரமான மற்றும் உள்நிலையில் மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு நாள். இந்த சிறப்புவாய்ந்த சக்தியின் முன்னிலையில் இருக்கும் அனுபவத்தை அனைவரும் பெறவேண்டும். நாம் வாழும் காலத்தில் அவரைப் பெற்றிருப்பது நம்முடைய அதிர்ஷ்டம்."

“தன்னார்வத் தொண்டு செய்ததன் மூலம் இந்த நிகழ்வில் பங்கேற்றது உண்மையிலேயே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது! நான் உண்மையில் யார் என்பதை உணரவும், என்னை நானே உணரவும் வைத்ததற்கு சத்குருவிற்கு நன்றி.”

“இதுவரை இல்லாத சிறந்த நாள் இது! சத்குருவுடனும், அனைத்து மக்களுடனும், அற்புதமான தன்னார்வலர்களுடனும் என்ன ஒரு அற்புதமான நாள்! என் வாழ்க்கை முழுவதுமாக மாறிவிட்டது. என் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி!”

“இந்த அற்புதமான நிகழ்வை ஏற்பாடு செய்த அனைத்து தன்னார்வலர்களுக்கும் மிகப்பெரிய நன்றி. இது ஒரு அற்புதமான நாள்!”

வரவிருக்கும் Soak in Ecstasy of Enlightenment நிகழ்ச்சிகள்:

சான் பிரான்சிஸ்கோ: நவம்பர் 2, 2025
பிலடெல்பியா: நவம்பர் 15, 2025
லண்டன்: நவம்பர் 23, 2025
மும்பை: டிசம்பர் 14, 2025
ஹைதராபாத்: ஜனவரி 4, 2026

மேலும் விவரங்களுக்கு: sadhguru.co/eoe